"உயிரே.. உயிரே.. தப்பிச்சு எப்படியாவது ஓடிவிடு" வடிவேலுவாக மாறிய ரோஹித் சர்மா.. தெறிக்கும் மீம்ஸ்!

Subscribe to Oneindia Tamil

துபாய்: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் 44 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இந்த போட்டியில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களை வைத்து சோசியல் மீடியாவில் ரசிகர்கள் உருவாக்கிய தரமான மீம்ஸை பார்க்கலாம்.

memes champions trophy 2025 India vs new Zealand 2025 vs

"அது இது எது" நிகழ்ச்சியில் வரும் ராமர் ஒரு எபிசோடில் திடீரென டென்ஷனாகி, "தங்கதுரை எல்லாம் ஓரளவுக்கு தான்" என்று வார்னிங் கொடுப்பார். இதில் வரும் ராமரை ரோஹித் சர்மா ரசிகர்களாக மாற்றி, ரோஹித் சர்மா 17 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறிய பின், "ரோஹித்து.. எல்லாம் ஓரளவுக்கு தான்" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் ஜாலியோ ஜிம்கானா ரகம்.

memes champions trophy 2025 India vs new Zealand 2025 vs

நண்பன் படத்தில் வரும் சத்யன், "இப்போ நமக்கு எல்லாம் தேஜாவு" என்பார். 2015ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரின் முதல் அரையிறுதி சுற்றில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளும், 2வது அரையிறுதியில் தென்னாப்பிரிக்கா - நியூசிலாந்து அணிகளும் விளையாடின. தற்போது 10 ஆண்டுகளுக்கு பின் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் மீண்டும் இதே அணிகள் அப்படியே அரையிறுதியில் மோதுகின்றன. இதனால் கிரிக்கெட் ரசிகர்களை சத்யனாக மாற்றி, "இப்போ நமக்கு எல்லாம் தேஜாவு" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் அட்ராசிட்டி ரகம்.

memes champions trophy 2025 India vs new Zealand 2025 vs

சார்பட்டா பரம்பரை படத்தில் ஆர்யா வேம்புலியை பார்த்து, "என்னங்கடா ஆள் ஆளுக்கு என் வாத்தியாரை பல்லு புடிச்சு பார்க்குறீங்களா.. ஏய்.. வேம்புலி.. உன்ன நான் தூக்குறேன்டா" என்பார். அதனை அப்படியே ஆர்யாவாக சுப்மன் கில்லை, ரங்கன் வாத்தியாராக பசுபதியையும், வேம்புலியாக டிராவிஸ் ஹெட்டையும் மாற்றி, "ஏய்.. வேம்புலி.. உன்னை நான் தூக்குறேன்டா" என்று உருவாக்கப்பட்டுள்ள மீம் இதுதான்டா கிரிக்கெட் ரகம்.

memes champions trophy 2025 India vs new Zealand 2025 vs

" வெற்றிக் கொடிகட்டு" படத்தில் பார்த்திபனை பார்த்து பயம் கொள்ளும் வடிவேலு, உடனடியாக ஒரு படுதாவை அணிந்து, "உயிரே.. உயிரே.. தப்பிச்சு எப்படியாவது ஓடிவிடு" என்று பாடல் பாடிக் கொண்டே நடந்து செல்வார். இதில் வரும் பார்த்திபனை டிராவிஸ் ஹெட்டாகவும், வடிவேலுவை ரோஹித் சர்மாவாகவும் மாற்றி, "உயிரே.. உயிரே.. தப்பிச்சு எப்படியாவது ஓடிவிடு" என்று உருவாக்கப்பட்டுள்ள மீம் எப்படியாச்சும் காப்பாத்திருங்கடா ரகம்.

memes champions trophy 2025 India vs new Zealand 2025 vs

அயன் படத்தில் பிரபு, "பணம்லாம் எனக்கு ஜுஜுபி மேட்டரு" என்று பேசுவார். இதில் வரும் பிரபுவை அப்படியே கேன் வில்லியம்சனாக மாற்றி, ஜடேஜாவுக்கு பிடித்த கேட்சை, "ஃபீல்டிங்லாம் எனக்கு ஜுஜுபி மேட்டரு" என்று உருவாக்கப்பட்டுள்ள மீம் இதெல்லாம் சப்ப மேட்டரு ரகம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+