வருண் சக்கரவர்த்தி செய்த தவறு.. முகத்தை மூடி டென்ஷனான விராட் கோலி, ஹர்திக் பாண்டியா.. நடந்தது என்ன?
துபாய்: நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியின் போது தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தியின் செயலால் சீனியர் வீரர்களான விராட் கோலி, ஹர்திக் பாண்டியா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய மூவரும் முகத்தை மறைத்து டென்ஷனான சம்பவம் நடந்தது ரசிகர்களிடையே பேசு பொருளாகி இருக்கிறது.
நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இந்திய அணி தரப்பில் 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 249 ரன்கள் சேர்க்கப்பட்டது. இதன்பின் எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணி 45.3 ஓவர்களில் 205 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. இதனால் புள்ளிப்பட்டியலிலும் 6 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து இந்திய அணி அசத்தியது.

இந்த வெற்றியின் காரணமாக இந்திய அணி அரையிறுதி சுற்றில் ஆஸ்திரேலியா அணியை எதிர்த்து விளையாடவுள்ளது. அதேபோல் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 4 ஸ்பின்னர்களுடன் களமிறங்கிய இந்திய அணிக்கு சிறந்த பலன் கிடைத்தது. அதேபோல் தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி 10 ஓவர்களில் 42 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
இதனால் தமிழக ரசிகர்கள் வருண் சக்கரவர்த்தியை பாராட்டி வருகின்றனர். இதனிடையே இந்திய அணி பவுலிங்கின் போது, வருண் சக்கரவர்த்தி செய்த செயல் சக வீரர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா 4வது ஓவரை வீசிய போது, ஒரு பந்தின் வேகத்தை குறைத்து பவுலிங் செய்தார்.

இதனை கணிக்க தவறிய நியூசிலாந்து தொடக்க வீரர் வில் யங், பேட்டை வேகமாக வீசி ஷாட்டை ஆடினார். இதன் காரணமாக பந்து நேராக மிட் ஆன் திசையை நோக்கி உயர பறந்தது. இதனால் விக்கெட் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட போது, வருண் சக்கரவர்த்தியால் அந்த கேட்சை பிடிக்க முடியவில்லை. அவரின் விரலில் மட்டும் பந்து பட்டு சென்றது.
ஆனால் இதன்பின் நடந்த சம்பவம்தான் சக வீரர்களிடையே டென்ஷனை ஏற்படுத்தியது. கீழே விழுந்த பந்து மீண்டும் ஒன் பிட்சில் எழும்பிய போது, வருண் சக்கரவர்த்தி தெரியாமல் தனது கால்களால் உதைத்துவிட்டார். இதனால் அந்த பந்து நேராக பவுண்டரி லைனை எட்டியது. இதனால் விராட் கோலி, ஹர்திக் பாண்டியா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய மூவரும் முகத்தை மூடி அதிருப்தியை வெளிப்படுத்தினர். இதனால் வருண் சக்கரவர்த்தி ஃபீல்டிங்கில் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்ற அறிவுரைகளும் வரத் தொடங்கியுள்ளன.

-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications