சஞ்சு சாம்சனால் குழப்பம்தான்.. ஓரமாக உட்கார வைத்த கம்பீர்.. இனி யாரும் ஒன்னும் செய்ய முடியாது!
கட்டாக்: தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றியை பெற்றுள்ள நிலையில், இனி இந்திய அணியின் பிளேயிங் லெவனில் சஞ்சு சாம்சன் இடம்பெறுவதற்கு வாய்ப்பே இல்லை என்று கணிக்கப்படுகிறது. அதற்கான காரணத்தை இந்த செய்தியில் பார்க்கலாம்.
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 101 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றியை பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 175 ரன்களை குவித்தது. அதிரடியாக ஆடிய ஹர்திக் பாண்டியா 28 பந்துகளில் 4 சிக்ஸ், 6 பவுண்டரி உட்பட 59 ரன்களை குவித்தார்.

இதன்பின் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 12.3 ஓவர்களில் 74 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது. இந்திய அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங், பும்ரா, வருண் சக்கரவர்த்தி, அக்சர் படேல் தலா 2 விக்கெட்டுகளையும், ஹர்திக் மற்றும் சிவம் துபே தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். இந்தப் போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் வரிசை நம்பர் 8 வரை இருந்தது.
அதேபோல் 3 பவுலர்கள் மற்றும் 3 ஆல்ரவுண்டர்கள் இடம்பெற்றனர். டி20 கிரிக்கெட்டுக்கு இது சரியாக அணியாக கட்டமைக்கப்பட்டுள்ளது. டி20 உலகக்கோப்பை தொடருக்கு இன்னும் 2 மாதங்கள் மட்டுமே இருக்கும் சூழலில், இந்திய அணி பெரிதாக எந்த ரிஸ்கையும் எடுக்க விரும்பவில்லை. சஞ்சு சாம்சன் இடத்தில் சுப்மன் கில் விளையாடுவார் என்பது உறுதியாகிவிட்டது.
அதேபோல் சஞ்சு சாம்சனை மிடில் ஆர்டரில் களமிறக்கி கம்பீர் எந்த பரிசோதனை முயற்சியையும் எடுக்க விரும்பவில்லை. அதனால் விக்கெட் கீப்பராக மிடில் ஆர்டர் வரிசையில் ஆடக் கூடிய ஜித்தேஷ் சர்மாவை பேட்டிங் வரிசைக்குள் கொண்டு வந்தது சரியான முடிவாகவே பார்க்கப்படுகிறது. அதேபோல் டி20 கிரிக்கெட்டில் குல்தீப் யாதவ் வெளியில் அமர வைக்கப்பட்டிருக்கிறார்.
அதற்கு வருண் சக்கரவர்த்தியின் எழுச்சியே காரணமாக அமைந்துள்ளது. இன்றைய ஆட்டத்தில் திலக் வர்மா 32 பந்துகளில் 26 ரன்கள் எடுத்ததே ஒரேயொரு குறை. அவர் அதிரடியாக விளையாடக் கூடியவர் என்றாலும், முதல் பேட்டிங் ஆடும் போது அடிக்கடி இப்படியான இன்னிங்ஸை ஆடுவது மட்டுமே சிக்கலாக பார்க்கப்படுகிறது. அந்தப் பிரச்சனையை களைவதற்கான வழியை இந்திய அணி ஆராய வேண்டும்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications