ஈகோவை தொட்ட கம்பீர்.. இனி விராட் கோலியை யாராலும் கட்டுப்படுத்த முடியாது.. 2027 உலகக்கோப்பைக்கு தயார்
மும்பை: இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி அடுத்தடுத்து 2 சதங்களை விளாசி அசத்தி இருக்கிறார். இதற்கு கம்பீரின் செயல்பாடுகளே மறைமுக காரணமாக பார்க்கப்படுகிறது. விராட் கோலியை யாராவது சீண்டிவிட்டால், அந்த ஆட்டத்தில் வெல்லும் வரை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. இதனால் ஓய்வுக்கு வலியுறுத்தி கம்பீர் தற்போது கோலியின் ஈகோவை தொட்டுவிட்டதாக பார்க்கப்படுகிறது.
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ஆனாலும் இந்திய அணி ரசிகர்கள் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் விராட் கோலி ஆகியோர் சதம் விளாசியதால் உற்சாகமாகவே இருக்கின்றனர். ஏனென்றால் கவுதம் கம்பீர் எடுத்து வரும் மோசமான முடிவுகளால் இந்திய அணி தோல்வியை சந்தித்து வருகிறது.

இதனால் இந்திய அணி ரசிகர்கள் கம்பீரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று குரல் கொடுக்க தொடங்கியுள்ளனர். அதேபோல் இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் அடுத்தடுத்து 2 சதங்களை விளாசி இருக்கிறார். விராட் கோலி மீண்டும் உச்சக்கட்ட ஃபார்முக்கு வருவதற்கு கம்பீர் தேவையில்லாத செயல்பாடுகளே காரணமாக பார்க்கப்படுகிறது.
இந்திய அணியின் சீனியர் வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துவிட்டனர். ஒருநாள் கிரிக்கெட்டில் இருவரும் கவனம் செலுத்தி வரும் சூழலில், 2027 உலகக்கோப்பையில் விளையாட வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கின்றனர். அதற்காக ஃபிட்னஸிலும் கவனம் செலுத்தி வருகின்றனர்.
ஆனால் கம்பீர் அவர்களின் இடத்தில் இளம் வீரர்களை கொண்டு வர முயன்று வருகிறார். இதனால் தென்னாப்பிரிக்கா ஒருநாள் தொடருக்கு பின் கம்பீர் மற்றும் ரோகித் சர்மா ஆகியோரின் திட்டம் என்ன என்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்த பிசிசிஐ முடிவு செய்திருந்தது. அதேபோல் இந்திய அணியின் பயிற்சியாளர் கம்பீர் மற்றும் ரோகித், கோலி ஆகியோர் இடையில் எந்தவித பேச்சுவார்த்தையும் இல்லை என்று சொல்லப்படுகிறது.
இதனிடையே ராஞ்சி விமான நிலையத்தில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோருடன் தேர்வுக் குழு உறுப்பினரான பிரக்யான் ஓஜா பேச்சுவார்த்தை நடத்தினார். அவருடன் மிகவும் ஆவேசமான விராட் கோலி பேசிய வீடியோக்கள் டிரெண்டாகியது. இதனால் ஓய்வு தொடர்பாக பேசி விராட் கோலியின் ஈகோவை கம்பீர் தூண்டிவிட்டிருக்கலாம் என்று சில தகவல் வெளியாகி இருக்கிறது.
இதன் காரணமாக விராட் கோலி தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி ரன்களை விளாசி வருவதாகவும், சதத்திற்கு பின் ஆவேசமாக கொண்டாடுவதாகவும் கூறப்படுகிறது. இந்திய அணிக்குள் நிலவி வரும் பனிப்போர் இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு நீடிக்கும் என்பதே ரசிகர்களின் கேள்வியாக உள்ளது.












Click it and Unblock the Notifications