தம்பி உனக்கு ஒரு அதிர்ச்சி.. 1 ஓவரில் 3 விக்கெட்டை கொடுத்த இந்தியா.. மும்பையை சைலண்ட் செய்த USA!
மும்பை: அமெரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 46 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. அமெரிக்கா வீரர் வான் வீசிய 6வது ஓவரில் இந்திய அணியின் இஷான் கிஷன், திலக் வர்மா மற்றும் சிவம் துபே ஆகியோர் விக்கெட்டை பறிகொடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
2026 ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடர் இன்று தொடங்கி இருக்கிறது. முதல் நாளான இன்று இந்திய அணியை எதிர்த்து அமெரிக்கா அணி விளையாடி வருகிறது. மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற அமெரிக்கா கேப்டன் மோனாங்க் படேல் பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் இந்திய அணி தரப்பில் இஷான் கிஷன் - அபிஷேக் சர்மா கூட்டணி தொடக்கம் கொடுத்தது.

இஷான் கிஷன் சிக்சருடன் இந்திய அணியின் ஸ்கோரை தொடங்கினார். ஆனால் அலி கான் வீசிய 2வது ஓவரிலேயே அபிஷேக் சர்மா டக் அவுட்டாகி வெளியேறினார். தொடர்ந்து வந்த திலக் வர்மா அதிரடியாக ரன்களை சேர்க்க, இஷான் கிஷன் ஆக்ரோஷமாக விளையாட முடியாமல் தடுமாறினார். ஒரு கட்டத்தில் இஷான் கிஷன் 2 கேட்ச்களை கொடுக்க, அதனை அமெரிக்கா ஃபீல்டர்கள் தவறவிட்டனர்.
5 ஓவர்களில் இந்திய அணி 44 ரன்களை சேர்த்திருந்த நிலையில், பவர் பிளேவின் கடைசி ஓவரை வீச வான் வந்தார். அந்த ஓவரின் 2வது பந்தை கொஞ்சம் ஸ்லோவாக வீச, நேராக மிட் ஆஃப் ஃபீல்டர் மிலிந்த் குமார் கைகளில் கேட்ச்சானது. இதனால் இஷான் கிஷன் 20 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
தொடர்ந்து 5வது பந்தில் திலக் வர்மா அட்டாக் செய்ய முயன்று 25 ரன்களில் வெளியேற, சிவம் துபே ஸ்லோயர் பந்தில் டக் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். இதனால் இந்திய அணி பவர் பிளே ஓவர்கள் முடிவில் 46 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதுமட்டுமல்லாமல் அமெரிக்கா அணியின் வான் ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகளை சாய்த்துவிட்டார்.
இதனால் மும்பை வான்கடே மைதான ரசிகர்கள் ஒட்டுமொத்தமாக சைலண்ட் மோடுக்கு சென்றனர். அமெரிக்கா போன்ற 2ஆம் தர அணியிடம் இந்திய அணி இப்படி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கவில்லை. ஆனால் கடந்த டி20 உலகக்கோப்பையை ஒப்பிடும் போது, இந்த அணி நல்ல அனுபவத்துடன் களமிறங்கி இருக்கிறது.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி












Click it and Unblock the Notifications