ஆபத்து.. சிராஜ் அடுத்தடுத்து விக்கெட் எடுத்த நேரத்தில்.. பிட்னஸ் டிரெய்னர் அனுப்பிய வார்னிங்.. ஏன்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நேற்று இலங்கைக்கு எதிரான ஆசிய கோப்பை பைனல்ஸ் போட்டியில் முகமது சிராஜ் அடுத்தடுத்து விக்கெட் எடுத்த நேரத்தில் இந்திய அணியின் பிட்னஸ் டிரெய்னர் முக்கியமான மெசேஜ் ஒன்றை அவருக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது.

இலங்கைக்கு எதிரான ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி வென்றுள்ளது. நேற்று முதலில் பேட்டிங் இறங்கி வெறும் 50 ரன்கள் எடுத்து இலங்கை அணி ஆல் அவுட் ஆகியது.

India vs Srilanka final: Huge warning from fitness trainer to Siraj during the final of the Asia Cup

இலங்கைக்கு எதிரான நேற்றைய போட்டியில் வாஷிங்க்டன் சுந்தர் அணியில் சேர்க்கப்பட்டு இருந்தார். ரோஹித் சர்மா(கேட்ச்), சுப்மன் கில், விராட் கோலி, கே.எல்.ராகுல்(வ), இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ் ஆகியோர் இன்று இந்திய அணியில் ஆடினார்கள்.

விக்கெட்: இதில் தொடக்கத்தில் இருந்தே இலங்கை அணி விக்கெட்டுகளை இழந்து வருகிறது. டாஸ் வென்று பேட்டிங் தொடங்கிய இலங்கை அணி 12 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்துள்ளது. இதில் சிராஜ் மட்டும் 6 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.முதல் ஓவரிலேயே குஷல் பெரேரா விக்கெட்டை பும்ரா எடுத்தார்.

அதன்பின் 4வது ஓவரில் 1 பந்தில் ஒரு விக்கெட், 3 மற்றும் 4வது பந்தில் தலா ஒரு விக்கெட், கடைசி பந்தில் ஒரு விக்கெட் என்று சிராஜ் 4 விக்கெட்டுகளை எடுத்தார். அதன்பின் 6வது ஓவரில் மீண்டும் சிராஜ் ஒரு விக்கெட் எடுத்தார்.

அதன்பின் அடுத்து மீண்டும் போட்ட ஓவரில் கூடுதலாக ஒரு விக்கெட் எடுத்தார். இன்னொரு பக்கம் தான் வீசிய கடைசி 13 மற்றும் 16வது ஓவரில் தலா 1 மற்றும் 2விக்கெட்களை பாண்டியா எடுத்தார். இதன் மூலம் இலங்கை அணி 50க்கு ஆல் அவுட் ஆனது.

சர்வதேச அணி இந்தியாவிற்கு எதிராக ஒருநாள் போட்டியில் எடுத்த மிக குறைந்த ஸ்கோர் ஆகும் இது.

50 ரன்கள் இலங்கை கொழும்பு இன்று புதிய ரெக்கார்ட்.
58 ரன்கள் - வங்கதேசம் - 2014
65 ரன்கள் -ஜிம்பாபே - 2005
73 ரன்கள் - இலங்கை - 2023

1990 இல் ஷார்ஜாவில் இலங்கைக்கு எதிராக வக்கார் யூனிஸின் 6/26 என்ற ரெக்கார்டை சிராஜின் 6/21 ரெக்கார்ட் இன்று முறியடித்துள்ளது. இதையடுத்து இந்திய அணியில் களமிறங்கிய கில், இஷான் கிஷன் இருவரும் விக்கெட் இழப்பின்றி 50 ரன்களை எளிதாக அடித்து இந்திய அணியை வெற்றிபெற வைத்தனர்.

India vs Srilanka final: Huge warning from fitness trainer to Siraj during the final of the Asia Cup

டிரெண்ட்: நேற்று இலங்கைக்கு எதிரான ஆசிய கோப்பை பைனல்ஸ் போட்டியில் முகமது சிராஜ் அடுத்தடுத்து விக்கெட் எடுத்த நேரத்தில் இந்திய அணியின் பிட்னஸ் டிரெய்னர் முக்கியமான மெசேஜ் ஒன்றை அவருக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது.

அதன்படி அவர் வேகமாக ஓடுகிறார், கண்ட்ரோல் இல்லாமல் இருக்கிறார். அவர் விக்கெட் எடுத்தவரை போதும்.. ஒரே பவர் பிளேவில் கிட்டத்தட்ட 7 ஓவர் வீசிவிட்டார். அவருக்கு இதனால் காயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இடையில் பவுண்டரியை தடுக்க ஒருமுறை ஓடி இருக்கிறார்.

இதனால் அவர் கண்ட்ரோல் இழந்தது அவரின் 7வது ஓவரிலேயே தெரிந்தது. 7வது அவரின் ஓட்டத்திலேயே கண்ட்ரோல் இல்லை. இதை பிட்னஸ் டிரெய்னர் நேற்று சுட்டிக்காட்டி, அதற்கு மேல் அவர் ஓவர் வீச கூடாது மீறி வீசினால் காயம் ஏற்படும் ஆபத்து உள்ளது என்று கூறி உள்ளனர். இதையடுத்தே ரோஹித் சர்மா அவருக்கு ஓவர் கொடுக்காமல் ஓய்வு கொடுத்து உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+