மீண்டும் மலர்ந்த காதல்? லண்டனில் சாரா டெண்டுல்கரை சந்தித்த சுப்மன் கில்.. ஆதாரமாக வெளியான புகைப்படம்
லண்டன்: இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் மற்றும் சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா டெண்டுல்கர் இருவரும் சந்தித்துள்ள சம்பவம் விவாதமாகி இருக்கிறது. லண்டனில் யுவராஜ் சிங் நடத்திய யுவிகான் ஃபவுண்டடேஷன் நிகழ்ச்சியில் இருவரும் நேரில் பார்த்து சிரிக்கும் புகைப்படம் சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது.
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா டெண்டுல்கர் மருத்துவப் படிப்பை முடித்துவிட்டு மாடலிங் துறையில் கவனம் செலுத்தி வருகிறார். சச்சின் டெண்டுல்கரின் தொண்டு நிறுவன பணிகளை மேற்கொண்டு வரும் இவருக்கு சோசியல் மீடியாவில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. இவரும் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்லும் காதலித்து வருவதாக கடந்த சில ஆண்டுகளாகவே பேசப்பட்டு வருகிறது.

சுப்மன் கில் - சாரா
ஐபிஎல் தொடரில் சுப்மன் கில் கேப்டனாவதற்கு முன்பாகவே இந்த விவாதங்கள் நடந்து வருகின்றனர். அதேபோல் சுப்மன் கில் விளையாடும் போட்டிகளுக்கு சாரா டெண்டுல்கர் சரியாக ஆஜராகி வந்தார். ஜியோ கண்காட்சி நிகழ்ச்சியில் சுப்மன் கில் - சாரா டெண்டுல்கர் இருவரும் இணைந்து பங்கேற்ற வீடியோ மிகப்பெரிய ட்ரெண்டாகியது.
சுப்மன் கில் விளக்கம்
உள்ளூர் தொலைக்காட்சி ஒன்றுக்கு சுப்மன் கில் அளித்த பேட்டியில், சாராவை டேட் செய்து வருவதாகவும் ஒப்புக் கொண்டார். இந்த நிலையில் ஐபிஎல் தொடரின் போது சுப்மன் கில் அளித்த பேட்டியில், 3 ஆண்டுகளுக்கும் மேலாக நான் எந்த ரிலேஷன்ஷிப்பிலும் இல்லை. என்னுடைய கவனம் முழுக்க கிரிக்கெட்டில் மட்டுமே இருந்து வருகிறது என்று விளக்கம் அளித்தார்.
சுப்மன் கில் சகோதரியுடன் நட்பு
ஆனால் சுப்மன் கில் சகோதரி மற்றும் சாரா டெண்டுல்கர் இருவரும் இன்ஸ்டாகிராமில் பின் தொடர்ந்து வருகின்றனர். இருவரும் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் ஒன்றாக சேர்ந்து பங்கேற்று இருக்கின்றனர். ஆனால் சுப்மன் கில்லின் பேச்சுக்கு பின் சாரா டெண்டுல்கருடன் பிரேக் அப் செய்துவிட்டதாக தகவல் கூறப்பட்டது. அதேபோல் சுப்மன் கில் ஆடும் போட்டிகளை பார்க்க சாராவும் மைதானம் வரவில்லை.
லண்டனில் சாரா
இந்த நிலையில் லண்டனில் நேற்று முன்தினம் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் யுவராஜ் சிங் அவரின் தொண்டு நிறுவனம் சார்பாக நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார். அதில் சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, கெவின் பீட்டர்சன், இந்திய அணியின் கேப்டன் சுப்மன் உள்ளிட்ட ஏராளமான வீரர்கள் பங்கேற்றனர். அந்த நிகழ்ச்சியில் சச்சின் டெண்டுல்கருடன் சாராவும் பங்கேற்றார்.
சாராவை சந்தித்த கில்?
அப்போது இருவரும் சந்தித்திருப்பது தெரிய வந்துள்ளது. சாராவை பார்த்து சுப்மன் கில் சிரிக்கும் புகைப்படம் வெளியாகி சோசியல் மீடியாவில் பரவி வருகிறது. இதனால் மீண்டும் இவர்கள் இருவரும் காதலித்து வருவதாக விவாதம் தொடங்கி இருக்கிறது. ஆனால் இருவருமே இதுநாள் வரை தங்களின் காதல் குறித்து உறுதி செய்யவில்லை.












Click it and Unblock the Notifications