சல்லி சல்லியா நொறுங்கிடுச்சே.. சிதறிய ஸ்டம்புகள்.. பதறிய ஸ்டார்க்! டெஸ்ட் சாம்பியனில் அக்சர் சம்பவம்
லண்டன்: ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணியில் மாற்று வீரராக ஃபீல்டிங் செய்ய வந்த அக்சர் பட்டேல் கண்ணிமைக்கும் நொடிக்குள் செய்த சம்பவம் ஆஸ்திரேலிய வீரரை அதிர்ச்சியடைய செய்தது. அப்படி என்ன செய்தார்?
2 வது ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் முதல் 2 இடங்களை பிடித்த இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் இந்த போட்டியில் விளையாடி வருகின்றன.
நேற்று தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்து வீச்சை முதலில் தேர்வு செய்தார். ரோகித் ஷர்மா தலைமையிலான இந்திய அணியில் விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா, அஜிங்கியா ரஹானா, சடேஸ்வர் புஜாரா, முஹம்மது ஷமி, உமேஷ் யாதவ், முஹம்மது சிராஜ், ஷுப்மன் கில், சர்துல் தாக்கூர், ஸ்ரீகர் பரத் ஆகியோர் இந்திய அணியில் ஆடும் 11 வீரர்களாக தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

மைதானத்தின் தன்மை காரணமாக 4 வேகப்பந்து வீச்சாளர்கள் தேவை என்பதால் உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் பந்துவீச்சாளரான அஸ்வின் அணியில் சேர்க்கப்படவில்லை. ஆல்ரவுண்டரான ஜடேஜாவைவே ஸ்பின் ஆப்சனாக வைத்து உள்ளார்கள். அதேபோல் மற்றொரு ஸ்பின் ஆல்ரவுண்டரான அக்சர் பட்டேலும் அணியில் சேர்க்கப்படவில்லை. ஜெயதேவ் உனத்கட்டும் பெஞ்சில் அமர வைக்கப்பட்டு உள்ளார்.
ஆஸ்திரேலிய அணியில் கேப்டன் பேட் கம்மின்ஸ், உஸ்மான் கவாஜா, டேவிட் வார்னர், ஸ்டீவன் ஸ்மித், மிட்சல் ஸ்டார்க், மார்னஸ் லபுஷேன், நேதன் லயன், கேமரான் கிரீன், அலெக்ஸ் கேரி, டிராவிஸ் ஹெட், ஸ்காட் போலாண்ட் ஆகியோர் இடம்பெற்று உள்ளனர்.
போட்டி தொடங்கிய உடனே இந்திய ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் ஆஸ்திரேலியாவின் தொடக்க வீரர் உஸ்மான் கவாஜாவை டக் அவுட் ஆக்கினார் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முஹம்மது சிராஜ். ஆஸ்திரேலியா 2 ரன்களுக்கு 1 விக்கெட் என்ற நிலையில் தடுமாறிக் கொண்டு இருக்க, அடுத்து வந்த லபுஷேனுடன் ஜோடி சேர்ந்தார் டேவிட் வார்னர்.
இருவரும் பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். இந்த நிலையில் மதிய உணவு இடைவெளிக்கு முன் சர்துல் தாக்கூர் பந்துவீச்சில் வார்னர் ஆட்டமிழந்தார். மதிய உணவு இடைவேளை முடிந்து வந்த லபுஷேன் முஹம்மது ஷமி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
அடுத்து ஜோடி சேர்ந்த டிராவிஸ் ஹெட்டும், ஸ்டீவன் ஸ்மித்தும் சிறப்பான பேட்டிங்கை செய்தனர். முதல் நாள் ஆட்டம் முடிந்து இன்று 2 ஆம் நாள் ஆட்டம் தொடங்கிய நிலையில், அடுத்தடுத்து ஸ்டீவன் ஸ்மித்தும், டிராவிஸ் ஹெட்டும் ஆட்டமிழந்தனர். ஸ்மித் 121 ரன் எடுத்த நிலையில் ஷர்துல் தாக்கூர் பந்து வீச்சில் அவுட் ஆனார்.
டிராவிஸ் ஹெட் 163 ரன்கள் குவித்த நிலையில் முஹம்மது சிராஜ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். கேமரான் கிரீன் ஷமி ஓவரில் ஆட்டமிழந்தார். இந்த நிலையில் பேட்டிங் செய்ய வந்த மிட்சல் ஸ்டாக் 20 பந்துகளை எதிர்கொண்டு நிதானமாக ஆடிக்கொண்டிருந்த மிட்சல் ஸ்டார்க், சிராஜ் வீசிய 104 வது ஓவரில் பந்தை தட்டிவிட்டு ஓட முயன்றார். அப்போது மாற்று வீரராக மைதானத்தில் இருந்த அக்சர் படேல், பந்தை பிடித்து கச்சிதமாக ஸ்டம்புக்கு நேரடியாக வீசி அவுட் ஆக்கினார்.
அக்சர் படேலின் இந்த அசத்தலான் ஃபீல்டிங்கை வர்ணனையாளர்களே வாய்விட்டு பாராட்டினார்கள். ஒரே கையில் பந்தை பிடித்து எடுத்த வேகத்தில் ஸ்டம்பை நோக்கி குறி பார்த்து வீசுவது கடினம். ஆனால், அதை சிறப்பாக செய்து ஸ்டம்பை சிதறடித்தார் அக்சர். தற்போது ஆஸ்திரேலியா 8 விக்கெட் இழப்புக்கு 455 ரன்களை எடுத்துள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications