ஐபிஎல் ரிட்டென்சன்.. கோலி அணி மாற போகிறாரா? சிஎஸ்கேவிற்கு போன ஸ்பெஷல் மெசேஜ்.. எல்லாமே மாறுதே
சென்னை: 2024 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி யாரை எல்லாம் விடுவிக்கும்.. யாரை அணியில் எடுக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
2024 ஐபிஎல் ஏலத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. துபாயில் டிசம்பர் 19 ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஐபிஎல் மினி ஏலத்தில் பல அதிரடி மாற்றங்கள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பல வீரர்கள் அணிகளுக்கு இடையே மாற வாய்ப்புகள் உள்ளன. அடுத்த ஆண்டு ஐபிஎல் எப்போது நடைபெறும் என்பது தொடர்பாக அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

இந்த நிலையில் ஐபிஎல் மினி ஏலத்திற்கு முன்பாக வீரர்களை "ரிடென்ஷன்" செய்யும் லிஸ்ட் இன்று வெளியாக உள்ளது. "ரிடென்ஷன்" செய்யப்படும் வீரர்களின் லிஸ்ட் இன்று மாலை 4 மணி முதல் வெளியாக உள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் எப்படி: இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ், மேலும் மூன்று வீரர்களை விடுவிக்க தயாராகி வருகிறது, இதனால் அவர்கள் ரூ.30 கோடிக்கு ஏலத்தில் நுழைய முடியும். பென் ஸ்டோக்ஸ் (ரூ. 16.25), அவரை விடுவிக்க முடிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பெற்ற அம்பதி ராயுடு (ரூ. 6.75) ஆகியோரிடமிருந்தும் கூடுதல் தொகை உள்ளது.
இது போக தென்னாப்பிரிக்காவின் டுவைன் பிரிட்டோரியஸ் மற்றும் தென்னாப்பிரிக்காவின் சிசண்டா மாகலா மற்றும் நியூசிலாந்தின் கைல் ஜேமிசன் (இருவரும் ரூ. 1 கோடி) ஆகியோரையும் விடுவிக்கும் திட்டத்தில் சிஎஸ்கே உள்ளது. பெரும்பாலும் சென்னை அணி ஷரத்துல் தாக்கூரை அணியில் எடுக்க வாய்ப்புகள் உள்ளன.
டெல்லி அணி எப்படி: கடந்த சீசனில் மோசமான ஃபார்ம் இருந்தபோதிலும், தொடக்க ஆட்டக்காரர் ப்ரித்வி ஷாவாவை தக்கவைக்க டெல்லி கேப்பிடல்ஸ் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் இரண்டு சீசன்களை வழி நடத்திய ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்புவார் என்றும் கூறப்படுகிறது. இதற்கான கேஷ் டீலிங் ஒப்பந்தம் இரண்டு உரிமையாளர்களுக்கும் இடையில் நடந்ததாக கூறப்படுகிறது. அதாவது முழுக்க கேஷ் ஏலத் தொகை + கூடுதல் பணம் + விளம்பர வாய்ப்புகள் கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதேபோல் தகவல்களின்படி,, சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தில் இருந்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரில் மயங்க் டாகர் இணைந்தார், அதே நேரத்தில் ஷாபாஸ் அகமது பெங்களூரில் இருந்து ஹைதராபாத் அணிக்கு சென்றுள்ளார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர்கள் ஏலத்திற்கு முன்னதாக ஆல்ரவுண்டர் ஷர்துல் தாக்கூரை விடுவிக்க தயாராக இருப்பதாக தெரிகிறது.
இங்கிலாந்து நட்சத்திர வீரர்களான பென் ஸ்டோக்ஸ் (சென்னை சூப்பர் கிங்ஸ்), ஜோ ரூட் (ராஜஸ்தான் ராயல்ஸ்) ஆகியோர் ஐபிஎல் 2024ல் இருந்து விலகியுள்ளனர். இப்படிப்பட்ட நிலையில்தான் இன்று அணியில் மாற்றங்கள் நடக்கும் வாய்ப்புகள் உள்ளன.
கோலிக்கு கோரிக்கை: இந்த நிலையில் விராட் கோலிக்கு புதிய கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகிறது. அதன்படி அவர் பெங்களூர் அணியில் இருந்து வெளியேற வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன. மாறாக சென்னை அணிக்கு மாற வேண்டும். 2024 ஐபிஎல் பெரும்பாலும் தோனியின் கடைசி சீசனாக இருக்கும்.
இப்படிப்பட்ட நிலையில் அவர் சென்னைக்கு வர வேண்டும். தோனியுடன் கோலி ஒன்றாக ஆட வேண்டும். அவர் சிஎஸ்கே அணியில் மஞ்சள் ஜெர்சியில் ஆட வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன.












Click it and Unblock the Notifications