நிலைமை மோசமாகிவிட்டது.. பிடிவாதமாக இருக்கும் ருத்துராஜ்.. சிஎஸ்கே அணிக்கு பெரிய ஆப்பு.. போச்சு
சென்னை: சிஎஸ்கே அணியின் மீட்டிங்குகளில் கேப்டன் ருத்துராஜ் எடுத்த சில நிலைப்பாடுகள் அணியின் எதிர்காலத்தை பாதிக்கும் வாய்ப்புகள் இருப்பதாக கருத்துக்கள் வைக்கப்படுகின்றன. பிடிவாதமாக ருத்துராஜ் எடுத்த சில முடிவுகள் அணியை பாதிக்கலாம் என்று கூறப்படுகிறது.
சிஎஸ்கே அணி 2025 ஐபிஎல் சீசனில் வரிசையாக தோல்விகளை சந்தித்து வருகிறது. 5 போட்டிகளில் ஆடி சிஎஸ்கே அணி முதல் போட்டியை தவிர 4 போட்டிகளில் தோல்வி அடைந்து உள்ளது.

மேட்ச் 1
ஏப்ரல் 7, 2025 வரை, சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) 2025 இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) சீசனில் நான்கு போட்டிகளில் விளையாடியுள்ளது. முதலில் மார்ச் 23, 2025: சிஎஸ்கே vs. மும்பை இந்தியன்ஸ் (MI) இடையே மேட்ச் நடந்தது இடம்: எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியம், சென்னை முடிவு: சிஎஸ்கே அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது MI 20 ஓவர்களில் 155/9 எடுத்தது. சிஎஸ்கே 19.1 ஓவரில் 158/6 ரன்கள் எடுத்து இலக்கை எட்டி வென்றது,. ருதுராஜ் கெய்க்வாட் 53 ரன்களும், ரச்சின் ரவீந்திரா ஆட்டமிழக்காமல் 65 ரன்களும் எடுத்தது குறிப்பிடத்தக்கது.
மேட்ச் 2:
மார்ச் 28, 2025: சிஎஸ்கே vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) இடையே மேட்ச் நடந்தது. இடம்: எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியம், சென்னை முடிவு: சிஎஸ்கே 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது சிஎஸ்கே பவுலிங் சொதப்பியது. சிஎஸ்கே அணியின் பேட்டிங்கும்.. முக்கியமாக மிடில் ஆர்டர் சொதப்பியது.
மேட்ச் 3:
மார்ச் 30, 2025: சிஎஸ்கே vs ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆர்ஆர்) இடையே மேட்ச் நடந்தது. இடம்: பர்சபரா கிரிக்கெட் ஸ்டேடியம், கவுகாத்தி முடிவு: சிஎஸ்கே 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது . கடும் போட்டி நிலவிய ஆட்டத்தில், சிஎஸ்கே 6 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்து, தொடர்ந்து இரண்டாவது தோல்வியை சந்தித்தது. இதிலும் பவுலிங், மிடில் ஆர்டர் பேட்டிங் சொதப்பியது.
மேட்ச் 4:
ஏப்ரல் 6, 2025: சிஎஸ்கே vs டெல்லி கேபிடல்ஸ் (டிசி) இடையே ஆட்டம் நடந்தது. இடம்: அருண் ஜெட்லி ஸ்டேடியம், டெல்லி முடிவு: சிஎஸ்கே 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது பவர்பிளேயின் போது சிஎஸ்கேயின் டாப் ஆர்டர் சரிந்தது, ஆறு ஓவர்களுக்குள் மூன்று விக்கெட்டுகளை இழந்தது.
கடைசியாக பஞ்சாப் அணிக்கு எதிராக நடந்த ஆட்டத்திலும் சிஎஸ்கே அணி தோல்வி அடைந்து உள்ளது. இப்படி 5 போட்டிகளில் ஆடி சிஎஸ்கே அணி முதல் போட்டியை தவிர 4 போட்டிகளில் தோல்வி அடைந்து உள்ளது.
ருத்துராஜ் பிடிவாதம்
சிஎஸ்கே அணியின் மீட்டிங்குகளில் கேப்டன் ருத்துராஜ் எடுத்த சில நிலைப்பாடுகள் அணியின் எதிர்காலத்தை பாதிக்கும் வாய்ப்புகள் இருப்பதாக கருத்துக்கள் வைக்கப்படுகின்றன. பிடிவாதமாக ருத்துராஜ் எடுத்த சில
முடிவுகள் அணியை பாதிக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்த சீசன் முழுக்க ருத்துராஜ் மிக மோசமாக ஆடி உள்ளார். சிஎஸ்கே அணியின் தொடர் தோல்விக்கு பல காரணங்கள் உள்ளன. ஆனால் கேப்டன் ருத்துராஜ் கெய்க்வாட் இதற்கு முக்கியமானகாரணமாக மாறி உள்ளார். அவர் பேட்டிங் ஆர்டரை மாற்றியது இதற்கு ஒரு முக்கியமான காரணம் ஆகும். அவர் இங்கே சுயநலமாக முடிவு எடுத்துள்ளார். அவர் தற்போது ஓப்பனிங் இறங்காமல் ஒன் டவுன் இறங்குகிறார்.
ஓப்பனிங் இறங்கி ஒரே சீசனில் அதிக ரன்கள் எடுத்து சாதனை எல்லாமே படைத்துள்ளார். ஆனால் இந்த முறை ஒன் டவுன் இறங்குகிறார். இதற்கு காரணம் இந்திய அணியில் ஓப்பனிங் ஸ்பாட் முழுமையாக உள்ளது. ஆனால் ஒன் டவுன் இறங்க எதிர்காலத்தில் இடம் கிடைக்கும். அணியில் வாய்ப்பு கிடைக்கும்.
இதனால் எதிர்காலத்தில் இடம் கிடைக்கும் என்பதால்.. இந்திய அணிக்காக சிஎஸ்கேவை காவு வாங்கி வருகிறார். இந்த முறை அணியின் மீட்டிங்கிலும் ஒன் டவுன்தான் இறங்குவேன் என்று அவர் உறுதியாக அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது ஓப்பனிங் இறங்க மாட்டேன் என்று பிடிவதாக இருப்பதாக கூறப்படுகிறது.
ரெக்கார்ட் என்ன?
மும்பைக்கு எதிரான முதல் போட்டியில் 26 பந்துகளில் 53 ரன்கள் எடுத்தார். பெங்களூருக்கு எதிரான இரண்டாவது போட்டியில் 4 பந்துகளில் 0 ரன்கள் எடுத்தார். ராஜஸ்தானுக்கு எதிரான மூன்றாவது போட்டியில் 44 பந்துகளில் 63 ரன்கள் எடுத்தார். டெல்லிக்கு எதிரான நான்காவது போட்டியில் 4 பந்துகளில் 5 ரன்கள் எடுத்தார். நேற்று பஞ்சாபிற்கு எதிரான ஐந்தாவது போட்டியில் 3 பந்துகளில் 1 ரன்கள் எடுத்தார்.
அவர் ஒன் டவுன் இறங்கி எடுத்த ஸ்கோர்கள் இவை. 3 போட்டிகளில் மோசமாக சொதப்பி உள்ளார். அவர் ஓப்பனிங் இறங்குவதே அணிக்கு பலம். ஆனால் ஒன் டவுன் இறங்குவதில் பிடிவதாக இருக்கிறார்.












Click it and Unblock the Notifications