தோல்வி கூட பரவாயில்ல.. ஜெயிக்க முயற்சிக்கவே இல்லையே.. சிஎஸ்கே பேட்டிங்கை கழுவி ஊற்றிய நெட்டிசன்கள்
சென்னை: நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இன்று நடைபெற்ற டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்திலும் சென்னை அணியின் பேட்டிங் படுமோசமாக இருந்தது. குறிப்பாக தோனியும் மந்தமாக விளையாடினார். இதை வைத்து நெட்டிசன்கள் சென்னை அணியை கடுமையாக சாடி வருகிறார்கள்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 17 வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதின. 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை அணிக்கு நடப்பு ஐபிஎல் சீசன் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து வருகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி தனது பழைய பார்முக்கு சென்னை அணி திரும்பும் அணி என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், டெல்லி கேபிடல்ஸ் அணியிடம் சென்னை அணி தோல்வியை சந்தித்துள்ளது. டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி முதலில் பேட் செய்தது. 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் எடுத்தது. சென்னை கிரவுண்டை பொறுத்தவரை இது கொஞ்சம் சவாலான இலக்குதான். அந்த வகையில் பந்து வீச்சில் சொத்ப்பிய சென்னை அணி பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெறும் என ரசிகர்கள் எதிபார்த்தனர்.
ஆனால், சென்னை அணிக்கு வழக்கம் போலவே இந்த ஆட்டத்திலும் துவக்கம் சரியாக அமையவில்லை. ரச்சின் ரவீந்திரா 3 ரன்களில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கான்வேவும் 13 ரன்களில் ஆட்டமிழந்தார். கெய்க்வாட்டும் 5 ரன்களில் நடையை கட்டினார். விஜய் சங்கர் நிலைத்து நின்று ஆட முயற்சித்தாரே தவிர ரன்ரேட்டிற்கு தகுந்தபடி அட்டாக் செய்யவில்லை. மறுமுனையில் ஜடேஜா, ஷிவம் துபே ஏமாற்ற தோனி களத்திற்கு வந்தார்.
சென்னை ரசிகர்கள் பெரும் ஆரவாரத்திற்கு இடையே களத்திற்கு வந்த தோனி மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் ரன் ரேட் எகிறி கோண்டே சென்றது. 10.4 ஓவரில் தோனி களத்திற்கு வந்தார். 11வது ஓவர்கள் முடிவில் சென்னை அணி 5 விக்கெட் இழப்புக்கு 76 ரன்கள் எடுத்து இருந்தது. அப்போது 100க்கும் மேல் ரன்கள் வெற்றிக்க்கு தேவைப்பட்டது. கொஞ்சம் அடித்து ஆடியிருந்தால் சென்னை அணி எளிதாக எட்டிப்பிடித்து இருக்கலாம்.
ஆனால், தோனி - விஜய் சங்கர் மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் ரன் ரேட் எகிறி கொண்டே சென்றது. சிகசரும் பவுண்டரிகளுமாக விளாச வேண்டிய நேரத்தில் கூட சென்னை அணி வீரர்கள் இருவரும் சிங்கிள்களை எடுத்தது சென்னை ரசிகர்களை ஏரிச்சல் அடைய வைத்தது. இடையிடையே ஒன்றிரண்டு சிக்சர்களையும் பவுண்டரிகளுக்கு பறக்க விட்டாலும் கூட இது ரன் ரேட்டிற்கு தகுந்த பேட்டிங்காக இல்லை.
கடைசியில் சென்னை அணி 5 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்து 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது. சென்னை அணியின் மோசமான பேட்டிங்கை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். சென்னை அணி வெற்றிக்காக முயற்சிப்பது போலக் கூட இல்லை. இப்படி ஆடினால் இந்த முறை பிளே ஆஃப் சுற்றை நினைத்து கூட பார்க்க வேண்டாம் என்று சாடி வருகிறார்கள்.
-
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம்












Click it and Unblock the Notifications