பத்திரானா சம்பவம்.. கதறிய ராஜஸ்தான் லோக்கல் பாய்.. களத்திற்கு ஓடி வந்த சப்போர்ட் டீம்! என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை சிஎஸ்கே - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான லீக் ஐபிஎல் 2025 ஆட்டம் கவுகாத்தி மைதானத்தில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் ராஜஸ்தான் அணி வீரர் ரியான் பராக் டெத் ஓவர்களில் கடுமையாக காயம் அடைந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இன்று மேட்ச் தொடங்கியதில் இருந்தே ராஜஸ்தான் அணி வேகமாக ஆடியது. எந்த இடத்திலும் சுணக்கம் காட்டாமல்.. ராஜஸ்தான் வேகம் காட்டியது. முக்கியமாக நிதிஷ் ராணா ஸ்பின் பவுலர்களை டார்கெட் செய்து அடித்தார். நிதிஷ் ராணா இதனால் அஸ்வின் தொடங்கி சிஎஸ்கேவின் ஸ்பின் படையை மாறி மாறி சிக்ஸ், பவுண்டரி அடித்து வெளுத்து கட்டினார்.

அசத்தலான பேட்டிங்

இவர் ஏற்கனவே கொல்கத்தா அணியில் ஸ்பின் பவுலிங்கில் சிறப்பாக பயிற்சி எடுத்தவர். இதனால் இன்று வசமாக நூர், அஸ்வின் என்று எல்லோரையும் ஸ்வீப், ஸ்விட்ச் ஹிட் எல்லாம் அடித்து பிரஷர் போட்டார். இவருக்கு பயந்தே ஜடேஜாவிற்கு ஓவர் கொடுக்காமல் சிஎஸ்கே பிரஷர் போட்டது. இருந்தாலும் இன்று 81 ரன்கள் இருக்கும் போது அஸ்வின் போட்ட வைடு பந்தை இறங்கி வந்து அடிக்க முயன்று ஸ்டம்ப்பிட் ஆனார்.

IPL 2025 CSK Pathirana takes wonderfull wicket of Riyan Parag of RR

இவர் 1.5 ஓவரிலயே அவுட் ஆக வேண்டியது. ஜேமி ஓவர்டன் போட்ட பந்தை சிக்ஸ் லைனில் கலீல் பிடித்து இருக்க வேண்டியது. அவரின் கையில் பட்டே பந்து பறந்தது. கலீல் நல்ல உயரமான வீரர். ஆனால் நல்ல பில்டர் கிடையாது. இந்த நிலையில்தான் அவரின் கையில் பட்டு பந்து சிக்ஸ் போனது.

ஒரு பக்கம் ராணா அவுட் ஆனாலும் இன்னொரு பக்கம் லோக்கல் பாய் ரியான் பராக் விடாமல் விளாசினார். ரியான் பராக் ஆடிய விதத்தை பார்க்க.. அவர் கண்டிப்பாக அணியை 200 ரன்களுக்கு கொண்டு செல்வார் என்றே கருதப்பட்டது. இன்னொரு பக்கம் பத்திரனா ஹெட்மயர் போட்ட பந்து ஒன்றில் ஹெட்மயர் 2 ரன்கள் எடுத்தார். அந்த பந்தில் ஹெட்மயர் அடித்த பந்தை ஈஸியாக ஓவர்டன் கேட்ச் பிடித்திருக்க வேண்டும். ஆனால் அதை தவறவிட்டு சொதப்பினார்.

பின்னர் 18வது ஓவரில் பாத்திரனா போட்ட பந்தில் லோக்கல் பாய் ரியான் பராக் கடுமையாக காயம் அடைந்தார். அவருக்கு முழங்கையில் காயம் ஏற்பட்டது. இதனால் ராஜஸ்தானின் சப்போர்ட் டீம் வந்து அவரை சோதனை செய்தது. ரியான் பராக் வலியில் கடுமையாக துடித்தார். கொஞ்சம் வலியோடு இறங்கிய ரியான் பராக்.. அடுத்த பந்திலேயே போல்ட் ஆனார்.

Take a Poll

டீம் விவரம்

இன்று சிஎஸ்கே அணியில் ரச்சின் ரவீந்திரா, ராகுல் திரிபாதி, ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), விஜய் சங்கர், ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி (வி), ஜேமி ஓவர்டன், ரவிச்சந்திரன் அஷ்வின், நூர் அகமது, மதீஷா பத்திரனா, கலீல் அகமது ஆகியோர் இடம்பெற்றனர். கடந்த ஆட்டத்தில் மோசமாக சொதப்பிய தீபக் ஹூடா, சாம் கரண் ஆகியோர் இன்று அணியில் இடம்பெறவில்லை.

இன்னொரு பக்கம் ராஜஸ்தான் அணியில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், நிதிஷ் ராணா, ரியான் பராக் (கேபிட்டன்), துருவ் ஜூரல் (வி), ஷிம்ரோன் ஹெட்மியர், வனிந்து ஹசரங்கா, ஜோஃப்ரா ஆர்ச்சர், மகேஷ் தீக்ஷனா, சந்தீப் சர்மா, துஷார் தேஷ்பாண்டே ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+