கடுப்பாக்கிய சிஎஸ்கே பீல்டர்கள்.. களத்தில் நடந்ததை கவனிச்சீங்களா.. சிஎஸ்கேவின் பெரிய வீக்னஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை சிஎஸ்கே - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான லீக் ஐபிஎல் 2025 ஆட்டம் கவுகாத்தி மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் தொடக்கத்தில் இருந்தே ராஜஸ்தான் அணி சிறப்பாக ஆடிக்கொண்டு இருக்கிறது.

கடந்த மேட்ச் போலவே இந்த மேட்சிலும் பீல்டிங் சிஎஸ்கே அணிக்கு சரியாக இல்லை. இன்றும் பீல்டிங்கில் சிஎஸ்கே அணி வீரர்கள் சொதப்பினார்கள்.

இன்று சிஎஸ்கே அணியில் ரச்சின் ரவீந்திரா, ராகுல் திரிபாதி, ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), விஜய் சங்கர், ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி (வி), ஜேமி ஓவர்டன், ரவிச்சந்திரன் அஷ்வின், நூர் அகமது, மதீஷா பத்திரனா, கலீல் அகமது ஆகியோர் இடம்பெற்றனர். கடந்த ஆட்டத்தில் மோசமாக சொதப்பிய தீபக் ஹூடா, சாம் கரண் ஆகியோர் இன்று அணியில் இடம்பெறவில்லை.

இன்னொரு பக்கம் ராஜஸ்தான் அணியில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், நிதிஷ் ராணா, ரியான் பராக் (கேப்டன்), துருவ் ஜூரல் (வி), ஷிம்ரோன் ஹெட்மியர், வனிந்து ஹசரங்கா, ஜோஃப்ரா ஆர்ச்சர், மகேஷ் தீக்ஷனா, சந்தீப் சர்மா, துஷார் தேஷ்பாண்டே ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

IPL 2025 CSK s fielding was again bad against RR

வேகம் காட்டிய ராஜஸ்தான்

இன்று மேட்ச் தொடங்கியதில் இருந்தே ராஜஸ்தான் அணி வேகமாக ஆடியது. எந்த இடத்திலும் சுணக்கம் காட்டாமல்.. ராஜஸ்தான் வேகம் காட்டியது. முக்கியமாக நிதிஷ் ராணா ஸ்பின் பவுலர்களை டார்கெட் செய்து அடித்தார். நிதிஷ் ராணா இதனால் அஸ்வின் தொடங்கி சிஎஸ்கேவின் ஸ்பின் படையை மாறி மாறி சிக்ஸ், பவுண்டரி அடித்து வெளுத்து கட்டினார்.

இவர் ஏற்கனவே கொல்கத்தா அணியில் ஸ்பின் பவுலிங்கில் சிறப்பாக பயிற்சி எடுத்தவர். இதனால் இன்று வசமாக நூர், அஸ்வின் என்று எல்லோரையும் ஸ்வீப், ஸ்விட்ச் ஹிட் எல்லாம் அடித்து பிரஷர் போட்டார். இவருக்கு பயந்தே ஜடேஜாவிற்கு ஓவர் கொடுக்காமல் சிஎஸ்கே பிரஷர் போட்டது. இருந்தாலும் இன்று 81 ரன்கள் இருக்கும் போது அஸ்வின் போட்ட வைடு பந்தை இறங்கி வந்து அடிக்க முயன்று ஸ்டம்ப்பிட் ஆனார்.

இவர் 1.5 ஓவரிலயே அவுட் ஆக வேண்டியது. ஜேமி ஓவர்டன் போட்ட பந்தை சிக்ஸ் லைனில் கலீல் பிடித்து இருக்க வேண்டியது. அவரின் கையில் பட்டே பந்து பறந்தது. கலீல் நல்ல உயரமான வீரர். ஆனால் நல்ல பீல்டர் கிடையாது. இந்த நிலையில்தான் அவரின் கையில் பட்டு பந்து சிக்ஸ் போனது.

Take a Poll

அதன்பின் ரச்சின் தொடங்கி நூர் அஹமது வரை பலரும் பீல்டிங்கில் தவறுகளை செய்து மோசமாக சொதப்பினர். நேரடியாக போல்ட் எடுத்தால்தான் உண்டு என்று சொல்லும் அளவிற்கு மோசமாக ஆட்டம் மாறியது. தொடக்கத்திலேயே அவுட் ஆக வேண்டிய ராணா விக்கெட்டை மிஸ் செய்தது அணிக்கு பெரிய பிரஷராக மாறியது.

கடந்த மேட்சிலும் அடுத்தடுத்து பல கேட்சுகளை சிஎஸ்கே மிஸ் செய்தது. படிதார் அடித்த பந்து, கோலி அடித்தது என்று மாறி மாறி சிஎஸ்கே கேட்சுகளை மிஸ் செய்தது. ராகுல் திரிப்பாதி, தீபக் ஹூடா என்று நல்ல பீல்டர்கள் கூட கடந்த மேட்சில் கேட்சை மிஸ் செய்தனர். இன்றும் சிஎஸ்கே அணியின் பீல்டிங் இதேபோல் மிக மோசமாக இருந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+