விராட் கோலியை நம்பி இல்ல.. டிகே செய்த வரலாற்று சம்பவம்.. ஆர்சிபி கோப்பையை வெல்லப்போவது உறுதி!

Subscribe to Oneindia Tamil

மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் 17 ஆண்டுகளாக கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து வருகிறது ஆர்சிபி அணி. ராகுல் டிராவிட், அனில் கும்ப்ளே, டேனியல் விட்டோரி, விராட் கோலி, டூ பிளசிஸ் என்று எத்தனையோ முக்கியமான கேப்டன்கள் அணிக்கு தலைமை தாங்கிய போதும், அந்த அணியால் இதுவரை சாம்பியன் பட்டத்தை மட்டும் கைப்பற்ற முடியவில்லை.

அதற்கு ஆர்சிபி அணியின் டாப் ஆர்டர் வீரர்களே காரணமாக இருந்தனர். ஏனென்றால் ஆர்சிபி அணியின் வரலாற்றில் டாப் 3 வீரர்கள் மட்டும் அபாயகரமான வீரர்களாக இருப்பார்கள். ஜாக் காலிஸ் - உத்தப்பா கூட்டணி, கிறிஸ் கெய்ல் - விராட் கோலி - டி வில்லியர்ஸ் கூட்டணி, விராட் கோலி - டூ பிளசிஸ் - மேக்ஸ்வெல் கூட்டணி என்று எப்போதும் டாப் 3 அல்லது டாப் 4 வீரர்களே அதிரடியாக ஆடக் கூடியவர்களாக இருப்பார்கள்.

IPL 2025 Dinesh Karthik made important Change and RCB is No more over-reliance on top three batters

இந்திய வீரர்கள் மிஸ்ஸிங்

பவுலிங்கிலும் சரி, மிடில் ஆர்டரிலும் சரி எந்த இந்திய வீரர்களுக்கும் ஆர்சிபி அணி முக்கியத்துவம் கொடுத்ததில்லை. இதுவரை ஆர்சிபி அணியின் வரலாற்றில் விராட் கோலியை தவிர்த்து வேறு எந்த இந்திய வீரரும் ஆயிரம் ரன்களை கூட விளாசியது இல்லை. கேஎல் ராகுல், சிராஜ், சாஹல், சிவம் துபே, வாஷிங்டன் சுந்தர் என்று எந்த வீரரையும் பாதுகாத்ததாக வரலாறே கிடையாது.

தினேஷ் கார்த்திக் செய்த மாற்றம்

ஆனால் இம்முறை ஆர்சிபி அணி நிர்வாகத்தின் செயல்பாடுகளே மொத்தமாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு ஆர்சிபி அணியின் ஆலோசகராக இணைந்துள்ள தினேஷ் கார்த்திக் மிக முக்கியமான காரணம். ஏனென்றால் மெகா ஏலத்தில் தினேஷ் கார்த்திக் தேர்வு செய்த வீரர்களையே ஆர்சிபி அணி நிர்வாகம் வாங்கி இருக்கிறது.

ரீடென்ஷனில் சர்ப்ரைஸ்

அவர் இம்முறை ஆர்சிபி அணிக்குள் ஏராளமான இந்திய வீரர்களை தேர்வு செய்து கொண்டு வந்துள்ளார். முதல் முறையாக ஆர்சிபி அணியின் ரீடென்ஷனிலேயே 3 இந்திய வீரர்கள் இடம்பெற்றிருந்தனர். விராட் கோலி, ரஜத் பட்டிதார் மற்றும் யாஷ் தயாள் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.

இந்திய வீரர்கள்

அதன்பின் மெகா ஏலத்தில் ஜித்தேஷ் சர்மா, புவனேஷ்வர் குமார், க்ருணால் பாண்டியா, படிக்கல், ரஷீக் தார் ஆகியோரை வாங்கியுள்ளனர். அதுமட்டுமல்லாமல் மனோஜ் பண்டாகே, சிக்காரா, சுயாஷ் சர்மா போன்ற சிறந்த உள்ளூர் வீரர்களையும் வாங்கி இருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் நீண்ட காலமாக ஆர்சிபி அணியின் பிரச்சனையாக மிடில் ஆர்டர் இருந்தது.

மிடில் ஆர்டரில் வலிமை

அதனை சரி செய்யும் வகையில் ஜித்தேஷ் சர்மா, லிவிங்ஸ்டன் மற்றும் டிம் டேவிட் ஆகிய மூவரும் கொண்டு வரப்பட்டிருக்கிறார்கள். அதாவது டாப் ஆர்டரில் பில் சால்ட், விராட் கோலி, ரஜத் பட்டிதார் ஆகியோர் உள்ளனர். இவர்களில் யார் ஆட்டமிழந்தாலும், கீழ் வரிசையில் வரக் கூடிய க்ருணால் பாண்டியா வரை அனைவரும் சிறப்பாக பேட்டிங் செய்யக் கூடியவர்களாக உள்ளனர்.

கேப்டனாக ரஜத் பட்டிதார்

இதுதான் ஆர்சிபி அணியில் செய்யப்பட்டுள்ள மிகப்பெரிய மாற்றம். அதேபோல் மத்திய பிரதேச அணியின் கேப்டனாக ரஜத் பட்டிதார் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். சையத் முஷ்டாக் அலி தொடரில் ரஜத் பட்டிதார் மத்திய பிரதேச அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்து வந்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் ஆர்சிபி அணியின் ஸ்பின்னராக சுயாஷ் சர்மா கொண்டு வரப்பட்டுள்ளார்.

கேகேஆர் பந்தம்

ஆர்சிபி அணிக்கு வருவதற்கு முன்பாக கேகேஆர் அணியின் கேப்டனாக இருந்தவர் தினேஷ் கார்த்திக் தான். அபிஷேக் நாயர் உள்ளிட்டோரிடம் மிகச்சிறந்த நட்பை கொண்டவர். அதனால் சுயாஷ் சர்மாவை தினேஷ் கார்த்திக் நன்றாக தெரிந்து கொண்ட பின்னரே ஆர்சிபி அணிக்காக ஒப்பந்தம் செய்ய பரிசீலித்திருப்பார். இதன் காரணமாக ஆர்சிபி அணி கோப்பையை வெல்ல வாய்ப்பு உள்ளது என்று ரசிகர்கள் நம்புகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+