16 பாயிண்ட்ஸ்தான் எடுக்க முடியும்! சிஎஸ்கே அணி இனியும்.. ப்ளே ஆப் சுற்றுக்கு செல்ல வாய்ப்பு உள்ளதா?
சென்னை: சிஎஸ்கே அணி 2025 ஐபிஎல் சீசனில் வரிசையாக தோல்விகளை சந்தித்து வருகிறது. 8 போட்டிகளில் ஆடி சிஎஸ்கே அணி இரண்டு போட்டிகளை தவிர 6 போட்டிகளில் தோல்வி அடைந்து உள்ளது. இதனால் சிஎஸ்கே அணி ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மேட்ச் 1
ஏப்ரல் 7, 2025 வரை, சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) 2025 இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) சீசனில் நான்கு போட்டிகளில் விளையாடியுள்ளது. முதலில் மார்ச் 23, 2025: சிஎஸ்கே vs. மும்பை இந்தியன்ஸ் (MI) இடையே மேட்ச் நடந்தது இடம்: எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியம், சென்னை முடிவு: சிஎஸ்கே அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது MI 20 ஓவர்களில் 155/9 எடுத்தது. சிஎஸ்கே 19.1 ஓவரில் 158/6 ரன்கள் எடுத்து இலக்கை எட்டி வென்றது,. ருதுராஜ் கெய்க்வாட் 53 ரன்களும், ரச்சின் ரவீந்திரா ஆட்டமிழக்காமல் 65 ரன்களும் எடுத்தது குறிப்பிடத்தக்கது.
மேட்ச் 2:
மார்ச் 28, 2025: சிஎஸ்கே vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) இடையே மேட்ச் நடந்தது. இடம்: எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியம், சென்னை முடிவு: சிஎஸ்கே 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது சிஎஸ்கே பவுலிங் சொதப்பியது. சிஎஸ்கே அணியின் பேட்டிங்கும்.. முக்கியமாக மிடில் ஆர்டர் சொதப்பியது.
மேட்ச் 3:
மார்ச் 30, 2025: சிஎஸ்கே vs ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆர்ஆர்) இடையே மேட்ச் நடந்தது. இடம்: பர்சபரா கிரிக்கெட் ஸ்டேடியம், கவுகாத்தி முடிவு: சிஎஸ்கே 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது . கடும் போட்டி நிலவிய ஆட்டத்தில், சிஎஸ்கே 6 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்து, தொடர்ந்து இரண்டாவது தோல்வியை சந்தித்தது. இதிலும் பவுலிங், மிடில் ஆர்டர் பேட்டிங் சொதப்பியது.
மேட்ச் 4:
ஏப்ரல் 6, 2025: சிஎஸ்கே vs டெல்லி கேபிடல்ஸ் (டிசி) இடையே ஆட்டம் நடந்தது. இடம்: அருண் ஜெட்லி ஸ்டேடியம், டெல்லி முடிவு: சிஎஸ்கே 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது பவர்பிளேயின் போது சிஎஸ்கேயின் டாப் ஆர்டர் சரிந்தது, ஆறு ஓவர்களுக்குள் மூன்று விக்கெட்டுகளை இழந்தது.
மேட்ச் 5 மற்றும் 6
பஞ்சாப் அணிக்கு எதிராக நடந்த ஆட்டத்திலும் சிஎஸ்கே அணி தோல்வி அடைந்தது. அதன்பின் கொல்கத்தா அணிக்கு எதிராக தோல்வி அடைந்தது. இப்படி 6 போட்டிகளில் ஆடி சிஎஸ்கே அணி முதல் போட்டியை தவிர 5 போட்டிகளில் தோல்வி அடைந்து உள்ளது.
மேட்ச் 7 மற்றும் 8
லக்னோ அணிக்கு எதிராக நடந்த ஆட்டத்தில் சிஎஸ்கே அணி வென்றது. அதன்பின் நேற்று மும்பை அணிக்கு எதிராக தோல்வி அடைந்தது. இப்படி 8 போட்டிகளில் ஆடி சிஎஸ்கே அணி 2 போட்டிகளை தவிர 6 போட்டிகளில் தோல்வி அடைந்து உள்ளது.
சிஎஸ்கே தகுதி பெறுமா?
இதனால் சிஎஸ்கே அணி ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் சிஎஸ்கே அணிக்கு ப்ளே ஆப் செல்ல இன்னும் வாய்ப்புகள் உள்ளன.
மீதமுள்ள 6 போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே CSK அணி அதிகபட்சமாக 16 புள்ளிகளுடன் முடிக்க முடியும். ஆனால் ஐந்து அணிகள் ஏற்கனவே 10 புள்ளிகளைப் பெற்றிருப்பதாலும் இன்னும் குறைந்தது ஆறு போட்டிகள் விளையாட உள்ளதாலும், 16 புள்ளிகள் சிஎஸ்கே பிளேஆஃப்களுக்குத் தகுதிபெற போதுமானதாக இருக்காது. ஆனால் மீதமுள்ள ஆறு போட்டிகளில் சிஎஸ்கே அதிக ரன்கள் வித்தியாசத்தில் வென்று.. பஞ்சாப் பெங்களூர் அணிகளில் ஏதாவது ஒரு அணி அடுத்தடுத்து எல்லா போட்டிகளிலும் தோல்வி அடைந்தால், மற்ற 5-9 இடங்களில் உள்ள அணிகள் தொடர்ச்சியாக வெற்றிகளை பதவி செய்யாமல் சில தோல்விகளை பதவி செய்தால் சிஎஸ்கே அணிக்கு சாதகமான சூழல் ஏற்படும்.
அதாவது டாப் 2 இடங்களில் உள்ள அணிகளுக்கு அதிக வாய்ப்பு உள்ளது. சிஎஸ்கே தவிர்த்து மீதம் உள்ள 7 அணிகள் 16 புள்ளிகளை எடுக்காமல் போனால் சிஎஸ்கே அணி ப்ளே ஆப் செல்ல சாதகமாக இருக்கும்.












Click it and Unblock the Notifications