சொல்லி தொலைங்க! அந்த மும்பை மேட்ச் மட்டும் எப்படி ஜெயிச்சீங்க! சிஎஸ்கேவை கதறவிட்ட நெட்டிசன்ஸ் மீம்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கொல்கத்தா அணிக்கு எதிராக சிஎஸ்கே அணி நேற்று மிக மோசமாக ஆடி தோல்வி அடைந்தது. சிஎஸ்கே அணியின் மோசமான ஆட்டம் குறித்து நெட்டிசன்கள் பலர் மீம்ஸ் போட்டு கிண்டல் செய்து வருகின்றனர்.

IPL 2025 CSK

கொல்கத்தா அணிக்கு எதிராக சிஎஸ்கே அணி நேற்று மிக மோசமாக ஆடி உள்ளது. அதிலும் கேப்டன் தோனி இன்று மிக கொடுமையான தவறுகளை கேப்டனாக இன்று களத்தில் செய்தார். இன்று இம்பாக்ட் வீரராக தேவையின்றி தீபக் ஹூடா சம்பந்தமே இல்லாமல் இறக்கப்பட்டார். இதனால் பத்திரானா இறக்கப்படாமல் போன நிலை ஏற்பட்டது.

IPL 2025 CSK

மிடில் ஆர்டரில் விக்கெட்டுகள் சென்ற போது அஸ்வின் இறக்கப்பட்டார். டெஸ்ட் ஆட்டம் போல.. அஸ்வின் நைட் வாட்ச் மேன் ஆக இறக்கப்பட்டார். தேவையின்றி எப்படி தீபக் ஹூடா உள்ளே வந்தார் என்ற சந்தேகம் இருந்தது. இதை வைத்து நெட்டிசன்கள் பலர் மீம்ஸ் போட்டுள்ளனர்.

IPL 2025 CSK

பேட்டிங் சொதப்பல் மீம்ஸ்

முக்கியமாக இந்த முறையும் ரச்சின் ரவீந்திரா 9 பந்தில் 4 ரன்களை எடுத்து சொதப்பினார். அதோடு 11 பந்தில் 12 ரன்களை எடுத்து கான்வே அவுட் ஆனார். இன்னொரு பக்கம் டெஸ்ட் இன்னிங்ஸ் ஆடிய ராகுல் திரிப்பாதி 16 பந்துகளில் 22 ரன்கள் எடுத்தார்.

IPL 2025 CSK

21 பந்தில் விஜய் சங்கரும் மோசமாக ஆடி 29 ரன்கள் எடுத்தார். 7 பந்துகளை குடித்த அஸ்வின் 1 ரன் மட்டுமே எடுத்தார். ஜடேஜா டக் அவுட். தோனி 1 ரன்னுக்கு அவுட் என்று அதிர்ச்சி கொடுத்தனர். முதல் 8 ஓவர்களிலேயே சிஎஸ்கே 24 பந்துகளை டாட் வைத்தது. இடையில் தேவையின்றி இறக்கப்பட்ட ஹூடா டக் அவுட் ஆனார். இப்படி இறங்கிய வீரர்கள் எல்லோரும் மோசமாக ஆடி சொதப்பினர்.

IPL 2025 CSK

இதையடுத்து இறங்கிய கொல்கத்தா அணி எளிதாக இலக்கை அடைந்து வெற்றிபெற்றது. டி காக் 23 ரன்களை எடுத்தார். சுனில் நரேன் 44 ரன்களை எடுத்தார். இதனால் எளிதாக இலக்கிற்கு அருகே சென்ற கொல்கத்தா அணி 10.1 ஓவரில் 107/2 ரன்கள் எடுத்து வென்றது,

IPL 2025 CSK

தோனி மீம்ஸ்

ஜடேஜாவிற்கு முன் அஸ்வினுக்கு ஓவர் தரப்பட்டது. அவர் இன்று ஓவர் தி விக்கெட் போட்டார். கேரம் பால் அதிகம் வீசினார். நூர் அஹமது இன்றும் பவர் பிளேவில் பவுலிங் போட அனுமதிக்கப்படவில்லை. இன்று கேப்டன்சியை பார்த்தால் உண்மையில் இது தோனி செய்த கேப்டன்சியா என்று கேட்கும் அளவிற்கு இருந்தது.

IPL 2025 CSK


அஸ்வின் மீம்ஸ்

முக்கியமாக அஸ்வின் பவுலிங்கிற்கு எதிராகவும் கடுமையாக மீம்ஸ் போடப்பட்டு வருகிறது. மும்பைக்கு எதிரான முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அஸ்வின் 4 ஓவர்கள் போட்டு 1 விக்கெட் எடுத்தார் 31 ரன்கள் கொடுத்தார். பெங்களூருக்கு எதிரான முதல் இரண்டாவது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அஸ்வின் 2 ஓவர்கள் போட்டு 1 விக்கெட் எடுத்தார் 22 ரன்கள் கொடுத்தார். ராஜஸ்தானுக்கு எதிரான மூன்றாவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அஸ்வின் 4 ஓவர்கள் போட்டு 1 விக்கெட் எடுத்தார் 46 ரன்கள் கொடுத்தார்.

IPL 2025 CSK
IPL 2025 CSK

டெல்லிக்கு எதிரான நான்காவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அஸ்வின் 3 ஓவர்கள் 21 ரன்கள் கொடுத்தார். விக்கெட் எடுக்கவில்லை. பஞ்சாப்பிற்கு எதிரான ஐந்தாவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அஸ்வின் 4 ஓவர்கள் போட்டு 2 விக்கெட் எடுத்தார் 48 ரன்கள் கொடுத்தார். சிஎஸ்கே அணியில் ஆடி வரும் மூத்த கிரிக்கெட் வீரர் ரவிசந்திரன் அஸ்வின் மீது கடுமையான புகார்கள் வைக்கப்படுகின்றன. அஸ்வின் சரியாக ஆடவில்லை என்று விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன.

IPL 2025 CSK
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+