பெரிய ஐயா பெரிய ஐயாதாங்க.. "மலை" போய் தல வந்துட்டாரு பாருங்க.. இது அரசியல் பதிவல்ல!
சென்னை: ஒரு பக்கம் தமிழக அரசியலில் பல அதிரடி மாற்றங்கள் நடந்து வரும் நிலையில் இன்னொரு பக்கம் ஐபிஎல் கிரிக்கெட்டிலும் முக்கியமான மாற்றங்கள் நடந்து வருகின்றன.
பாமகவின் தலைவர் பதவியிலிருந்து அன்புமணியை நீக்கி உத்தரவிட்டதுடன், அந்த தலைவர் பதவியை தானே எடுத்துக்கொண்டார் ராமதாஸ். இந்த அதிரடி முடிவு அன்புமணியின் ஆதரவாளர்களை அதிர்ச்சியடைய வைத்தது. உடனே ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய அன்புமணி, தலைவராக என்ன தேர்ந்தெடுத்தது கட்சியின் பொதுக்குழுதான். அதனால் தலைவர் பதவியில் இருந்து என்னை நீக்கும் அதிகாரம் பொதுக்குழுவுக்குத்தான் இருக்கிறது.
அதனால் இப்போதும் நான் தான் தலைவர். நமது பாட்டாளி சொந்தங்களின் 12 ஆண்டு கனவு. அந்தக் கனவை நிறைவேற்றும் வகையில் சித்திரை முழுநிலவு மாநாட்டை வெற்றிகரமாக நடத்தும் பொறுப்பை என்னிடம் வழங்கிய பாமக நிறுவனர் என்னை ராமதாஸ் மாநாட்டுக்குழு தலைவராக நியமித்திருக்கிறார். அரசியல் களத்தில் அவரின் லட்சியங்களை வென்றெடுப்பதும், அவருக்கு புகழ் சேர்க்கும் வகையில் பாட்டாளி மக்கள் கட்சியை வழிநடத்திச் செல்வதும் எனது முழு முதல் கடமை, என்று அன்புமணி ராமதாஸ் குறிப்பிட்டு இருந்தார்.

ஒரு பக்கம் பாமகவில் சின்ன ஐயா - பெரிய ஐயா இடையே மோதல் நடந்து கொண்டு இருக்கிறது. பெரிய அய்யாவின் கை ஓங்கி உள்ளது. இன்னொரு பக்கம் பாஜகவிற்கு புதிய "தல" வந்திருக்கிறார். மலை.. அண்ணாமலை போய்.. புதிய தலையாக நயினார் நாகேந்திரன் வந்துள்ளார்.
அரசியல் பதிவல்ல
ஆனால் நீங்கள் நினைப்பது போல இது அரசியல் பதிவல்ல.. கிரிக்கெட் பதிவு. சிஎஸ்கேவின் கேப்டனாக மீண்டும் தல தோனி திரும்பி வந்துள்ளார். அதோடு இல்லாமல் தோல்வியில் திணறிக்கொண்டு இருந்த சிஎஸ்கே அணியை வெற்றி பாதைக்கு கொண்டு வந்து.. பெரிய ஐயா பெரிய ஐயாதாங்க என்று நிரூபித்து உள்ளார்.
லக்னோ அணியில் மார்ஷ் 30 ரன்கள் எடுத்தார். ரிஷாப் பண்ட் 63 ரன்கள் எடுத்தார். அடுத்தடுத்து பல லக் காரணமாக விக்கெட்டை இழக்காமல் ஆடிய பதோணி 22 ரன்கள் எடுத்தார். மற்றபடி மார்க்ரம், பூரான், மில்லர் என்று அணியின் முக்கிய வீரர்கள் யாரும் சரியாக ஆடவில்லை. சிங்கிள் ரன்களில் இவர்கள் அவுட் ஆக.. சிஎஸ்கே அணி ஆட்டத்தை கண்ட்ரோல் செய்தது. சிஎஸ்கேவில் ஜடேஜா, பத்திரானா தலா 2 விக்கெட்டுகளையும் எடுத்தது. நூர் அஹமது 4 ஓவரில் வெறும் 13 ரன்கள் மட்டும் தந்து விக்கெட் எடுக்காமலே ஆட்டத்தை கட்டுப்படுத்தினார். இதையடுத்து 20 ஓவரில் 166-7 ரன்களை லக்னோ எடுத்தது.
சிஎஸ்கே பேட்டிங் என்ன நடந்தது?
சிஎஸ்கேவில் கண்டா வர சொல்லுங்க கான்வேவை இறக்காமல் அணி சார்பாக ஷேக் ரஷீத் இறக்கப்பட்டார். இவர் 19 பந்தில் 27 ரன்களை எடுத்து நல்ல ஸ்டார்ட் கொடுத்தார். சிஎஸ்கேவிற்கு பவர் பிளேவில் தேவையான வேகத்தை கொடுத்தார். ரச்சின் 22 பந்துகளில் 37 ரன்களை எடுத்தார். ஆனால் இவர்கள் அவுட் ஆன பின் மிடில் ஆர்டர் மீண்டும் மோசமாக சொதப்பியது. மிடில் ஆர்டர் மீண்டும் மெதுவாக ஆடியது. அடுத்தடுத்து விக்கெட் விழுந்த நிலையில் ஷிவம் துபே 43 ரன்களை விக்கெட் இல்லாமல் மெதுவாக ஆடி எடுத்தார்.
ஆனால் இன்னொரு பக்கம் தோனி 26 ரன்களை வெறும் 11 பந்துகளில் எடுத்தார். இதில் 4 சிக்ஸ், 1 பவுண்டரி அடக்கம். சிஎஸ்கே அணிக்கு தொடர்ந்து தோனி சிறப்பாக பேட்டிங் பங்களிப்பு கொடுத்து வருகிறார். இதனால் சிஎஸ்கே அணி 19.3 ஓவரில் 168-5 ரன்களை எடுத்து வென்றது. சிஎஸ்கே அணி தொடர் தோல்வியில் இருந்து மீண்டும் 2025 ஐபிஎல் சீசனில் இரண்டாவது வெற்றியை பதிவு செய்துள்ளது












Click it and Unblock the Notifications