திறமையானவர்கள் பலர் இருக்கும் போது.. விஜய் சங்கருக்கு எப்படிங்க தொடர்ந்து வாய்ப்பு வருது? ஷாக்
சென்னை: கிரிக்கெட் வீரர் விஜய் சங்கர் இன்றும் சிஎஸ்கே அணிக்காக பேட்டிங்கில் சொதப்பி உள்ளார். முக்கியமாக அவர் முதல் பந்தே கேட்ச் கொடுத்து அவுட்டாகும் நிலைக்கு சென்றது அதிர்ச்சி அளித்தது.
கடந்த 2 போட்டிகளில் விஜய் சங்கர் 7 முறை கேட்ச் கொடுத்து மிஸ் ஆகி உள்ளார். என் விக்கெட்டை எடுத்துக்கோங்க என்று வாரி வாரி வழங்கி உள்ளார். அப்படி கேட்ச் கொடுத்து மிஸ் ஆகியும் கூட அதை பயன்படுத்தி இவர் சிறப்பாக ஆடவில்லை. மாறாக தொடர்ந்து மின் மோசமாக ஆடி சொதப்பி வருகிறார்.
தற்போது கொல்கத்தா - சிஎஸ்கே அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நடந்து கொண்டு இருக்கிறது. இந்த முறையும் ரச்சின் ரவீந்திரா 9 பந்தில் 4 ரன்களை எடுத்து சொதப்பினார். அதோடு 11 பந்தில் 12 ரன்களை எடுத்து கான்வே அவுட் ஆனார். இன்னொரு பக்கம் டெஸ்ட் இன்னிங்ஸ் ஆடிய ராகுல் திரிப்பாதி 16 பந்துகளில் 22 ரன்கள் எடுத்தார்.

21 பந்தில் விஜய் சங்கரும் மோசமாக ஆடி 29 ரன்கள் எடுத்தார். 7 பந்துகள் குடித்த அஸ்வின் 1 ரன் மட்டுமே எடுத்தார். ஜடேஜா டக் அவுட். தோனி 1 ரன்னுக்கு அவுட் என்று அதிர்ச்சி கொடுத்தனர். முதல் 8 ஓவர்களிலேயே சிஎஸ்கே 24 பந்துகளை டாட் வைத்தது. இடையில் தேவையின்றி இறக்கப்பட்ட ஹூடா டக் அவுட் ஆனார்.
விஜய் சங்கர் தொடர் சொதப்பல்
முக்கியமாக விஜய் சங்கர் முதல் பந்தே கேட்ச் கொடுத்து அவுட்டாகும் நிலைக்கு சென்றது அதிர்ச்சி அளித்தது. கடந்த 2 போட்டிகளில் விஜய் சங்கர் 7 முறை கேட்ச் கொடுத்து மிஸ் ஆகி உள்ளார். விஜய் சங்கருக்கு மட்டும் எப்படி விடாமல் வாய்ப்புகள் வருகின்றன என்பது சொல்ல முடியாத புதிராக உள்ளது.
2019 உலகக் கோப்பை
விஜய் சங்கர் இந்திய அணியின் நம்பர் 4 இடத்திற்கு தேர்வு செய்யப்பட்டார், ஆனால் மூன்று போட்டிகளில் மட்டுமே விளையாடி, 58 ரன்கள் (சராசரி: 29) எடுத்தார். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இரண்டு விக்கெட்டுகள் எடுத்தார். பின்னர், காயம் காரணமாக தொடரில் இருந்து விலகினார்.
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) சொதப்பல்
2019 ஐபிஎல்: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக 15 போட்டிகளில் விளையாடி, 244 ரன்கள் (சராசரி: 20.33) மட்டுமே எடுத்தார், மற்றும் ஒரு விக்கெட் பெற்றார். இந்த மோசமான ஆட்டம் ரசிகர்களிடையே விமர்சனங்களை ஏற்படுத்தியது..
2022 ஐபிஎல்: குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக 4 போட்டிகளில் விளையாடி, 19 ரன்கள் (சராசரி: 4.75, ஸ்ட்ரைக் ரேட்: 54.29) மட்டுமே எடுத்தார். மேலும், 9 பந்துகள் வீசியும் எந்த விக்கெட்டும் பெறவில்லை.
2024 ஐபிஎல்: பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், 10 பந்துகளில் 8 ரன்கள் மட்டுமே எடுத்தார், இது ரசிகர்களிடையே மீண்டும் விமர்சனங்களை ஏற்படுத்தியது.
இத்தகைய செயல்பாடுகள் விஜய் சங்கரின் தேர்வுகள் மற்றும் அணியில் அவரது இடத்தைப் பற்றிய கேள்விகளை எழுப்பி, அவருக்கு மட்டும் எப்படி வாய்ப்பு கிடைக்கிறது என்ற கேள்வியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சீசனிலும் அவர் இதுவரை சரியாக ஆடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications