பலரும் கவனிக்காத சுயநலம்.. சிஎஸ்கே அணியை மறைமுகமாக காவு வாங்கும் ருத்துராஜ்.. என்ன நடந்தது?
சென்னை: சிஎஸ்கே அணியின் தோல்விக்கு அணியின் கேப்டன் ருத்துராஜின் சுயநலமும் முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது. இந்த சீசன் முழுக்க ருத்துராஜ் மிக மோசமாக ஆடி உள்ளார். சிஎஸ்கே அணியின் தொடர் தோல்விக்கு பல காரணங்கள் உள்ளன. ஆனால் கேப்டன் ருத்துராஜ் கெய்க்வாட் இதற்கு முக்கியமான காரணமாக மாறி உள்ளார்.
அதிலும் அவர் பேட்டிங் ஆர்டரை மாற்றியது இதற்கு ஒரு முக்கியமான காரணம் ஆகும். அவர் இங்கே சுயநலமாக முடிவு எடுத்துள்ளார். அவர் தற்போது ஓபனிங் இறங்காமல் ஒன் டவுன் இறங்குகிறார்.

மும்பைக்கு எதிரான முதல் போட்டியில் 26 பந்துகளில் 53 ரன்கள் எடுத்தார்.
பெங்களூருக்கு எதிரான இரண்டாவது போட்டியில் 4 பந்துகளில் 0 ரன்கள் எடுத்தார்.
ராஜஸ்தானுக்கு எதிரான மூன்றாவது போட்டியில் 44 பந்துகளில் 63 ரன்கள் எடுத்தார்.
டெல்லிக்கு எதிரான நான்காவது போட்டியில் 4 பந்துகளில் 5 ரன்கள் எடுத்தார்.
நேற்று பஞ்சாபிற்கு எதிரான ஐந்தாவது போட்டியில் 3 பந்துகளில் 1 ரன்கள் எடுத்தார்.
அவர் ஒன் டவுன் இறங்கி எடுத்த ஸ்கோர்கள் இவை. 3 போட்டிகளில் மோசமாக சொதப்பி உள்ளார். அவர் ஓபனிங் இறங்குவதே அணிக்கு பலம். ஆனால் ஒன் டவுன் இறங்குவதில் பிடிவதாக இருக்கிறார்.
மோசமான நிலை
அவர் ஓபனிங் இறங்கி ஒரே சீசனில் அதிக ரன்கள் எடுத்து சாதனை எல்லாமே படைத்துள்ளார். ஆனால் இந்த முறை ஒன் டவுன் இறங்குகிறார். இதற்கு காரணம் இந்திய அணியில் ஓபனிங் ஸ்பாட் முழுமையாக உள்ளது. ஆனால் ஒன் டவுன் இறங்க எதிர்காலத்தில் இடம் கிடைக்கும். அணியில் வாய்ப்பு கிடைக்கும்.
இதனால் எதிர்காலத்தில் இடம் கிடைக்கும் என்பதால்.. இந்திய அணிக்காக சிஎஸ்கேவை காவு வாங்கி வருகிறார். சிஎஸ்கே அணியின் கேப்டன் ருத்துராஜ் கெய்க்வாட் அணி பற்றி.. ஆட்டம் பற்றி சீரியஸாக நினைப்பது இல்லை. அவர் வெறும் 50 ரன்களில் தோல்வி அடைந்தோம் என்று ஒரு ஆட்டத்தில் கூறினார். அதுவே அவரின் மனநிலையை காட்டுகிறது. அவர் ஒரு ஆட்டத்திற்கு பின் பேசும் பேச்சுக்கள் சரியாக இல்லை. ஆட்டத்தின் தோல்விக்கு பின் சகிக்க முடியாத அளவிற்கு பேசுகிறார். அவர் தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் பிடிவாதமாக இருக்கிறார். சிஎஸ்கே மேனேஜ்மேண்ட் செய்யும் தவறுகளை.. தான் செய்யும் தவறுகளை அவர் ஏற்றுக்கொள்ளாமல் இருக்கிறார்.
அவர் கடுமையான பிரஷரில் இருக்கிறார். அவரால் அவரின் மனதில் நினைக்கும் விஷயங்களை பேச முடியவில்லை. முக்கியமாக தோனி தொடர்பான விவகாரங்களில் அவரால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை. தோனி இன்னும் முன்னால் இறங்க வேண்டும். அவரின் ஆர்டரை மாற்ற வேண்டும். ஆனால் ருத்துராஜால் அந்த முடிவை எடுக்க முடியவில்லை. உலகத்திற்கே தெரியும் தோனி பார்மில் இல்லை என்று. ருத்துராஜூக்கும் தெரியும். ஆனால் ருத்துராஜால் முடிவு எடுக்க முடியாது. அவரால் அணியில் சுதந்திரமான முடிவுகளை எடுக்க முடியவில்லை.
முடிவுகளில் சொதப்பல்
பவர் பிளேவை அஸ்வின் சரியாக போடுவது இல்லை என்று தெரிந்தும் அவருக்கு வாய்ப்பு தருகிறார். அவரை இறக்காமல் போனாலும்.. வேறு ஸ்பின் பவுலரையே கொண்டு வர மாட்டேன் என்று பிடிவாதமாக இருந்தார். நூரை களமிறக்கி டெஸ்ட் செய்து இருக்கலாம். ஆனால் செய்யவில்லை. முகேஷ் சவுத்திரி மீண்டும் மீண்டும் மோசமாக பவர் பிளேவில் வீசியும் அவருக்கு 3 ஓவர்களை கொடுக்கிறார்.
குறைந்த பட்சம் 16 ஓவர்களில் ஸ்பின் ஓவர் கோட்டாவை முடிக்க முடியவில்லை. ஜடேஜாவிற்கு எல்லாம் ஓவர் மீதம் வைக்கிறார். சேப்பாக்கம் மைதானத்தில் ஜடேஜா போன்றவர்களை கூட 4 ஓவர்கள் போடாமல் நிறுத்தியது மோசமான முடிவாக பார்க்கப்படுகிறது.
அஸ்வின் மும்பைக்கு எதிரான முதல் ஆட்டத்தில் மட்டுமே கொஞ்சம் சுமாராக ஆடினார். 4 ஓவரில் 1 விக்கெட் எடுத்தார். அதோடு 31 ரன்கள் கொடுத்தார். பெங்களூருக்கு எதிரான ஆட்டத்தில் அவரின் பவுலிங் எடுபடவில்லை. மிக மோசமான பவுலிங்கை அவர் வீசினார். பெங்களூருக்கு எதிரான மேட்சில் 2 ஓவர் வீசியவர் 22 ரன்களை கொடுத்தார். 1 விக்கெட் எடுத்தார். ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அவரின் பவுலிங் இன்னும் மோசம் ஆனது. 4 ஓவரில் 46 ரன்கள் கொடுத்தார். 1 விக்கெட் எடுத்தார். இதில் எந்த போட்டியிலும் அவரின் பேட்டிங் சரியாக இல்லை. மிக மோசமாகவே இருந்தது. ருத்துராஜ் அவரை அணியில் எடுத்தது தவறாக பார்க்கப்படுகிறது.
முக்கியமாக அவர் போடும் ஆப் ஸ்பின் சரியாக இல்லை. அதிகமாக கேரம் பால் போடுகிறார். முக்கியமாக பவர் பிளேவை சொதப்புவதே அவர்தான். பேட்டிங்கிலும் சரியாக ஆடுவது இல்லை என்று விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன.
முகேஷுக்கு பதிலாக அணியில் அன்ஷுல் காம்போஜை எடுத்திருக்கலாம். அவர் உயரமான, வேகப்பந்து வீச்சாளர் ஆவார். தனது பவுலிங் மூலம் இந்தியாவின் உள்நாட்டு கிரிக்கெட் வட்டாரத்தில் அலைகளை உருவாக்கி வருகிறார். பிப்ரவரி 2022 இல் திரிபுராவுக்கு எதிரான ரஞ்சி டிராபி ஆட்டத்தில் உள்நாட்டு போட்டிகளில் முதல்முறையாக அறிமுகமானார். 2023-24 விஜய் ஹசாரே சீசனில் 10 ஆட்டங்களில் 17 விக்கெட்டுகளை வீழ்த்தி கவனம் பெற்றார். அந்த சீசனில் ஹரியானா வெற்றிபெற காரணமாக இருந்தார்.
நவம்பர் 2024 இல், அன்ஷுல் காம்போஜ், கேரளாவுக்கு எதிராக ரஞ்சி கோப்பையில்
ஒரு இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளையும் எடுத்த மூன்றாவது பந்துவீச்சாளர் என்ற வரலாற்றைப் படைத்தார். 2024 ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸால் தேர்ந்தெடுக்கப்பட்டார், மூன்று ஆட்டங்களில் விளையாடி இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். 2025 ஐபிஎல் சீசனில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அன்ஷுல் கம்போஜ் ஏலத்தில் எடுக்கப்பட்டார். ஆனால் முகேஷுக்குத்தான் வாய்ப்பு கொடுப்போம் என்று கேப்டன் பிடிவாதமாக இருந்தது கடுமையான விமர்சனங்களை சந்தித்துள்ளது. ஆனால் இதை எல்லாம் செய்யாமல் தொடர்ந்து தவறுகளை செய்கிறார்.
முக்கியமாக பீல்டிங் நிற்க வைப்பதில் கூட அவர் சொதப்புகிறார். யாரை எங்கே நிற்க வைக்க வேண்டும் என்பது தெரியவில்லை. ஓவர் ரொட்டேஷன் தெரியவில்லை.. யாரை எப்போது மாற்ற வேண்டும் என்று தெரியவில்லை. இதே பவர்களை தோனியிடம் கொடுத்தால் அவர் வேறு மாதிரி அணியை வழிநடத்துவார். ஆனால் இப்போது ருத்துராஜின் கேப்டன்சி மிக மோசமாக உள்ளது. முக்கியமாக சிஎஸ்கே அணியின் தோல்விக்கு அணியின் கேப்டன் ருத்துராஜின் சுயநலமும்.. அதாவது ஒன் டவுன் இறங்க வேண்டும் என்ற அவரின் பிடிவாதமும் முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications