பப்ளிசிட்டி ஸ்டண்ட்.. ரசிகர்களை கேவலமாக.. முட்டாள்களாக நினைத்தாரா தோனி.. சிஎஸ்கேவின் கொடும் தவறு
சென்னை: நேற்று பெங்களூர் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே அணி மிக மோசமாக ஆடி தோல்வி அடைந்தது. சேப்பாக்கம் மைதானத்தில் 18 வருடங்களுக்கு பின்.. அதுவும் 50 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்து உள்ளது.
நேற்று நடந்த ஆட்டத்தில் சிஎஸ்கே அணி தோல்வி அடைந்ததை விட... மூத்த வீரர் தோனி நடந்து கொண்ட விதம்தான் கடுமையான விமர்சனங்களை சந்தித்தது.

1. நேற்று இக்கட்டான நேரத்தில் எல்லாம் தோனி இறங்கவே இல்லை. அஸ்வினை இறக்கிவிட்டவர் அவர் போன பின்பே களத்திற்கு வந்தார்.
2. கீப்பர் ஒருவர் 9வது விக்கெட்டிற்கு இறங்குவது எல்லாம்.. இந்திய கிரிக்கெட்டில் 90 களில் நடக்கும். விக்கெட் கீப்பர் ஒருவர் நல்ல பேட்ஸ்மேனாக இருப்பதெல்லாம் அப்போது அபூர்வம். அதை இப்போது சிஎஸ்கேவில் கடைபிடிக்கிறார் தோனி.
3. அதிலும் இக்கட்டான நேரத்தில் இறங்கிய தோனி முதல் பால் டொக் வைக்கிறார்.
4. கடைசி ஓவரில் சில பந்துகள் வரை சிக்ஸ், பவுண்டரி அடிக்க கூட பயப்படுகிறார்.
5. கடைசியில் மேட்ச் கைவிட்டு போன பின்.. இப்போ பாரு ஆட்டத்தை என்று சொல்லும் அளவிற்கு தேவையின்றி சிக்ஸ் பவுண்டரி என்று பப்ளிசிட்டி ஸ்டண்ட் போல அடிக்கிறார்.
6. நாம் மோசமாக ஆடினாலும் பரவாயில்லை. சிஎஸ்கே தோற்றாலும் பரவாயில்லை. கடைசியில் ஒரு பப்ளிசிட்டி ஸ்டண்ட் அடிக்கலாம் என்பது போல ஆடினார்.
7. என்ன நடந்தால் என்ன.. கடைசியில் சில சிக்ஸ் அடித்தால்.. சிஎஸ்கே ரசிகர்கள் "அவன் கிடக்கிறான்.. இது நல்லாருக்கு" என்று பின்னாடியே வந்துவிடுவார்கள் என்று தோனி நினைக்கிறார் போல.. அதாவது ரசிகர்களை இளக்காரமாக.. கேவலமாக நினைக்கிறார் போல.
8. சிஎஸ்கேவின் இந்த மனோபாவம்... அவர்கள் தங்களின் உண்மையான ரசிகர்களுக்கு செய்யும் கொடும் தவறாக பார்க்கப்படுகிறது.
மேட்ச் ரிப்போர்ட்
சிஎஸ்கே - பெங்களூர் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 2025 தொடரின் லீக் ஆட்டம் விறுவிறுப்பாக நடந்தது. இதில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது. தொடக்கத்திலேயே வேகம் எடுத்த சால்ட் விடாமல் அடித்தார். அதிலும் அஸ்வின் ஓவரில் எல்லாம் கண்ணை மூடிக்கொண்டு சிக்ஸ், பவுண்டரி என்று 16 கைகள் எடுத்தார். ஒரு பக்கம் படிதார் எளிதாக அரைசதம் அடித்தார். கடைசி கட்டத்தில் அடுத்தடுத்து கொஞ்சம் விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே மீண்டும் ஆட்டத்திற்குள் வந்தது. முக்கியமாக முதல் இன்னிங்சில் கடைசி 3 ஓவர்களில் அடுத்தடுத்து விழுந்த விக்கெட்டால் சிஎஸ்கே ஆட்டத்திற்குள் வந்தது.
அதிலும் பதிரானாவின் 19வது ஓவரில் 1 ரன், 2 விக்கெட் எடுக்கப்பட்டது. ஆனால் கடைசி ஓவரில் போன ஹாட் டிரிக் சிக்ஸ் காரணமாக மீண்டும் பெங்களூர் டிரைவர் சீட்டில் அமர்ந்தது. இதனால் பெங்களூர் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 196 ரன்கள் எடுத்தது. இறங்கிய சிஎஸ்கே அணி பேட்டிங்கில் சொதப்பி உள்ளது. சிஎஸ்கே அணியின் மிடில் ஆர்டரில் ஆங்கர் வீரர் யாரும் இல்லாதது வெட்ட வெளிச்சம் ஆகி உள்ளது. அதாவது ஓப்பனிங் சொதப்பினால்.. மிடில் ஆர்டரில் சிஎஸ்கே அணியை காக்க யாரும் இல்லாத சூழல் உள்ளது. திரிப்பாதி, தீபக் ஹூடா, ருத்துராஜ், துபே எல்லாம் சொற்ப ரன்களில் அவுட் ஆனார்கள். ரச்சின், ஜடேஜா மட்டுமே நம்பிக்கை அளித்த நிலையில் சிஎஸ்கே அணி 146-8 ரன்கள் எடுத்து 50 ரன்கள் வித்தியாசத்தில் மோசமாக தோற்றது.












Click it and Unblock the Notifications