என்னய்யா இது 17 வயசு பையன் அடிக்கிறான்.. உங்களால் முடியாதா? சிஎஸ்கே வீரர்களை லைவில் விளாசிய சீக்கா
சென்னை: சிஎஸ்கேவின் மூத்த வீரர்கள் இன்றும் பேட்டிங்கில் சொதப்பியது ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. முன்னாள் கிரிக்கெட் வீரரும் வர்ணனையாளருமான கிரிஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் இதையடுத்து சிஎஸ்கே வீரர்களை கடுமையாக விமர்சனம் செய்தார்.
இன்று சிஎஸ்கே, மும்பை அணி இரண்டு மாற்றங்களுடன் களமிறங்கியது. சிஎஸ்கே அணி இன்று ஆயுஷ் மாத்ரேவை முதல்முறையாக களமிறக்கியது. இவருக்கு 17 வயதுதான் ஆகிறது. இன்று ஆடும் சிஎஸ்கே அணியில் ஷேக் ரஷீத், ரச்சின் ரவீந்திரா, ஆயுஷ் மத்ரே, ரவீந்திர ஜடேஜா, ஷிவம் துபே, விஜய் சங்கர், ஜேமி ஓவர்டன், எம்எஸ் தோனி , நூர் அகமது, கலீல் அகமது, மதீஷா பத்திரனா ஆகியோர் இடம்பெற்று இருந்தனர்.
மும்பை அணியில் ரியான் ரிக்கல்டன் (வாரம்), வில் ஜாக்ஸ், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா (கேட்ச்), நமன் திர், மிட்செல் சான்ட்னர், தீபக் சாஹர், டிரெண்ட் போல்ட், ஜஸ்பிரிட் பும்ரா, அஷ்வனி குமார் ஆகியோர் இடம்பெற்று இருந்தனர்.
சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங் செய்த நிலையில் ரச்சின் ரவீந்திரா மிக மோசமாக மெதுவாக ஆடினார். 9 பந்துகளை பிடித்த அவர் வெறும் 5 ரன்கள் மட்டுமே எடுத்தார். டெஸ்ட் போட்டிக்கு இணையாக மெதுவாக உருட்டினார். அவர் அவுட் ஆனதும். சிஎஸ்கே அணி இன்று ஆயுஷ் மாத்ரேவை முதல்முறையாக களமிறக்கியது. இவருக்கு 17 வயதுதான் ஆகிறது.

இவர் இறங்கியதும் ஆயுஷ் மாத்ரே- ஷேக் ரஷீத் இருவரும் வேகம் காட்டினார். அதிலும் இறங்கிய உடனே பவுண்டரி, சிக்ஸ் என்று ஆயுஷ் மாத்ரே பறக்கவிட்டார். 4 பவுண்டரி, 2 சிக்ஸ் என்று மும்பை அணிக்கு பிரஷர் போட்டார். இது அவரின் ஹாம் கிரவுண்டு. மும்பையில்தான் அவர் பயிற்சி பெற்று வருகிறார். இதனால் அந்த பிட்ச் அவருக்கு சாதகமாக இருந்தது. 32 வெறும் 15 பந்துகளில் எடுத்து அவுட் ஆனார்.
இன்னொரு பக்கம் ஷேக் ரஷீத் 20 பந்துகளில் 19 ரன்கள் எடுத்தார். அவர் அவுட்டான பின் ஆட்டம் மெதுவாக மாறியது. மிடில் ஓவர்களில் சிஎஸ்கே வீரர்கள் துபே, ஜடேஜா மோசமாக உருட்டினார்கள். விக்கெட் செல்ல கூடாது என்பதற்காக டெஸ்ட் இன்னிங்ஸ் ஆடினார்கள். ஸ்பின் பவுலர்களையும் அடிக்காமல்.. பாஸ்ட் பவுலர்களையும் அடிக்காமல் சொதப்பினார்கள்.
சிஎஸ்கேவின் மூத்த வீரர்கள் இன்றும் பேட்டிங்கில் சொதப்பியது ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. முன்னாள் கிரிக்கெட் வீரரும் வர்ணனையாளருமான கிரிஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் இதையடுத்து சிஎஸ்கே வீரர்களை கடுமையாக விமர்சனம் செய்தார்.
என்னய்யா இது 17 வயசு பையன் அடிக்கிறான்.. உங்களால் முடியாதா? என்று கிண்டல் செய்தார். ஆயுஷ் மாத்ரே தைரியமாக அடித்த நிலையில் துபே, ஜடேஜா பயந்தபடி ஆடியது பலரின் விமர்சனங்களை சந்தித்தது. ஆனால் துபே, ஜடேஜா அதன்பின் கடைசி 6 ஓவர்களில் வேகம் காட்டினார்கள். கடைசி 6 ஓவர்களில் துபே சிக்ஸ், பவுண்டரி அடித்து ஆடினார். ஜடேஜாவும் பவுண்டரி அல்லது ஸ்டிரைக் ரொட்டேட் என்று வேகம் காட்டினார்.
இதனால் 20 ஓவரில் சிஎஸ்கே அணி 176/5 ரன்கள் எடுத்தது. துபே 50(32) ரன்கள் எடுத்தார். ஜடேஜா 53 (35) ரன்கள் எடுத்தார்.
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications