ஜடேஜாலாம் 50 அடிக்கும் போதே தெரிய வேணாமா? மலிங்கா வாடா நீ? மண்ணை கவ்விய சிஎஸ்கே.. டிரெண்டான மீம்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மும்பை அணிக்கு எதிராக நேற்று நடந்த ஐபிஎல் ஆட்டத்தில் சிஎஸ்கே அணி தோல்வி அடைந்தது. இதன் மூலம் சிஎஸ்கே அணி மீண்டும் தோல்வி பாதைக்கு திரும்பி உள்ளது. நெட்டிசன்கள் பலர் இதை வைத்து மீம்ஸ் போட்டு கிண்டலடித்து வருகின்றனர்.

IPL 2025 CSK

நேற்று சிஎஸ்கே, மும்பை அணி இரண்டு மாற்றங்களுடன் களமிறங்கியது. சிஎஸ்கே அணி நேற்று ஆயுஷ் மாத்ரேவை முதல்முறையாக களமிறக்கியது. இவருக்கு 17 வயதுதான் ஆகிறது. இன்று ஆடும் சிஎஸ்கே அணியில் ஷேக் ரஷீத், ரச்சின் ரவீந்திரா, ஆயுஷ் மாத்ரே, ரவீந்திர ஜடேஜா, ஷிவம் துபே, விஜய் சங்கர், ஜேமி ஓவர்டன், எம்எஸ் தோனி, நூர் அகமது, கலீல் அகமது, மதீஷா பத்திரனா ஆகியோர் இடம்பெற்று இருந்தனர்.

IPL 2025 CSK

மும்பை அணியில் ரியான் ரிக்கல்டன் (வாரம்), வில் ஜாக்ஸ், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா (கேட்ச்), நமன் திர், மிட்செல் சான்ட்னர், தீபக் சாஹர், டிரெண்ட் போல்ட், ஜஸ்பிரிட் பும்ரா, அஷ்வனி குமார் ஆகியோர் இடம்பெற்று இருந்தனர்.

IPL 2025 CSK

மோசமான பேட்டிங்

சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங் செய்த நிலையில் ரச்சின் ரவீந்திரா மிக மோசமாக மெதுவாக ஆடினார். 9 பந்துகளை பிடித்த அவர் வெறும் 5 ரன்கள் மட்டுமே எடுத்தார். டெஸ்ட் போட்டிக்கு இணையாக மெதுவாக உருட்டினார். அவர் அவுட் ஆனதும். சிஎஸ்கே அணி நேற்று மாத்ரேவை முதல்முறையாக களமிறக்கியது. இவருக்கு 17 வயதுதான் ஆகிறது.

IPL 2025 CSK

இவர் இறங்கியதும் ஆயுஷ் மாத்ரே- ஷேக் ரஷீத் இருவரும் வேகம் காட்டினர். அதிலும் இறங்கிய உடனே பவுண்டரி, சிக்ஸ் என்று ஆயுஷ் மாத்ரே பறக்கவிட்டார். 4 பவுண்டரி, 2 சிக்ஸ் என்று மும்பை அணிக்கு பிரஷர் போட்டார். இது அவரின் ஹோம் கிரவுண்டு. மும்பையில்தான் அவர் பயிற்சி பெற்று வருகிறார். இதனால் அந்த பிட்ச் அவருக்கு சாதகமாக இருந்தது. வெறும் 15 பந்துகளில் 32 ரன்களை எடுத்து அவுட் ஆனார்.

IPL 2025 CSK

இன்னொரு பக்கம் ஷேக் ரஷீத் 20 பந்துகளில் 19 ரன்கள் எடுத்தார். அவர் அவுட்டான பின் ஆட்டம் மெதுவாக மாறியது. நெட்டிசன்கள் பலர் இதை வைத்து மீம்ஸ் போட்டு கிண்டலடித்து வருகின்றனர்.

IPL 2025 CSK

டெஸ்ட் பேட்டிங்

மிடில் ஓவர்களில் சிஎஸ்கே வீரர்கள் துபே, ஜடேஜா மோசமாக உருட்டினார்கள். விக்கெட் செல்ல கூடாது என்பதற்காக டெஸ்ட் இன்னிங்ஸ் ஆடினார்கள். ஸ்பின் பவுலர்களையும் அடிக்காமல்.. பாஸ்ட் பவுலர்களையும் அடிக்காமல் சொதப்பினார்கள். சிஎஸ்கேவின் மூத்த வீரர்கள் இன்றும் பேட்டிங்கில் சொதப்பியது ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. இதையும் வைத்து நெட்டிசன்கள் பலர் மீம்ஸ் போட்டுள்ளனர்.

IPL 2025 CSK

ஆனால் துபே, ஜடேஜா அதன்பின் கடைசி 6 ஓவர்களில் வேகம் காட்டினார்கள். கடைசி 6 ஓவர்களில் துபே சிக்ஸ், பவுண்டரி அடித்து ஆடினார். ஜடேஜாவும் பவுண்டரி அல்லது ஸ்டிரைக் ரொட்டேட் என்று வேகம் காட்டினார். இதனால் 20 ஓவரில் சிஎஸ்கே அணி 176-5 ரன்கள் எடுத்தது. துபே 50 (32) ரன்கள் எடுத்தார். ஜடேஜா 53 ரன்கள் எடுத்தார்.

ரோஹித் பேட்டிங்

இதையடுத்து இறங்கிய மும்பை அணியில் ரோஹித் சர்மா தொடக்கத்தில் இருந்தே அதிரடி காட்டினார். 45 பந்தில் 4 பவுண்டரி 6 சிக்ஸர் என்று விளாசினார். ரோஹித் சர்மா 76 ரன்கள் எடுத்த நிலையில் இன்னொரு பக்கம் சூர்ய குமார் யாதவும் மாஸ் காட்டினார். 68 ரன்களை 30 பந்தில் எடுத்ததோடு 6 பவுண்டரி 5 சிக்ஸ் அடித்தார். இதனால் எளிதாக 15.4 ஓவரில் சிஎஸ்கே அணி 177-1 ரன்களை எடுத்து வென்றது.

IPL 2025 CSK

சிஎஸ்கேவின் பவுலிங், மோசமான பேட்டிங் ஆகியவற்றை வைத்து நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு கிண்டலடித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+