அயோத்தி ராமர் கோயிலில் சூர்யகுமார், திலக் வர்மா.. மும்பை வீரர்கள் செய்த பூஜை.. காரணமே அதுதான்!
லக்னோ: மும்பை அணியின் நட்சத்திர வீரர்களான சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, தீபக் சஹர் மற்றும் கரண் சர்மா ஆகியோர் அயோத்தி ராமர் கோயிலுக்கு சென்றுள்ளனர். அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவிற்கு விராட் கோலி, தோனி, ரோஹித் சர்மா உள்ளிட்ட பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்ட போதும், அவர்கள் யாரும் பங்கேற்கவில்லை. இதுவரை அயோத்தி ராமர் கோயிலில் பெரிதாக கிரிக்கெட் வீரர்கள் பிரார்த்தனை செய்திடாத சூழலில், மும்பை வீரர்கள் சென்றிருப்பது பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.
கடந்த மாதம் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு அணிகளின் ஆட்டமும் ரசிகர்களின் கணிப்புகளை பொய்யாக்கி புதிய உற்சாகத்தை அளித்து வருகிறது. அதேபோல் இம்முறை ஐபிஎல் கிரிக்கெட் நிர்வாகம் தரப்பில் இம்முறை புதிய சடங்குகள் பின்பற்றப்பட்டு வருகின்றன.

ஐபிஎல் தொடரில் புதிய சடங்கு
இந்த தொடர் தொடங்குவதற்கு முன்பாக ஒவ்வொரு அணிகளும் பூஜை செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன. கேகேஆர் அணியின் பயிற்சி முகாம் தொடங்கிய போது கேப்டன் அஜிங்கியா ரஹானே ஸ்டம்புகளுக்கு பூஜையை போட்டி பயிற்சியை தொடங்கினர். இதனை ஒரு பக்கம் சேர்த்தால், பஞ்சாப் அணி ஒரு அறையில் அமர்ந்து கொண்டு நீண்ட நேரம் பூஜையில் ஈடுபட்டது.
சிறப்பு பூஜைகள்
அதிலும் ஹாட்ரிக் உலகக்கோப்பையை வென்று கொடுத்த கேப்டனான ரிக்கி பாண்டிங் பூஜையில் முன்னிலையில் நின்றிருந்தார். அந்த இடத்தில் பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் கூட காணப்படவில்லை. அதேபோல் டெல்லி அணி வீரர்கள் அனைவரும் கோயிலுக்கு அழைத்து செல்லப்பட்டு சிறப்பு பஜனையிலேயே ஈடுபட்டனர்.
மும்பை vs லக்னோ
இந்த சம்பவங்கள் தொடர்பாக ரசிகர்கள் இடையே ஆதரவாகவும், எதிராகவும் கருத்துகள் வந்தது. இந்த நிலையில் நாளை மும்பை அணி விளையாடவுள்ள போட்டியில் லக்னோ அணியை எதிர்த்து களமிறங்கவுள்ளது. இதுவரை மும்பை அணி விளையாடியுள்ள 3 போட்டிகளில் 2 தோல்வி, ஒரு வெற்றியுடன் புள்ளிப் பட்டியலில் 5வது இடத்தில் இருக்கிறது.
அயோத்தி ராமர் கோயில்
இந்த நிலையில் லக்னோ அணிக்கு எதிரான முக்கியமான போட்டியில் மும்பை அணி களமிறங்குகிறது. இதற்காக மும்பை அணி வீரர்கள் முன்னதாக லக்னோ வந்திறங்கினர். அதுமட்டுமல்லாமல் ஐபிஎல் தொடரில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக மும்பை அணியின் முக்கிய வீரர்களான சூர்யகுமார் யாதவ், தீபக் சஹர், திலக் வர்மா மற்றும் கரண் சர்மா ஆகியோர் அயோத்தி ராமர் கோயிலில் பிரார்த்தனை மேற்கொண்டுள்ளனர்.
தவிர்க்கும் தோனி
கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் அயோத்தி ராமர் கோயில் திறக்கப்பட்டது. இந்த கோயில் திறப்புக்கு இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்களான தோனி, விராட் கோலி, ரோஹித் சர்மா உள்ளிட்ட பலரும் நேரில் சென்று அழைக்கப்பட்டிருந்தனர். ஆனால் அவர்களில் யாருமே இதுவரை அயோத்தி ராமர் கோயிலுக்கு சென்றதில்லை. ஜடேஜா மட்டுமே ராமர் கோயிலுக்கு சென்றிருந்தார். தற்போது மும்பை அணி வீரர்கள் அயோத்தி ராமர் கோயிலில் பிரார்த்தனை மேற்கொண்டுள்ளனர். இது தமிழக ரசிகர்களிடையே விவாதமாகி வருகிறது.












Click it and Unblock the Notifications