இந்த சீசனயே சாமிக்கு விட்டோம்னு ஒரே போடா போடுங்கடா.. சிஎஸ்கேவை விளாசிய ஃபேன்ஸ்.. அசத்தல் மீம்ஸ்
சென்னை: நேற்று டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கே அணி தோல்வி அடைந்த நிலையில் சிஎஸ்கே அணியை கலாய்த்து நெட்டிசன்கள் பலரும் மீம்ஸ் போட்டு வருகின்றனர்.
நேற்று சிஎஸ்கே அணியின் பேட்டிங், பவுலிங், பீல்டிங் என்று எல்லாமே மிக மோசமாக இருந்தது. முக்கியமாக சிஎஸ்கே அணியில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ரச்சின் ரவீந்திரா, தேவன் கான்வே , ருத்துராஜ் , துபே என்று டாப் ஆர்டர் மொத்தமாக சரிந்தது. மிடில் ஆர்டரில் ஜடேஜாவும் மோசமாக சொதப்பினார். பவுலிங்கில் பதிரானா, நூர் தவிர மற்ற எல்லோரும் மிக மோசமாக சொதப்பினர். இதை வைத்து நெட்டிசன்கள் பலரும் மீம்ஸ் போட்டு வருகின்றனர்.

சிஎஸ்கே தோல்வி மீம்ஸ்
நேற்று சென்னை சேப்பாக்கத்தில் நடந்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கே அணி தோல்வி அடைந்தது. முதலில் இறங்கிய டெல்லி அணி 183/6 (20) ரன்கள் எடுத்தது. கே.எல் ராகுல் 77 ரன்கள் எடுத்து அசால்ட்டாக சிஎஸ்கே அணிக்கு பிரஷர் போட்டார். அவரை அடுத்து இறங்கிய சிஎஸ்கே அணியில் டாப் ஆர்டர் சீட்டு கட்டு போல சரிந்தது. விஜய் சங்கர் மட்டும் 54 பந்தில் 69 ரன்கள் எடுத்தார். இன்னொரு பக்கம் டெஸ்ட் இன்னிங்ஸ் ஆடிய தோனி 26 பந்தில் 30 ரன்கள் எடுத்தார்.

மற்ற வீரர்கள் யாரும் 20 ரன்கள் கூட எடுக்காத நிலையில் சிஎஸ்கே அணி மோசமாக படுதோல்வி அடைந்தது. இதன் மூலம் 4 போட்டிகளில் முதல் போட்டியை தவிர மற்ற போட்டிகளில் வரிசையாக சிஎஸ்கே அணி தோல்வி அடைந்து உள்ளது.
மோசமான கேப்டன்சி மீம்ஸ்
கேப்டனாக பவுலிங் ரொட்டேஷன் தொடங்கி பீல்டர் செட்டப் வரை பலவற்றில் கேப்டன் ருத்துராஜ் சொதப்பினார். பவர் பிளேவை அஸ்வின் சரியாக போடுவது இல்லை என்பதால் இன்று நடந்த மேட்சில் பவர் பிளேவில் அவரை கொண்டு வரவில்லை.

அது சரியான முடிவு என்று பார்த்தால்.. அதற்காக வேறு ஸ்பின் பவுலரையும் பவர் பிளேவிலும் கொண்டு வர மாட்டேன் என்று பிடிவாதமாக இருந்தார். நூரை களமிறக்கி டெஸ்ட் செய்து இருக்கலாம். ஆனால் செய்யவில்லை. முகேஷ் சவுத்திரி மீண்டும் மீண்டும் மோசமாக பவர் பிளேவில் வீசியும் அவருக்கு 3 ஓவர்களை கொடுத்தார். இதை வைத்தும் நெட்டிசன்கள் பலரும் மீம்ஸ் போட்டு வருகின்றன.
டிரெண்டான மீம்ஸ்
குறைந்தபட்சம் 16 ஓவர்களில் ஸ்பின் ஓவர் கோட்டாவை முடிக்க முடியவில்லை. முகேஷுக்கு 2 ஓவர்கள் மட்டும் தொடக்கத்தில் கொடுத்து ஸ்பின் பவுலர்களை முன்பே இறக்கி கோட்டாவை முடித்து இருந்தால் கடைசியில் முகேஷுக்கு கூடுதல் ஓவர் கொடுக்க வேண்டி இருக்காது. ஆனால் அவர் போட்ட 19வது ஓவரில் தேவையின்றி சிக்ஸ், பவுண்டரி சென்று ஆட்டம் மாறியது.

ருத்துராஜ் செய்த தவறால் கடைசி 4 ஓவர்களில் தரமான பவுலிங் போட சரியான பவுலர்கள் இல்லாத நிலை இருந்தது. சேப்பாக்கம் மைதானத்தில் ஜடேஜா போன்றவர்களை கூட 4 ஓவர்கள் போடாமல் நிறுத்தியது மோசமான முடிவாக பார்க்கப்படுகிறது.
அஸ்வின் மும்பைக்கு எதிரான முதல் ஆட்டத்தில் மட்டுமே கொஞ்சம் சுமாராக ஆடினார். 4 ஓவரில் 1 விக்கெட் எடுத்தார். அதோடு 31 ரன்கள் கொடுத்தார். பெங்களூருக்கு எதிரான ஆட்டத்தில் அவரின் பவுலிங் எடுபடவில்லை. மிக மோசமான பவுலிங்கை அவர் வீசினார். பெங்களூருக்கு எதிரான மேட்சில் 2 ஓவர் வீசியவர் 22 ரன்களை கொடுத்தார். 1 விக்கெட் எடுத்தார். ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அவரின் பவுலிங் இன்னும் மோசம் ஆனது. 4 ஓவரில் 46 ரன்கள் கொடுத்தார். 1 விக்கெட் எடுத்தார். இதில் எந்த போட்டியிலும் அவரின் பேட்டிங் சரியாக இல்லை. மிக மோசமாகவே இருந்தது இன்று ருத்துராஜ் அவரை அணியில் எடுத்தது தவறாக பார்க்கப்படுகிறது.







-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications