சாதாரண விஷயம் இல்லை.. இது நினைத்ததை விட பெரிய பிரச்சனை.. சிஎஸ்கேவின் தோல்விக்கு முக்கிய காரணம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நேற்று பெங்களூர் அணிக்கு எதிராக சிஎஸ்கே சொந்த மண்ணில்.. சேப்பாக்கம் மைதானத்திலேயே கடுமையாக தோல்வி அடைந்து உள்ளது. அதுவும் சாதாரண தோல்வி இல்லாமல் 50 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்து உள்ளது . இந்த தோல்விக்கு பின் முக்கியமான பல காரணங்கள் உள்ளன.

IPL 2025 CSK

காரணம் 1 - பவர் பிளே பவுலிங் சொதப்பல்

முதல் ஓவரிலே பெங்களூர் அணியின் சால்ட் அடித்து ஆட தொடங்கினார். அவர் முதல் ஓவரிலேயே இரண்டு பவுண்டரிகளுடன் 9 ரன்கள் எடுத்தார்.

அதன்பின் வேகம் எடுத்த சால்ட் விடாமல் அடித்தார். அதிலும் அஸ்வின் ஓவரில் எல்லாம் கண்ணை மூடிக்கொண்டு சிக்ஸ், பவுண்டரி என்று 16 ரன்கள் எடுத்தார். 5வது ஓவரில் நூர் அஹமது வந்த பின்புதான் ஆட்டம் சூடு பிடிக்க தொடங்கியது. அந்த ஓவரில் சால்டை நிற்க வைத்து பிரஷர் கொடுத்தார். அந்த ஓவரின் கடைசி பந்தில் தோனி அசத்தலான ஸ்டம்பிங் விக்கெட் எடுத்தார்.

அதன்பின் வந்த படிக்கல்லும் இரண்டு சிக்ஸ் என்று பயம் காட்டினாலும் அவரின் விக்கெட்டையும் சிஎஸ்கே எடுத்து ஆட்டத்தை மாற்றியது.


காரணம் 2 - பீல்டிங் சொதப்பல்

நேற்று அடுத்தடுத்து பல கேட்சுகளை சிஎஸ்கே மிஸ் செய்தது. படிதார் அடித்த பந்து, கோலி அடித்தது என்று மாறி மாறி சிஎஸ்கே கேட்சுகளை மிஸ் செய்தது. ராகுல் திரிப்பாதி, தீபக் ஹூடா என்று நல்ல பீல்டர்கள் கூட இன்று கேட்சை மிஸ் செய்தனர்.

15 பந்துகளில் 3 முறை சிஎஸ்கே கேட்சை மிஸ் செய்தது அணிக்கு பெரிய பிரஷர் கொடுக்கும் விதத்தில் மாறியது. நேரடியாக போல்ட் எடுத்தால்தான் உண்டு என்று சொல்லும் அளவிற்கு மோசமாக ஆட்டம் மாறியது. தொடக்கத்திலேயே அவுட் ஆக வேண்டிய படிதார் இதனால் சிஎஸ்கே அணியின் ஸ்பின் பவுலிங்கை பிரித்து எடுக்க தொடங்கினார். பீல்டிங் கோச் யாருப்பா என்று கேட்கும் அளவிற்கு அணியின் பீல்டிங் மோசமாக இருந்தது.

காரணம் 3 - சிஎஸ்கே பவர் பிளே சொதப்பல்

நேற்று சிஎஸ்கே பவர் பிளேவில் கடுமையாக சொதப்பியது. 50+ அடிக்க வேண்டிய சிஎஸ்கே.. 30 எடுக்கவே கடுமையாக திணறியது. காரணம் விக்கெட் விழும் பயம். மைதானத்தில் டியூ இல்லாமல் சிஎஸ்கே அணி கடுமையாக திணறியது.

காரணம் 4 - மிடில் ஆர்டர் சொதப்பல்

இறங்கிய சிஎஸ்கே அணி பேட்டிங்கில் சொதப்பி உள்ளது. சிஎஸ்கே அணியின் மிடில் ஆர்டரில் ஆங்கர் வீரர் யாரும் இல்லாதது வெட்ட வெளிச்சம் ஆகி உள்ளது. அதாவது ஓபனிங் சொதப்பினால்.. மிடில் ஆர்டரில் சிஎஸ்கே அணியை காக்க யாரும் இல்லாத சூழல் உள்ளது.

8 ரன்களுக்கு- முதல் விக்கெட் (ராகுல் திரிபாதி அவுட், 1.2வது ஓவர்),
8 ரன்களுக்கு-2வது விக்கெட் (ருதுராஜ் கெய்க்வாட் அவுட், 1.6வது ஓவர்),
26 ரன்களுக்கு -3வது விக்கெட் (தீபக் ஹூடா அவுட், 4.4வது ஓவர்),
52 ரன்களுக்கு-4வது விக்கெட் (சாம் குர்ரான் அவுட், 8.5வது ஓவர்),
75 ரன்களுக்கு-5வது விக்கெட் (ரச்சின் ரவீந்திரா அவுட், 12.1ஓவர்),
80 ரன்களுக்கு- 6வது விக்கெட், (ஷிவாம் துபே அவுட்) என்று வரிசையாக சிஎஸ்கே டாப் ஆர்டர் மட்டுமன்றி மிடில் ஆர்டரும் சொதப்பி உள்ளது. இங்கே ஓபனிங் சொதப்பியதும்.. தீபக் ஹூடா, சாம் குர்ரான், ஷிவம் துபே ஆகியோர் சொதப்பி விட்டனர். அம்பதி ராயுடு இருந்த போது இப்படி நடந்தது இல்லை. இதன் மூலம் சிஎஸ்கே அணியின் வீக்னஸ் வெட்ட வெளிச்சமாகி உள்ளது.

காரணம் 5 - தோனி சொதப்பல்

நேற்று தோனி மிக மோசமாக கடுப்பேற்றினார். கீப்பர் ஒருவர் 9வது விக்கெட்டிற்கு இறங்குவது எல்லாம்.. இந்திய கிரிக்கெட்டில் 90 களில் நடக்கும். விக்கெட் கீப்பர் ஒருவர் நல்ல பேட்ஸ்மேனாக இருப்பதெல்லாம் அப்போது அபூர்வம். அதை இப்போது சிஎஸ்கேவில் கடைபிடிக்கிறார் தோனி.

அதிலும் இக்கட்டான நேரத்தில் இறங்கிய தோனி முதல் பால் டொக் வைக்கிறார். கடைசி ஓவரில் சில பந்துகள் வரை சிக்ஸ், பவுண்டரி அடிக்க கூட பயப்படுகிறார். சிஎஸ்கேவில் இப்போது இருப்பது சாதாரண விஷயம் இல்லை.. இது நினைத்ததை விட பெரிய பிரச்சனை... பல விஷயங்கள் சிக்கலாக இருக்கிறது. இதை எல்லாம் சிஎஸ்கே சரி செய்ய வேண்டிய நிலையில் உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+