எனர்ஜி ஷிப்ட்.. சிஎஸ்கே ஆட்டத்தில் நடந்ததை கவனிச்சீங்களா.. எல்லாம் மாறிடுச்சே.. அந்த சம்பவம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. இந்த ஆட்டத்தில் சிஎஸ்கே அணி தொடக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய விதம் கவனம் பெற்றது.

இன்று நடக்கும் சிஎஸ்கே மேட்சில் ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), ரச்சின் ரவீந்திரா, தீபக் ஹூடா, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, சாம் குர்ரான், எம்எஸ் தோனி , ரவிச்சந்திரன் அஷ்வின், நூர் அகமது, நாதன் எல்லிஸ், கலீல் அகமது ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

மும்பை அணியில் ரோஹித் ஷர்மா, ரியான் ரிக்கல்டன், வில் ஜாக்ஸ், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, நமன் திர், ராபின் மின்ஸ், மிட்செல் சான்ட்னர், தீபக் சாஹர், டிரெண்ட் போல்ட், சத்தியநாராயண ராஜு ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

சிஎஸ்கே ஆதிக்கம்

இந்த ஆட்டத்தில் சிஎஸ்கே அணி தொடக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய விதம் கவனம் பெற்றது. தொடக்கத்திலேயே கலீல் அஹமது ஓவரில் ரோஹித் சர்மா அவுட் ஆனார். அவர் டக் அவுட் ஆன நிலையில் அந்த ஓவருக்கும் அடுத்த ஓவரிலேயே ரியான் ரிக்கல்டன் விக்கெட்டை கலீல் எடுத்தார். அவரிடம் எனர்ஜி ஷிப்ட் தெரிந்தது .

IPL 2025 What did CSK do against Mumbai Indian in the first Innings

ஹைதராபாத் , டெல்லி அணிகளுக்கு ஆடிய போது கூட அவர் இவ்வளவு சிறப்பாக ஆடியது இல்லை. ஆனால் பவர் பிளேவில் அவர் ஆடிய விதம் கவனிக்கப்பட்டது. அதோடு அஸ்வின் இடையே வந்து வில் ஜாக்ஸ் விக்கெட்டை எடுத்தார். சிஎஸ்கே அணிக்கு பல வருடங்களுக்கு பின் போட்ட முதல் ஓவரிலேயே அஸ்வின் விக்கெட் எடுத்தது கவனிக்கப்பட்டது.

எம்ஜிஆர் படங்களை போல 3 அடி வாங்கிவிட்டுதான் பொதுவாக சிஎஸ்கே திருப்பி அடிக்கும். ஆனால் இன்று சிஎஸ்கே எதிரணியை அடிக்கவே விடவில்லை. மும்பை அணியை பவர் பிளேவில் இருந்தே கட்டுப்படுத்தி கலங்க வைத்தது.

முக்கியமாக மிடில் ஆர்டரை நூர் அஹமது அப்படியே பதம் பார்த்தார். 10 கோடி ரூபாய்க்கு எடுக்கப்பட்ட அவர் மிடில் ஆர்டரை நிற்க வைத்து விக்கெட் எடுத்தார். சவப்பெட்டியில் அடிக்கப்படும் ஆணி போல அவர் அடுத்தடுத்து ஆணி அடித்து மும்பை அணியை திணற அடித்தார். மொத்தமாக 4 விக்கெட்டுகளை எடுத்து மும்பை அணியை துவம்சம் செய்தார்.

சென்னை பிட்ச் ஸ்பின் பிட்ச் என்பதால்தான் நூர் எடுக்கப்பட்டார். அதன்படியே இன்று 87-4 (சூர்யகுமார் யாதவ், 10.3), 95-5 (ராபின் மின்ஸ், 12.4), 96-6 (திலக் வர்மா, 12.6), 118-7 (நமன் திர், 16.1) ஆகிய முக்கியமான விக்கெட்டுகளை அவர் எடுத்து அசத்தினார். இன்று பவுலிங்கில் சிஎஸ்கேவின் கேம் சேஞ்சர் அவர்தான்.

அணியின் மொத்த ஆட்டத்திலும் கடுமையான எனர்ஜி ஷிப்ட் இன்று தெரிந்தது. தோனியிடமும் பழைய வேகம் அப்படியே இருந்தது. 11 ஓவரில் இன்று நூர் பவுலிங் செய்த போது கீப்பிங்கில் தோனி கொஞ்சம் சொதப்பினார். கைக்கு வந்த பந்தை மிஸ் செய்தார். இதனால் அந்த பந்து பவுண்டரி போனது. அதை பார்க்க.. தோனி ஸ்லோ ஆகிவிட்டார் என்று சொல்ல தோன்றியது.

ஆனால் அதே ஓவரிலேயே சூர்ய குமார் யாதவை தோனி ஸ்டம்பிட் செய்தார். அதிலும் 1 நொடிக்கும் குறைவாக.. மில்லி செகண்ட் வேகத்தில் தோனி அந்த ஸ்டம்பிட்டை எடுத்தார். அதன்பின்பு இறங்கிய மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் அடுத்தடுத்து அவுட் ஆனார்கள். கடைசியில் முன்னாள் சிஎஸ்கே வீரர் சாகர் மும்பை அணிக்கு அடித்து ஆடிய நிலையில் 20 ஓவரில் மும்பை அணி 155/9 ரன்கள் எடுத்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+