Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அம்பாதி ராயுடு வேலையை செய்ய வந்தவர்.. சிஎஸ்கே தலையெழுத்து அவர் கையில்.. ருதுராஜ் எடுத்த ரிஸ்க்!

Subscribe to Oneindia Tamil

மும்பை: 18வது சீசனுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாளை தொடங்கவுள்ளது. கொல்கத்தா மைதானத்தில் நடக்கவுள்ள முதல் லீக் போட்டியில் நடப்பு சாம்பியனான கேகேஆர் அணியை எதிர்த்து ஆர்சிபி அணி களமிறங்கவுள்ளது. இதனைத் தொடர்ந்து நாளை மறுநாள் இரவு நடக்கும் போட்டியில் சிஎஸ்கே அணியை எதிர்த்து மும்பை அணி விளையாடவுள்ளது.

ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் போட்டியில் எந்த அணி வெல்லும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதேபோல் சிஎஸ்கே அணி இம்முறை பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இதற்கு சிஎஸ்கே அணியின் வீரர்களே முக்கியமான காரணம். அனைவருமே ஃபார்மில் இல்லாத வீரர்களாக இருக்கிறார்கள்.

ipl-2025-why-rahul-tripathi-batting-will-decide-the-csk-playoffs-chances-in-the-18th-season-of-ipl

கடந்த சீசனிலேயே 200 ரன்களை சேஸிங் செய்வதற்காக ஆட்கள் சிஎஸ்கே அணியில் இல்லை. ருதுராஜ் கெய்க்வாட், சிவம் துபேவை தவிர்த்து வேறு எந்த வீரராலும் கன்சிஸ்டன்சியுடன் ரன்களை சேர்க்க முடியவில்லை. இதனால் சிஎஸ்கே அணி அதிரடி பேட்ஸ்மேன்களை வாங்க வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர்.

குறிப்பாக வாட்சன் மற்றும் ராயுடு ஆகியோரை போல் ஸ்பின்னர்கள் மற்றும் வேகப்பந்துவீச்சாளர்களை கொஞ்சம் கூட சலனமின்றி அட்டாக் செய்யக் கூடிய பேட்ஸ்மேன்கள் சிஎஸ்கே அணிக்கு அத்தியாவசிய தேவையாக இருந்தது. அதற்காக சிஎஸ்கே அணி மெகா ஏலத்தில் ரச்சின் ரவீந்திரா, ராகுல் திரிப்பாட்டி, தீபக் ஹூடா, விஜய் சங்கர் மற்றும் சாம் கரண் ஆகியோரை வாங்கியுள்ளது.

இதில் ராகுல் திரிப்பாதி நம்பர் 3 பேட்டிங் வரிசையில் ஆடக் கூடியவர். புனே அணிக்காக 2017ஆம் ஆண்டு தோனியின் கேப்டன்சி கீழ் ஆடி கவனத்தை ஈர்த்துள்ளார். ஆனால் கடந்த 3 ஆண்டுகளாகவே ஐபிஎல் தொடரில் ராகுல் திரிப்பாதி பெரிதாக சாதிக்கவில்லை. ராயுடுவை போலவே ஸ்பின் மற்றும் வேகப்பந்துவீச்சாளர்களை அட்டாக் செய்யக் கூடிய பேட்ஸ்மேன் தான்.

இவரை சிஎஸ்கே அணி வாங்கியதற்கு கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மிக முக்கியமான காரணம். ஏனென்றால் மகாராஷ்டிரா அணியில் ருதுராஜ் கெய்க்வாட் உடன் விளையாடி வருகிறார். இதனால் ராகுல் திரிப்பாட்டியை சிஎஸ்கே அணிக்கு பரிந்துரை செய்து ருதுராக் கெய்க்வாட் மிகப்பெரிய ரிஸ்கை எடுத்துள்ளார். சேப்பாக்கம் மைதானம் அவரின் ஆட்டத்திற்கு சரியாக ஒத்து வரும்.

ஆனால் அவரின் ஃபார்ம் கேள்விக்குறியாகி இருக்கிறது. ஏனென்றால் முதல் 4 போட்டிகளுக்குள் ராகுல் திரிப்பாதி தனது திறமையை நிரூபிக்கவில்லை என்றால், சிஎஸ்கே அணி மிகப்பெரிய சிக்கலில் சிக்க வாய்ப்புகள் உள்ளது. ஏனென்றால் நம்பர் 3 பேட்ஸ்மேன் எப்போதெல்லாம் சொதப்பி இருக்கிறார்களோ, அப்போதெல்லாம் சிஎஸ்கே அணி மோசமான தோல்விகளை சந்தித்துள்ளது.

துபாயில் நடந்த 2020 ஐபிஎல் தொடரின் போது சுரேஷ் ரெய்னா இந்தியா வந்துவிட்டார். அப்போது சிஎஸ்கே மோசமாக தோற்றது. அதேபோல் 2021ல் மொயின் அலி நம்பர் 3ல் ஆடி சிஎஸ்கே அணியை வெற்றிபெற வைத்தார். 2022ல் மொயின் அலி மோசமான ஃபார்மில் ஆடியதால், 2023ல் ரஹானே அந்த இடத்தில் களமிறங்கி கோப்பையை வெல்ல காரணமாக இருந்தார்.

கடந்த சீசனில் நம்பர் 3ல் வந்த ரஹானே மோசமான ஃபார்மில் இருந்தார். அதன்பின் வந்த ரச்சின் ரவீந்திராவும் சரியாக செட்டாகவில்லை. இதனால் பிளே ஆஃப் சுற்றுக்கு கூட சிஎஸ்கே அணி முன்னேறவில்லை. இதனால் சிஎஸ்கே அணியின் பிளே ஆஃப் வாய்ப்பு ராகுல் திரிப்பாதியின் ஆட்டத்தை பொறுத்தே அமையும் என்று பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+