இதெல்லாம் வேற லெவல்.. மிடில் ஆர்டரில் மைதானம் தீ பிடிக்க போகுது.. சிஎஸ்கேவின் சுவாரசிய திட்டம்.. ஆஹா
சென்னை: சிஎஸ்கே அணி வரிசையாக நல்ல நல்ல வீரர்களை 2023 ஐபிஎல் ஏலத்தில் எடுத்துக்கொண்டு இருக்கிறது. சிஎஸ்கே அணியின் இந்த தொடர் முடிவுகள் காரணமாக அணியின் மிடில் ஆர்டர் புதிய பலம் பெற்றுள்ளது.
2023 ஐபிஎல் தொடருக்கான ஏலம் விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. வரிசையாக டாப் வீரர்கள் அதிக தொகைக்கு ஏலம் விடப்பட்டு வருகிறார்கள். ஆஸ்திரேலியா அணி நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் மிட்சல் ஸ்டார்க் ரூ.24.75 கோடிக்கு கேகேஆர் அணியால் வாங்கப்பட்டுள்ளார் அதேபோல் ஆஸ்திரேலியா அணி கேப்டன் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் மிட்சல் ஸ்டார்க் ரூ.20.5 கோடிக்கு ஹைதராபாத் அணியால் வாங்கப்பட்டுள்ளார்.

இலங்கை அணியின் இளம் வேகப்பந்துவீச்சாளர் மதுஷங்கா ரூ.4.6 கோடிக்கு மும்பை அணியால் வாங்கப்பட்டுள்ளார். இந்திய இளம் வீரர் சிவம் மாவி ரூ.6.4 கோடிக்கு லக்னோ அணியால் வாங்கப்பட்டுள்ளார் . வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளர் அல்சாரி ஜோசப் ரூ.11.50 கோடிக்கு ஆர்சிபி அணியால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
சிஎஸ்கே அதிரடி: சிஎஸ்கே சிலர் ஓய்வு பெற்றுள்ளதால், சிலர் ஓய்வு பெற உள்ளதால் எதிர்காலத்தை உறுதி செய்யும் விதமாக முக்கியமான வீரர்களை , இளம் வீரர்களை தேடி தேடி எடுத்துக்கொண்டு இருக்கிறது.
உதாரணமாக யாருமே எதிர்பார்க்காமல் இன்று டிராவிஸ் ஹெட்டை எடுக்க சிஎஸ்கே முயன்றது. ஹைதராபாத் உடன் கிட்டத்தட்ட ஆறரை கோடி ரூபாய் வரைக்கும் சிஎஸ்கே அணி போட்டி போட்டது. அவர் கிடைக்கவில்லை என்றதும் ரச்சின் ரவீந்திராவை எடுக்க சிஎஸ்கே முயன்றது.,
( மிக்ஸர் சாப்பிடுவோம்னு நினைச்சியா? பக்கா பிளானோடு.. 9 அணிகளையும் மிரள விட்ட சிஎஸ்கே.. புதுசா இருக்கே)
முறையாக திட்டமிட்டு நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திராவை ₹1.8 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ். அதேபோல் இரண்டு அணிகளுடன் மோதி இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஷர்துல் தாக்கூர் ரூ.4 கோடிக்கு சிஎஸ்கே அணியால் வாங்கப்பட்டுள்ளார்.
இதோடு நிற்காமல் கிட்டத்தட்ட 7 கோடி ரூபாய் வரை கொடுத்து பாட் கும்மின்ஸை வாங்கவம் கூட சிஎஸ்கே ஆர்வம் காட்டியது. சிஎஸ்கே அணியின் இந்த திட்டமிடல் மற்ற அணிகளை அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளது. அதன்பின் நியூசிலாந்து வீரர் டேரல் மிட்சல் ரூ.14 கோடிக்கு சிஎஸ்கே அணியால் வாங்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே உள்ள வீரர்கள்: ஏற்கனவே சிஎஸ்கே அணியில் தக்கவைக்கப்பட்ட வீரர்கள் MS தோனி (கேப்டன் & wk), மொயின் அலி, தீபக் சாஹர், டெவோன் கான்வே (wk), துஷார் தேஷ்பாண்டே, ஷிவம் துபே, ருதுராஜ் கெய்க்வாட், ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், ரவீந்திர ஜடேஜா, அஜய் மண்டல், முகேஷ் சவுத்ரி, மதீஷா பத்திரனா, அஜின், ஷேக் ரஷீத், மிட்செல் சான்ட்னர், சிமர்ஜீத் சிங், நிஷாந்த் சிந்து, பிரசாந்த் சோலங்கி, மகேஷ் தீக்ஷனா. வெளியிடப்பட்ட வீரர்கள்: பென் ஸ்டோக்ஸ், டுவைன் பிரிட்டோரியஸ், பகத் வர்மா, சுப்ரான்ஷு சேனாபதி, அம்பதி ராயுடு, கைல் ஜேமிசன், ஆகாஷ் சிங், சிசண்டா மகலா.
மிடில் ஆர்டர் தீ பிடிக்கும்: சிஎஸ்கே அணி வரிசையாக நல்ல நல்ல வீரர்களை 2023 ஐபிஎல் ஏலத்தில் எடுத்துக்கொண்டு இருக்கிறது. சிஎஸ்கே அணியின் இந்த தொடர் முடிவுகள் காரணமாக அணியின் மிடில் ஆர்டர் புதிய பலம் பெற்றுள்ளது. அதன்படி தொடக்க வீரர்களாக
கெய்க்வாட்
ரச்சின்
கான்வே
ரஹானே
டேரில் மிட்செல்
சிவம் துபே (இம்பாக்ட் பிளேயர்)
தோனி
ஜடேஜா
ஷர்துல்
தீபக்
பத்திரனா

என்று அணி அமைய வாய்ப்புகள் உள்ளன. கெய்க்வாட்
ரச்சின்
கான்வே
ரஹானே
டேரில் மிட்செல்
சிவம் துபே (இம்பாக்ட் பிளேயர்) வரை மிடில் ஆர்டர் இருப்பதால் சிஎஸ்கே அணி மிக வலுவாக இருக்கும். முக்கியமாக சிஎஸ்கே அணியில் கான்வே
ரஹானே
டேரில் மிட்செல் 3 பேருமே சிறப்பாக ஸ்பின் பவுலிங்கை ஆடுவார்கள் என்பதால் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் போட்டிகளில் கண்டிப்பாக மிடில் ஆர்டர் மைதானம் தீ பிடிக்கும் என்றுதான் சொல்ல வேண்டும்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications