மிக்ஸர் சாப்பிடுவோம்னு நினைச்சியா? பக்கா பிளானோடு.. 9 அணிகளையும் மிரள விட்ட சிஎஸ்கே.. புதுசா இருக்கே
சென்னை; 2023 ஐபிஎல் ஏலத்தில் சிஎஸ்கே அணி வித்தியாசமான அணுகுமுறையை கொண்டு உள்ளது. கடந்த முறைகளை போல இல்லாமல் இந்த முறை வித்தியாசமான அணுகுமுறை சிஎஸ்கே மேற்கொண்டு உள்ளது.
2023 ஐபிஎல் தொடருக்கான ஏலம் விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. வரிசையாக டாப் வீரர்கள் சிலர் ஏலம் எடுக்கப்படாமல் சென்றுள்ளனர். உதாரணமாக ஸ்டிவ் ஸ்மித் இந்த முறை ஏலத்தில் எடுக்கப்படவில்லை. சில வீரர்கள் குறைவான தொகைக்கு ஏலம் சென்றுள்ளனர். கடந்த வருடம் 10.75 கோடி ரூபாய்க்கு ஏலம் சென்ற வணிந்து ஹசாரங்கா.. இந்த முறை வெறும் ஒன்றரை கோடி ரூபாய்க்கு மட்டுமே சென்றுள்ளார்.
ஹைதராபாத் அணியால் அவர் ஏலம் எடுக்கப்பட்டார். ஏற்கனவே ரிட்டென்சன் முடிந்த நிலையில் தற்போது மினி ஏலமாக இந்த வருட ஏலம் நடந்து கொண்டு இருக்கிறது .
சிஎஸ்கே அணியில் தக்கவைக்கப்பட்ட வீரர்கள்: MS தோனி (கேப்டன் & wk), மொயின் அலி, தீபக் சாஹர், டெவோன் கான்வே (wk), துஷார் தேஷ்பாண்டே, ஷிவம் துபே, ருதுராஜ் கெய்க்வாட், ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், ரவீந்திர ஜடேஜா, அஜய் மண்டல், முகேஷ் சவுத்ரி, மதீஷா பத்திரனா, அஜின், ஷேக் ரஷீத், மிட்செல் சான்ட்னர், சிமர்ஜீத் சிங், நிஷாந்த் சிந்து, பிரசாந்த் சோலங்கி, மகேஷ் தீக்ஷனா. வெளியிடப்பட்ட வீரர்கள்: பென் ஸ்டோக்ஸ், டுவைன் பிரிட்டோரியஸ், பகத் வர்மா, சுப்ரான்ஷு சேனாபதி, அம்பதி ராயுடு, கைல் ஜேமிசன், ஆகாஷ் சிங், சிசண்டா மகலா.
அணுகுமுறை மாற்றம்: 2023 ஐபிஎல் ஏலத்தில் சிஎஸ்கே அணி வித்தியாசமான அணுகுமுறையை கொண்டு உள்ளது. கடந்த முறைகளை போல இல்லாமல் இந்த முறை வித்தியாசமான அணுகுமுறை சிஎஸ்கே மேற்கொண்டு உள்ளது.

எப்போதும் சிஎஸ்கே அணி தொடக்கத்தில் ஏலம் எடுக்காது. கடைசியில் மூத்த வீரர்கள் சிலரை ஏலம் எடுக்கும். அனுபவம் அதிகம் உள்ள வீரர்களை ஏலம் எடுக்கும். பெரிதாக டாப் வீரர்கள், பார்மில் உள்ள வீரர்களை சிஎஸ்கே ஏலம் எடுக்காது. இதனால் சிஎஸ்கே அணி மிக்ஸர் சாப்பிடும் அணி என்று விமர்சனங்கள் வைக்கப்படுவது வழக்கம்.
சிஎஸ்கே அணி என்றாலே மிக்ஸர்தான் சாப்பிடுவார்கள். முக்கியமான வீரர்களை எடுக்க மாட்டார்கள் என்று விமர்சனம் வைக்கப்படுவது உண்டு. ஆனால் கடந்த முறைகளை போல இல்லாமல் இந்த முறை வித்தியாசமான அணுகுமுறை சிஎஸ்கே மேற்கொண்டு உள்ளது.
பக்கா பிளான்: சிஎஸ்கே சிலர் ஓய்வு பெற்றுள்ளதால், சிலர் ஓய்வு பெற உள்ளதால் எதிர்காலத்தை உறுதி செய்யும் விதமாக முக்கியமான வீரர்களை , இளம் வீரர்களை தேடி தேடி எடுத்துக்கொண்டு இருக்கிறது.
உதாரணமாக யாருமே எதிர்பார்க்காமல் இன்று டிராவிஸ் ஹெட்டை எடுக்க சிஎஸ்கே முயன்றது. ஹைதராபாத் உடன் கிட்டத்தட்ட ஆறரை கோடி ரூபாய் வரைக்கும் சிஎஸ்கே அணி போட்டி போட்டது. அவர் கிடைக்கவில்லை என்றதும் ரச்சின் ரவீந்திராவை எடுக்க சிஎஸ்கே முயன்றது.,
முறையாக திட்டமிட்டு நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திராவை ₹1.8 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ். அதேபோல் இரண்டு அணிகளுடன் மோதி இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஷர்துல் தாக்கூர் ரூ.4 கோடிக்கு சிஎஸ்கே அணியால் வாங்கப்பட்டுள்ளார்.
இதோடு நிற்காமல் கிட்டத்தட்ட 7 கோடி ரூபாய் வரை கொடுத்து பாட் கும்மின்ஸை வாங்கவம் கூட சிஎஸ்கே ஆர்வம் காட்டியது. சிஎஸ்கே அணியின் இந்த திட்டமிடல் மற்ற அணிகளை அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications