Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

8 அணிகளை கலக்க போகும் தமிழர்கள்.. இதுவரை இல்லாத மாஸ் சம்பவம்.. ஐபிஎல் ஏலத்தில் கவனிச்சீங்களா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2023 ஐபிஎல் ஏலத்தில் தமிழர்களுக்கு அதிக அளவில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உள்ளது. முக்கியமாக 8 அணிகளில் இந்த முறை தமிழர்கள் எடுக்கப்பட்டு உள்ளனர்.

2023 ஐபிஎல் ஏலம் விறுவிறுப்பாக நடந்து முடிந்த நிலையில் பல்வேறு அணிகளில் தமிழர்கள் தேர்வாகி உள்ளனர். உதாரணமாக குஜராத் அணியில் தமிழர்கள் அதிக அளவில் எடுக்கப்பட்டு உள்ளனர். கிட்டத்தட்ட தமிழர்களின் அணியாக மாறி உள்ளது.

கொல்கத்தா- வருண் சி, ஷ்ரேயாஸ் மற்றும் வெங்கடேஷ்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்- வாஷிங்டன், நடராஜன் மற்றும் ஜாதவேத்
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்- சித்தார்த்
ராஜஸ்தான்ராயல்ஸ் : ஆர்.அஸ்வின்
பெங்களூர் - தினேஷ் கார்த்திக்
குஜராத் -சாய் கிஷோர், சாய் சுதர்ஷன், விஜய் சங்கர், ஷாருக்
பஞ்சாப் கிங்ஸ் -தனய் தியாகராஜன்
மும்பை இந்தியன்ஸ் -ஸ்ரேயாஸ் கோபால்

டெல்லி மற்றும் சென்னை ஆகிய இரண்டு அணிகளைத் தவிர மற்ற அனைத்து அணிகளிலும் அதிக அளவில் தமிழ் வீரர்கள் அல்லது குறைந்தது ஒரு தமிழராவது விளையாடுகிறார்கள்.

 IPL auction 2024: How Tamil Nadu players are ruling 8 teams in this season?

சிஎஸ்கே தமிழர்கள் இல்லை: ஆனால் சென்னை அணியான சிஎஸ்கேவில் தமிழர்கள் இல்லை. ஏற்கனவே சிஎஸ்கே அணியில் தக்கவைக்கப்பட்ட வீரர்கள் MS தோனி (கேப்டன் & wk), மொயின் அலி, தீபக் சாஹர், டெவோன் கான்வே (wk), துஷார் தேஷ்பாண்டே, ஷிவம் துபே, ருதுராஜ் கெய்க்வாட், ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், ரவீந்திர ஜடேஜா, அஜய் மண்டல், முகேஷ் சவுத்ரி, மதீஷா பத்திரனா, அஜின், ஷேக் ரஷீத், மிட்செல் சான்ட்னர், சிமர்ஜீத் சிங், நிஷாந்த் சிந்து, பிரசாந்த் சோலங்கி, மகேஷ் தீக்ஷனா. வெளியிடப்பட்ட வீரர்கள்: பென் ஸ்டோக்ஸ், டுவைன் பிரிட்டோரியஸ், பகத் வர்மா, சுப்ரான்ஷு சேனாபதி, அம்பதி ராயுடு, கைல் ஜேமிசன், ஆகாஷ் சிங், சிசண்டா மகலா.

இன்று நடந்த ஏலத்தில் தமிழர்கள் எடுக்கப்படாத நிலையில், டெர்லி மிட்சல், ரச்சின் ரவீந்திரா, சமீர் ரிஸ்வி போன்ற வீரர்களை எடுத்துள்ளது

குஜராத் கேப்டன்: இதையடுத்து குஜராத் அணியின் கேப்டனாக சுப்மான் கில் நியமிக்கப்பட்டு உள்ளார். இன்னொரு பக்கம் குஜராத் அணியில் முக்கியமான வீரர்கள் பலர் ரிட்டென்ஷன் செய்யப்பட்டு உள்ளனர்.

டேவிட் மில்லர், ஷுப்மன் கில் (கேப்டன்), மேத்யூ வேட், விருத்திமான் சாஹா, கேன் வில்லியம்சன், அபினவ் மனோகர், பி. சாய் சுதர்சன், தர்ஷன் நல்கண்டே, விஜய் சங்கர், ஜெயந்த் யாதவ், ராகுல் தெவாடியா, முகமது ஷமி, நூர் அகமது, சாய் கிஷோர், ரஷித் கான், ஜோசுவா லிட்டில், மோஹித் ஷர்மா ஆகியோர் அணியில் ரிட்டென்ஷன் செய்யப்பட்டு உள்ளனர்.

இன்று ஏலம்: அதேபோல் இன்று ஏலத்தில் முக்கியமான வீரர்கள் பலர் ஏலம் எடுக்கப்பட்டு உள்ளனர். இன்று நடந்த ஐபிஎல் 2024 ஏலத்தின் போது தமிழக ஆல்ரவுண்டர் ஷாருக் கான் ரூ.7.4 கோடிக்கு குஜராத் டைட்டன்ஸ் அணியில் இணைந்தார். பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஏலப் போரில் ஈடுபட்ட நிலையில் ஷாருக்கான் இறுதியில் குஜராத் அணிக்கு சென்றார்.

ஏற்கனவே சிஎஸ்கே அணியில் சாய் சுதர்சன், சாய் கிஷோர், விஜய் சங்கர் ஆகியோர் உள்ளனர். தற்போது ஷாருக்கான் சேர்க்கப்பட்டு உள்ளார். கிட்டத்தட்ட குஜராத் டைட்டன்ஸ் அணி தற்போது தமிழர்கள் டைட்டன்ஸ் அணியாக மாறி உள்ளது. பாண்டியா அணியில் இருந்து சென்ற நிலையில் சோழர்கள் உள்ளே வந்தது போல.. முழுக்க முழுக்க தமிழர்கள் அணியில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+