இவங்க ரெண்டு பேர்தான் இம்பாக்ட் பிளேயர்ஸ்.. தரமாக ஏலம் எடுத்த சிஎஸ்கே.. தோனி இறக்க போகும் நங்கூரம்
சென்னை: 2023 ஐபிஎல் ஏலத்தில் சிஎஸ்கே மொத்தமாக அணி ஏலத்தை நிறைவு செய்துள்ளது. நேற்று 6 வீரர்களை எடுக்க வேண்டும் என்ற நிலையில்.. எல்லோரையும் முறையாக எடுத்துள்ளது. இதன் மூலம் சிஎஸ்கே புதிய பலம் பெற்றுள்ளது.
: சிஎஸ்கே சிலர் ஓய்வு பெற்றுள்ளதால், சிலர் ஓய்வு பெற உள்ளதால் எதிர்காலத்தை உறுதி செய்யும் விதமாக முக்கியமான வீரர்களை , இளம் வீரர்களை தேடி தேடி எடுத்து இருக்கிறது. முக்கியமாக ரச்சின் ரவீந்திரா, சமீர் ரிஸ்வி போன்ற வீரர்களை எடுத்துள்ளது. சிஎஸ்கேவில் ஏற்கனவே அம்பதி ராயுடு போன்ற மூத்த வீரர்கள் வெளியேறி உள்ள நிலையில்தான் தற்போது இளம் வீரர்கள் கொண்டு வரப்பட்டு உள்ளனர்.

ஏற்கனவே சிஎஸ்கே அணியில் தக்கவைக்கப்பட்ட வீரர்கள் MS தோனி (கேப்டன் & wk), மொயின் அலி, தீபக் சாஹர், டெவோன் கான்வே (wk), துஷார் தேஷ்பாண்டே, ஷிவம் துபே, ருதுராஜ் கெய்க்வாட், ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், ரவீந்திர ஜடேஜா, அஜய் மண்டல், முகேஷ் சவுத்ரி, மதீஷா பத்திரனா, அஜின், ஷேக் ரஷீத், மிட்செல் சான்ட்னர், சிமர்ஜீத் சிங், நிஷாந்த் சிந்து, பிரசாந்த் சோலங்கி, மகேஷ் தீக்ஷனா. வெளியிடப்பட்ட வீரர்கள்: பென் ஸ்டோக்ஸ், டுவைன் பிரிட்டோரியஸ், பகத் வர்மா, சுப்ரான்ஷு சேனாபதி, அம்பதி ராயுடு, கைல் ஜேமிசன், ஆகாஷ் சிங், சிசண்டா மகலா.
சிஎஸ்கே அணியால் எடுக்கப்பட்ட வீரர்கள்: சிஎஸ்கே அணியால் பின்வரும் வீரர்கள் எடுக்கப்பட்டு உள்ளனர்.
ரச்சின் ரவீந்திரன்
ஷர்துல் தாக்கூர்
டேரில் மிட்செல்
சமீர் ரிஸ்வி
முஸ்தாபிசுர் ரஹ்மான்
அவனிஷ் ராவ் ஆகியோர் எடுக்கப்பட்டு உள்ளனர்.
இம்பாக்ட் வீரர்கள்: இதில் பேட்டிங்கின் போது இம்பாக்ட் வீரராக சமீர் ரிஸ்வி களமிறக்கப்படலாம். அதேபோல் பவுலிங்கின் போது இம்பாக்ட் வீரராக தேஷ் பாண்டே இறக்கப்படலாம். அதுவே வெளிநாட்டு வீரர்களை சிஎஸ்கே இதற்கு பயன்படுத்தினால்.. பேட்டிங்கின் போது டேரில் மிட்சல் பேட்டிங்கில் இம்பாக்ட் வீரராக இறக்கப்படலாம். பவுலிங்கில் முஸ்தாபிசுர் ரஹ்மான் இம்பாக்ட் வீரராக இறக்கப்பட்ட வாய்ப்புகள் உள்ளன.
இதில் சமீர் ரிஸ்வி அதிரடியான இளம் வீரர். உத்தர பிரதேச உள்ளூர் போட்டிகளில் இவர் தொடர்ந்து அதிரடியாக ஆடி வருகிறார். சில போட்டிகளில் இவர் சிக்ஸ் மழையாக கூட பொழிந்து வருகிறார். அவரின் ஆட்டம் தொடர்ந்து கவனிக்கப்பட்ட நிலையில் சிஎஸ்கே அவரை எடுத்துள்ளது. மற்ற அணிகளில் அதிரடியான இளம் பினிஷர் இருப்பது போல சிஎஸ்கே அணி இவரை எடுத்துள்ளது. இவரை பெரும்பாலும் சிஎஸ்கே அணி இம்பாக்ட் வீரராக எடுக்க வாய்ப்பு உள்ளது.
நேற்று முறையாக திட்டமிட்டு நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திராவை ₹1.8 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ். அதேபோல் இரண்டு அணிகளுடன் மோதி இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஷர்துல் தாக்கூர் ரூ.4 கோடிக்கு சிஎஸ்கே அணியால் வாங்கப்பட்டுள்ளார். இவர்கள் இருவரும் நிரந்தரமாக பிளேயிங் லெவனில் ஆடுவார்கள் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின் நியூசிலாந்து வீரர் டேரல் மிட்சல் ரூ.14 கோடிக்கு சிஎஸ்கே அணியால் வாங்கப்பட்டுள்ளார். இவர் பெரும்பாலும் மிடில் ஆர்டரில் ஆடுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications