ஒரே அடியில்.. ரூ.7 கோடி உயர்த்தப்பட்ட ஏலம்.. பண்ட் தொகை கடைசி நொடியில் உயர்ந்தது எப்படி தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2025 ஐபிஎல் ஏலத்தில் இந்த முறை பேட்ஸ்மேன்கள்.. கேப்டன்சி செய்ய கூடியவர்கள் அதிக ஏலத்திற்கு செல்கிறார்கள். கடந்த சீசனில் ஆல் ரவுண்டர், பவுலர்கள் அதிக ஏல தொகைக்கு சென்ற நிலையில் இந்த முறை பேட்ஸ்மேன்கள்.. கேப்டன்சி செய்ய கூடியவர்கள் அதிக கவனம் பெற்றுள்ளனர்.

ஏற்கனவே பஞ்சாப் அணி ரூ.26.75 கோடி கொடுத்து பஞ்சாப் அணி ஸ்ரேயாஸ் ஐயரை கைப்பற்றியது. இந்த நிலையில் ரிஷப் பண்ட் அதிக அளவில் கவனிக்கப்பட்டார். இவரை அணியில் எடுக்கவும் கடுமையான போட்டி நிலவியது. முக்கியமாக ஹைதராபாத் உள்ளிட்ட அணிகள் கடுமையாக போட்டி போட்டன.

ipl auction 2025 ipl auction ipl 2025

ஆனால் லக்னோ அணி விடாமல் இவரை எடுக்க தீவிரமாக ஆர்வம் காட்டியது . 20.5 கோடி ரூபாய் வரை இதற்காக லக்னோ அணி போட்டியிட்டது. அதன்பின் லக்னோ அணியுடன் போட்டியிட மற்ற அணிகள் வரவில்லை.

இதையடுத்து டெல்லி அணி அவரை ஆர்டிஎம் மூலம் எடுக்க முடிவு செய்தது. இதையடுத்து லக்னோ அணி அவரின் விலையை 27 கோடி ரூபாயாக உயர்த்தியது. ஆனால் டெல்லி அணி அவரை அதன்பின் ஆர்டிஎம் எடுக்க விரும்பவில்லை.

ஆர்டிஎம் முறையில் இந்த முறை மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. ஒரு வீரர் குறிப்பிட்ட ஏலத்திற்கு சென்ற பின் அவரின் முன்னாள் அணி ஆர்டிஎம் செய்ய முடியும். அதன்பின் ஏலம் எடுத்த அணி அவரின் விலையை கடைசியாக ஒரு முறை உயர்த்த முடியும். எவ்வளவு விலைக்கு வேண்டுமானாலும் உயர்த்தலாம். அப்படிதான் பண்ட் விலையை லக்னோ அணி 20.5 கோடி ரூபாயில் இருந்து 27 கோடி ரூபாயை உயர்த்தி அவரை அள்ளியது.

.
577 வீரர்கள் பட்டியல்:

1574 வீரர்கள் ஏலத்தில் பதிவு செய்த பிறகு, 367 இந்தியர்கள் மற்றும் 210 வெளிநாட்டு வீரர்கள் ஏலத்திற்கு இறுதி செய்யப்பட்டனர். இங்கிலாந்து சீமர் ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் அமெரிக்காவின் இந்திய வம்சாவளி வீரர் சவுரப் நேத்ரவல்கர் ஆகியோர் கடைசி நிமிடத்தில் சேர்க்கப்பட்டதன் மூலம், பட்டியல் 577 வீரர்களாக மாற்றப்பட்டது.

ஒவ்வொரு அணிக்கும் உள்ள ஏல பர்ஸ்

பஞ்சாப் கிங்ஸ் - ரூ 110.5 கோடி (அதிகபட்சம்)

ராஜஸ்தான் ராயல்ஸ் - ரூ 41 கோடி (குறைந்தபட்சம்)

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - 83 கோடி

டெல்லி கேப்பிடல்ஸ் - 73 கோடி

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - 69 கோடி

குஜராத் டைட்டன்ஸ் - 69 கோடி

சென்னை சூப்பர் கிங்ஸ் - 55 கோடி

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - 51 கோடி

மும்பை இந்தியன்ஸ் - 45 கோடி

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - 45 கோடி

மிக உயர்ந்த மற்றும் குறைந்த ரிசர்வ் விலைகள்

ரூ.2 கோடியே அதிக ரிசர்வ் விலையாகும், இந்த தொகையில் 81 வீரர்கள் பதிவு செய்துள்ளனர்.

குறைந்த ரிசர்வ் விலை ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.30 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது

577 வீரர்களின் பெயர்கள் இதில் ஏலம் விடப்பட உள்ளது. முதல் கட்ட ஏலம் தற்போது நடைபெற்று வருகிறது.இந்த ஏலத்தில் 367 இந்திய வீரர்கள் மற்றும் 210 வெளிநாட்டு வீரர்களும் இடம்பெற்று உள்ளனர். 10 அணிகளும் மொத்தமாக70 வெளிநாட்டு வீரர்களையும் சேர்த்து அதிகபட்சமாக 204 வீரர்களை ஏலத்தில் எடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+