அஸ்வின் - கலீல் - திரிபாதி.. சிஎஸ்கே அணியின் ப்ளஸ் என்ன? மைனஸ் என்ன? புதிய வீரர்களால் வந்த மாற்றம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2025 ஐபிஎல் தொடரில் சர்ப்ரைஸ் அளிக்கும் விதமாக சில வீரர்களை சிஎஸ்கே அணி எடுத்துள்ளது. எதிர்பார்க்காத விதமாக முக்கியமான சில வீரர்களை அணிக்குள் கொண்டு வந்துள்ள தோனி படை.

சிஎஸ்கே எதிர்பார்த்தபடியே நியூசிலாந்து பேட்ஸ்மேன் டேவன் கான்வாயை எடுக்க தொடக்கத்திலேயே கை தூக்கியது. 2 கோடி ரூபாய்க்கு தொடக்கத்திலேயே அவரை எடுக்க முயன்றது. ப்போதும் எந்த வீரரை எடுத்தாலும் சிஎஸ்கே அணிக்கு போட்டியாக பஞ்சாப் வரும். அதேபோல் இன்றும் பஞ்சாப் போட்டியிட்டது.

ipl auction 2025 ipl auction ipl 2025 2025 2025

இவரை எடுக்க சிஎஸ்கேவை விடக்கூடாது என்று பஞ்சாப் வேலையை காட்டியது. கடந்த முறையும் ஏலங்களில் இப்படி பஞ்சாப் செய்துள்ளது. தொடக்கத்தில் இருந்தே மாறி மாறி நியூசிலாந்து பேட்ஸ்மேன் டேவன் கான்வாயை எடுக்க பஞ்சாப் - சிஎஸ்கே இடையே மாறி மாறி போட்டி நடந்தது. இதையடுத்து 3 கோடி ரூபாய்க்கு பின் விட்டு பிடிக்கலாம் என்று சிஎஸ்கே கொஞ்சம் ஆர்வம் இல்லாதது போல இருந்தது. கடைசியில் மாறி மாறி போட்டி செல்ல.. ஒருவழியாக சிஎஸ்கே அணி 6.25 கோடி ரூபாய்க்கு நியூசிலாந்து பேட்ஸ்மேன் டேவன் கான்வாயை அணியில் மீண்டும் எடுத்தது. இதுதான் சிஎஸ்கேவின் முதல் பை ஆவார்.

இன்று தொடக்கத்தில் இருந்தே ராகுல் திரிபாதியை எடுக்க சிஎஸ்கே தீவிரமாக முயன்றது. அவரை மிஸ் செய்ய கூடாது என்பதில் சிஎஸ்கே தீவிரமாக இருந்தது.

இவரை எடுக்க கொல்கத்தா அணியும் தீவிரமாக முயன்றது. இதில் ஒருவழியாக 3.20 கோடி ரூபாய்க்கு சிஎஸ்கே அவரை எடுத்தது. இவர் மிடில் ஆர்டர் ஓப்பனிங் இரண்டும் ஆட கூடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் அணியில் மீண்டும் அஸ்வின் திரும்பி வந்துள்ளார். ஐபிஎல் 2025 சீசனுக்காக ஆர் அஷ்வின் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணிக்கு திரும்பியது சிஎஸ்கே ரசிகர்களுக்கு மிகப்பெரிய செய்தியாக மாறி உள்ளது. கேப்டன் தோனியால் மிக உயரத்திற்கு கொண்டு செல்லப்பட்ட அஷ்வின் மீண்டும் தனது சொந்த மண்ணான சென்னைக்கு திரும்பி உள்ளார். பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு சென்று தற்போது கடும் போட்டிக்கு பிறகு அஸ்வினை ரூ.9.75 கோடிக்கு சென்னை அணி கைப்பற்றி உள்ளது.

அதேபோல் கடந்த சீசனில் ஆடிய ரச்சின் ரவீந்திரா 4 கோடி ரூபாய்க்கு மீண்டும் அணியில் எடுக்கப்பட்டு உள்ளார். ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் நூர் அஹ்மத்தை ரூபாய் 10 கோடிக்கு சிஎஸ்கே அணி எடுத்தது. அதேபோல் இந்திய அணியின் ஸ்விங் பாஸ்ட் பவுலிங் வீரர் 4.80 கோடி ரூபாய்க்கு எடுக்கப்பட்டு உள்ளார்.

இன்று எடுக்கப்பட்ட வீரர்கள்:

நூர் அகமது ரூ.10 கோடி ரூபாய்
டெவோன் கான்வே 6.25 கோடி ரூபாய்
ராகுல் திரிபாதி 3.40 கோடி ரூபாய்
ரச்சின் ரவீந்திரா 4 கோடி ரூபாய்
ஆர் அஸ்வின் 9.75 கோடி ரூபாய்

விஜய் சங்கர் 1.2 கோடி ரூபாய்
கலீல் அகமது ரூ.4.80 கோடி ரூபாய்

தக்கவைக்கப்பட்ட வீரர்கள்

1 ருதுராஜ் கெய்க்வாட் (18 கோடி)
2 மதீஷா பத்திரனா (13 கோடி)
3 சிவம் துபே (12 கோடி)
4 ரவீந்திர ஜடேஜா (18 கோடி)
5 எம்எஸ் தோனி (4 கோடி)

பாசிட்டிவ் விஷயங்கள்:

சென்னை சேப்பாக்கத்தில் பவுலிங் செய்ய நல்ல ஸ்பின் படை உள்ளது - அஸ்வின் - ஜடேஜா - ரச்சின் ரவீந்திரா படை உள்ளது

ஓப்பனிங் செய்ய டெவோன் கான்வே - ரச்சின் ரவீந்திரா - ருத்துராஜ் - ராகுல் திரிபாதி படை உள்ளது.

நெகட்டிவ் விஷயங்கள்:

பாஸ்ட் பவுலிங் செய்ய ஆள் குறைவாக உள்ளது. மதீஷா பத்திரனா சப்போர்ட்டாக் இன்னொருவர் வரலாம்.

பாஸ்ட் பவுலிங் ஆல் ரவுண்டர் இன்னொருவர் கூடுதலாக அணிக்கு வர வேண்டும். விஜய் சங்கர் இருந்தாலும் இன்னும் நம்பக்கூடிய பார்மில் உள்ள ஒருவர் வர வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+