வெறும் "ஷோ"தான்.. தூக்கியடிக்கப்படும் ரோஹித் சர்மா.. இந்திய டெஸ்ட் கேப்டன் ஆகும் அஸ்வின்? பின்னணி
சென்னை: இந்திய அணியின் தோல்வியை தொடர்ந்து ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன.
ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நடந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்து உள்ளது. இந்திய அணியின் தோல்விக்கு முக்கியமான காரணங்கள் உள்ளன.
இரண்டாவது முறையாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை போட்டியில் இந்தியா தோல்வி அடைந்து உள்ளது. கடந்த முறை நியூஸிலாந்திடம் தோல்வி அடைந்த இந்திய அணி இந்த முறை ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்து உள்ளது.

209 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்துள்ளது இந்திய அணி. கப்பாவில் பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் வென்றதை போல வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி துளி அளவு கூட போர்க்குணத்தை காட்டாமல் தோல்வி அடைந்து உள்ளது.
ஆஸ்திரேலியா வெற்றி: முதல் இரண்டு நாள் ஆட்டத்தில் ஸ்மித், ஹெட் இருவரும் அதிரடியாக சதம் அடித்தனர். முதல் இன்னிங்ஸ் முடிவில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட்டிற்கு 469 ரன்களை எடுத்தது.
26 பந்துக்கு 15 ரன்கள் எடுத்து ரோஹித் சர்மா அவுட் ஆனார். 15 பந்துக்கு 13 ரன்கள் எடுத்து சுப்மான் கில் அவுட் ஆனார். 25 பந்துக்கு 14 ரன்கள் எடுத்து புஜாரா அவுட் ஆனார். 31 பந்துக்கு 14 ரன்கள் எடுத்து ரோஹித் சர்மா அவுட் ஆனார். அதிரடியாக ஆடிய ஜடேஜா 51 பந்தில் 48 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். முதல் இன்னிங்சில் ரஹானே 89, ஜடேஜா 48, ஷர்த்துல் 51 ரன்கள் எடுக்க இந்திய அணி 296 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.
இதையடுத்து மீண்டும் இறங்கிய ஆஸ்திரேலிய அணியில் டாப் ஆர்டர் சரிய லபுசேன் 41 ரன்கள் எடுத்தார். கடைசியில் ஸ்டார்க் 41, கேரி 66 ரன்கள் எடுக்க ஆஸ்திரேலிய அணி 270-8 ரன்கள் எடுத்த நிலையில் இந்திய அணிக்கு ஆஸ்திரேலியா 445 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது.
இதையடுத்து இந்திய அணி பேட்டிங்கில் ரோஹித் சிறப்பான தொடக்கம் கொடுக்க 43 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். தவறாக அவுட் கொடுக்கப்பட்ட கில் 18, புஜாரா 27 ரன்கள் எடுத்தனர். இதையடுத்து இறங்கிய கோலி 49 ரன்கள், ரஹானே 46 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்கள்.
கடைசியில் வரிசையாக இந்தியாவின் டெயில் பேட்டிங் அடுத்தடுத்து விக்கெட்டை இழக்க.. இந்தியா தோல்வி அடைந்தது.
கேப்டன் நீக்கம்?: ரோஹித் கேப்டன்சி மிக மோசமாக இருந்தது. பீல்டில் ரோஹித் என்ன நடக்கிறது என்ற க்ளூ இல்லாமல் இருந்தது கடுமையான விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு அஸ்வினை அணியில் எடுத்து இருக்கலாம் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில்தான் இந்திய அணியின் தோல்வியை தொடர்ந்து ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற வேண்டும். அவர் டெஸ்ட் வீரர் கிடையாது. ஐபிஎல்லில் மட்டும் கோப்பைகளை வென்றுவிட்டு இவர் ஷோ காட்டுகிறார்.
இதனால் மொத்தமாக டெஸ்டில் இருந்து அவர் நீக்கப்பட வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.இன்னொரு பக்கம் டெஸ்ட் ஜாம்பவான் அஸ்வினை இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன,

இந்திய அணியில் அஸ்வின் போன்ற சிறப்பான டெஸ்ட் வீரர்கள் இருக்கையில் அவர்களுக்கு கேப்டன் பதவி வழங்கப்படாமல் ரோஹித் சர்மாவிற்கும், கே எல் ராகுலுக்கும் டெஸ்ட் கேப்டன் பதவி வழங்கப்படுகிறது. ஹர்திக் பாண்டியா டெஸ்டில் ஆடுவது இல்லை. புஜாரா பார்ம் அவுட், ரஹானே ஓய்வு பெற போகிறார். அதனால் அஸ்வினை கேப்டனாக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன.
டெயில் என்டர் அஸ்வின் சிறப்பாக ஆடும் அளவிற்கு டாப் ஆர்டர் ராகுல், ரோஹித், புஜாரா சிறப்பாக ஆடுவதில்லை. டெஸ்ட் போட்டிகளில் குறைந்த ஆவரேஜ் வைத்து இருக்கும் தற்கால பவுலர் கம் பேட்ஸ்மேன்களில் இவர்தான் முதலிடத்தில் உள்ளார். இந்திய டெஸ்ட் அணியில் மிக சிறப்பான மூளை கொண்டவர் அஸ்வின். அவர் களத்தை ஆராயும் விதமும், முடிவு எடுக்கும் திறனும் யாராலும் கணிக்க முடியாதது.
அவர் முக்கியமாக டெஸ்ட் போட்டிகளில் பல்வேறு வியூகங்களை வகுத்து உள்ளார். இன்னும் 2 வருடங்களாவது அவர் கண்டிப்பாக ஆடுவார். ஸ்பின் பவுலர் என்பதால் அவருக்கு காயங்கள் ஏற்பட வாய்ப்பு குறைவு. அவர் கேப்டனாகும் பட்சத்தில் இந்திய அணிக்கு அது சிறப்பான செய்தியாக இருக்கும். அதோடு துணை கேப்டன் என்ற பெயரில் அணியில் இடம்பிடித்துக்கொண்டு இருக்கும் கே எல் ராகுலுக்கு பதில் புதிதாக வேறு இளம் வீரரை.. ஷ்ரேயஸ் போன்றவர்களை துணை கேப்டனாக நியமித்து அதன்பின் அஸ்வின் ஓய்விற்கு பின் அவருக்கு கேப்டன்சியை வழங்கலாம்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications