முஸ்லிம் என்பதால் சர்ஃபராஸ் கானை அணியில் எடுக்காத கம்பீர்.. காங்., தலைவர் கடும் விமர்சனம் - சர்ச்சை
டெல்லி: தென்ஆப்பிரிக்கா ‛ஏ' அணிக்கு எதிரான 2 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய ‛ஏ' அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதில் சர்ஃபராஸ் கான் இடம்பெறவில்லை. இந்நிலையில் தான் சர்ஃபராஸ் கான் இஸ்லாமியர் என்பதால் அவரை கவுதம் கம்பீர் அணியில் சேர்க்கவில்லை என்று காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் ஷமா முகமது தெரிவித்து இருப்பது பரப்ரப்பை கிளப்பி உள்ளது.
கிரிக்கெட்டில் இந்திய ஏ அணியும், தென்ஆப்பிரிக்கா ஏ அணியும் 4 நாள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளன. இந்த தொடர் மொத்தம் 2 போட்டிகளை கொண்டது. முதல் போட்டி அக்டோபர் 30 முதல் நவம்பர் 2ம் தேதி வரையும், அடுத்த போட்டி நவம்பர் 6 முதல் நவம்பர் 9 ம் தேதி வரையும் நடைபெற உள்ளது.

இந்த போட்டிக்கான இந்திய கிரிக்கெட் ‛ஏ' அணிக்கான வீரர்கள் அறிவிக்கப்பட்டன. அதில் ரிஷப் பண்ட் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். ஆயுஷ் மாத்ரே, என் ஜெகதீசன், சாய் சுதர்சன் (துணை கேப்டன்), தேவ்தத் படிக்கல், ரஜத் படிதார், ஹர்ஷ் துபே, தனுஷ் கோடியான், மானவ் சுதார், அன்சுல் கம்போஜ், யஷ் தாகூர், ஆயுஷ் பதோனி, சரன்ஜ் ஜெயின் உள்ளிட்டவர்கள் இடம்பெற்றுள்ளனர்.
2வது போட்டிக்கான அணியில் கேஎல் ராகுல், ருதுராஜ் கெய்க்வாட், முகமது சிராஜ், ஆகாஷ் தீப், துருவ் ஜூரெல் உள்ளிட்டவர்களும் இடம்பெற்றுள்ளனர். அதன்படி ன் ரிஷப் பண்ட் (கேப்டன்), சாய் சுதர்சன் (துணை கேப்டன்), கேஎல் ராகுல், துருவ் ஜூரெல், தேவ்தத் படிக்கல், ருதுராஜ் கெய்க்வாட், ஹர்ஷ் துபே, தனுஷ் கோடியான், மானவ் சுதார், கலீல் அகமது, குர்னூர் பிரார், அபிமன்யூ ஈஸ்வரன், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ், ஆகாஷ் தீப் உள்ளிட்டவர்கள் இடம் பெற்றுள்ளனர்.
இந்த 2 அணியிலும் சர்ஃபராஸ் கானுக்கு இடம் கிடைக்கவில்லை. இவர் முதல்தர போட்டிகளில் சிறப்பாக விளையாடி வரும் நிலையில் அவரது பெயர் இரு அணிகளிலும் ஏன் இடம்பெறவில்லை என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இது விவாதத்தை கிளப்பி உள்ளது. இதனை காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் ஷமா முகமது விமர்சனம் செய்துள்ளார்.
இதுபற்றி ஷமா முகமது தனது எக்ஸ் பக்கத்தில்,‛‛ சர்ஃபராஸ் கான் தனது குடும்பப்பெயரால் தேர்ந்தெடுக்கப்படவில்லையா! #justasking. இந்த விஷயத்தில் கவுதம் கம்பீர் எத்தகைய நிலைப்பாட்டை கொண்டுள்ளார் என்பது எங்களுக்கு தெரியும்'' என்று கூறியுள்ளார். அதாவது கவுதம் கம்பீர் பாஜகவில் எம்பியாக இருந்தார்.
அதன்பிறகு தான் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார். சர்ஃபராஸ் கான் இஸ்லாமியர் என்பதால் அவரை அணியில் எடுக்காமல் கவுதம் கம்பீர் புறக்கணித்துள்ளதாக குற்றம்சாட்டி உள்ளார். இது இப்போது விவாதத்தை கிளப்பி உள்ளது.












Click it and Unblock the Notifications