இஷான் கிஷன் காட்டில் மழைதான்.. எல்லாம் காதலி வந்த நேரம்.. கேப்டன்சியை ஏற்கும் பாக்கெட் டைனமோ!

Subscribe to Oneindia Tamil

மும்பை: ஐதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் காயம் காரணமாக சில போட்டிகளில் பங்கேற்க முடியாத சூழல் நிலவி வருவதால், அந்த அணியின் கேப்டனாக இஷான் கிஷன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கடந்த 6 மாதங்களாக இஷான் கிஷனின் கிரிக்கெட் வாழ்க்கை டாப் கியரில் உயரப் பறப்பது ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடந்த 6 மாதங்களில் எந்தவொரு வீரராலும் கனவிலும் கூட நினைக்காத வளர்ச்சியை இஷான் கிஷன் எட்டிப்பிடித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக பிசிசிஐ நிர்வாகிகளால் புறக்கணிக்கப்பட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட இஷான் கிஷன், திடீரென தாம் நம்பிய கிரிக்கெட் மூலமாகவே மீண்டும் உயரத்தை எட்டி இருக்கிறார். இந்திய அணியில் சேர்க்கப்படாததால் இஷான் கிஷன் அதிருப்தியில் இருந்தார்.

Ishan Kishan

ஆனால் திடீரென ஜார்க்கண்ட் அணிக்காக புச்சி பாபு, ரஞ்சி டிராபி, சையத் முஷ்டாக் அலி ஆகிய தொடர்களில் விளையாடினார். அதிலும் சையத் முஷ்டாக் அலி தொடரில் கேப்டன் பதவியையும் இஷான் கிஷன் ஏற்றுக்கொண்டு பொறுப்புடன் ஆடினார். இதன் மூலமாக சையத் முஷ்டாக் அலி தொடரை ஜார்க்கண்ட் அணி முதல்முறையாக வென்று வரலாறு படைத்தது.

சையத் முஷ்டாக் அலி தொடரில் இஷான் கிஷன் விஸ்வரூபம் எடுத்துவிட்டார் என்றே சொல்ல வேண்டும். அங்கிருந்து இஷான் கிஷன் வாழ்க்கை மொத்தமாக மாறிவிட்டது. திடீரென இந்திய டி20 அணிக்குள் இஷான் கிஷன் கொண்டு வரப்பட்டார். இவருக்காக ஜித்தேஷ் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் நீக்கப்பட்டனர். அதற்கேற்ப நியூசிலாந்து டி20 தொடரில் யாரும் எதிர்பார்க்காத வகையில் சதம் விளாசி சம்பவம் செய்தார்.

அங்கிருந்து டி20 உலகக்கோப்பை தொடரில் நம்பர் 3 பேட்ஸ்மேனாக அதிரடியில் விளாசி தள்ளினார். சஞ்சு சாம்சனுக்கு பின் அதிக ரன்களை விளாசிய இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார். தற்போது ஐபிஎல் தொடரில் முதல்முறையாக கேப்டன்சி பொறுப்பையும் இஷான் கிஷன் ஏற்றுள்ளார். பேட் கம்மின்ஸ் காயம் காரணமாக முதல் சில போட்டிகளில் விளையாட முடியாத சூழல் உள்ளது.

இதனால் உச்சக்கட்ட ஃபார்மில் இருக்கும் இஷான் கிஷனை கேப்டனாகவும், அபிஷேக் சர்மாவை துணைக் கேப்டனாகவும் ஐதராபாத் அணி நிர்வாகம் நியமனம் செய்துள்ளது. ஐதராபாத் அணியில் கிளாசன், டிராவிஸ் ஹெட் உள்ளிட்ட அனுபவம் வாய்ந்த வீரர்கள் இருக்கும் போதும், இந்திய வீரரான இஷான் கிஷன் கையில் கேப்டன்சி தேடி வந்திருப்பது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் இஷான் கிஷனின் காதலியின் அதிர்ஷ்டம் என்றும் ரசிகர்கள் சிலர் பேசத் தொடங்கியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+