எங்கிருந்தாலும் கேமராவின் கண்களில் சிக்கிவிடுகிறேன்.. மீம்ஸ் குறித்து மனம்திறந்த காவ்யா மாறன்!
சென்னை: ஐதராபாத் அணியின் உரிமையாளரான காவ்யா மாறன் தன்னைப் பற்றி சோசியல் மீடியாவில் வரும் மீம்ஸ் மற்றும் டிரால்ஸ் தொடர்பாக முதல்முறையாக பேசி இருக்கிறார். மைதானத்தின் எந்த இடத்தில் தாம் இருந்தாலும் கேமராவின் கண்கள் உடனடியாக திரும்பிவிடுவதாக கூறிய அவர், அதன் காரணமாக எனது ரியாக்சன்கள் மீம்ஸாக உருவாகிவிடுவதாகவும் கூறி இருக்கிறார்.
ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன். சன் டிவி நெட்வொர்க்கின் உரிமையாளராக கலாநிதி மாறனின் மகளான காவ்யா மாறன், சன் டிவியை அடுத்தக் கட்ட வளர்ச்சிக்கு எடுத்து செல்ல தயார் செய்யப்பட்டு வருகிறார். அதற்கான முதல் பணியாக சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை நிர்வகிக்கும் பொறுப்பு அளிக்கப்பட்டது.

சன்ரைசர்ஸ் வளர்ச்சி
கடந்த சில ஆண்டுகளாகவே சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வளர்ச்சிப் பாதையில் இருக்கும் சூழலில், அந்த அணி நிர்வாகம் எஸ்ஏ 20 லீக் மற்றும் இங்கிலீஷ் பிரீமியர் லீக் உள்ளிட்ட தொடர்களிலும் முதலீடு செய்ய தொடங்கி இருக்கிறது. இதன் மூலமாக காவ்யா மாறன் இந்தியாவின் மிக முக்கியமான பெண் தொழிலதிபராக வலம் வரத் தொடங்கி இருக்கிறார்.
காவ்யா மாறன் பழக்கம்
ஐதராபாத் அணி விளையாடும் போட்டிகள் அத்தனையிலும் தவறாமல் கலந்து கொண்டு ஆதரவளிக்கும் காவ்யா மாறனுக்கு இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. மற்ற அணிகளின் உரிமையாளர்களை போல் வீரர்கள் மற்றும் நிர்வாகிகளை அதிகமாக அழுத்தத்திற்கு உள்ளாக்க மாட்டார். வெற்றி, தோல்வியை எளிதாக கடக்க கூடியவர்.
காவ்யா மாறன் மீம்ஸ்
அதேபோல் காவ்யா மாறன் ஐபிஎல் போட்டியின் போது கொடுக்கும் ரியாக்சன்கள் அனைத்தும் சோசியல் மீடியாவில் மீம்ஸாக உருவாக்கப்பட்டு கிண்டல் செய்யப்படும். இதுவே அவருக்கான விளம்பரமாகவும் ஒரு கட்டத்தில் மாறிவிட்டது. இந்த நிலையில் தன்னை பற்றி மீம்ஸ் தொடர்பாக காவ்யா மாறன் மனம் திறந்திருக்கிறார்.
காவ்யா மாறன் பேட்டி
அதில், கிரிக்கெட் போட்டியின் போது எங்கள் அணி வெற்றி பெற வேண்டும் என்ற ஆர்வமும், ஆசையும் என்னுடைய எமோஷனை வெளிக்காட்டிவிடுகிறது. ஐதராபாத் மைதானத்தில் என்னால் வேறு எந்த இடத்திலும் அமர முடியாது. அதனால் கேமரா மேன் என்னை எளிதாக படம்பிடித்துவிட முடியும். ஆனால் சென்னை மற்றும் அகமதாபாத் மைதானங்களில் நான் விஐபி பாக்ஸில் அமர்ந்துவிடுவேன்.
ஐதராபாத் பற்றி காவ்யா மாறன்
ஆனால் கேமராக்கள் என்னை தேடி பிடித்துவிடுகிறது. அதுவே மீம்?ஸ் உருவாக்கப்படவும் காரணமாக மாறிவிடுவதாக கருதுகிறேன். அதுகுறித்து கவலைப்பட்டதில்லை. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் தோல்வி அதிகமாக பாதிக்கும். அந்த அளவிற்கு ஐதராபாத் அணிக்காக பணியாற்றி வருகிறோம் என்று தெரிவித்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications