புது சரித்திரம்.. மிடில் ஆர்டரில் 600 ரன்களை விளாசிய முதல் வீரர் கிளாசன்! ரிஷப் பண்ட் சாதனை உடைந்தது
ஐதராபாத்: ஐபிஎல் வரலாற்றில் ஐதராபாத் அணியின் நட்சத்திர வீரர் கிளாசன் புதிய சாதனை படைத்துள்ளார். ஒரே ஐபிஎல் சீசனில் 600 ரன்களுக்கு மேல் குவித்த முதல் மிடில் ஆர்டர் வீரர் என்ற பிரம்மாண்ட வரலாறு படைத்துள்ளார். இதனால் ஐதராபாத் அணி ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்பின் களமிறங்கிய ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 255 ரன்களை குவித்துள்ளது.

சிறப்பாக ஆடிய ஐதராபாத் அணியின் இஷான் கிஷன் 46 பந்துகளில் 3 சிக்ஸ், 8 பவுண்டரி உட்பட 79 ரன்களையும், அபிஷேக் சர்மா 22 பந்துகளில் 5 சிக்ஸ், 4 பவுண்டரி உட்பட 56 ரன்களையும், கிளாசன் 24 பந்துகளில் 5 சிக்ஸ், 2 பவுண்டரி உட்பட 51 ரன்களையும் விளாசினர். கடைசி நேரத்தில் வந்த நிதிஷ் குமார் ரெட்டி 12 பந்துகளில் 29 ரன்களை விளாசினார்.
இந்த போட்டியில் கிளாசன் 21 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். இந்த இன்னிங்ஸின் போது அவர் நடப்பு சீசனில் தனது 600 ரன்களை கடந்து புதிய சாதனையை படைத்தார். இதற்கு முன்னதாக ஐபிஎல் தொடரில் மிடில் ஆர்டரில் களம் இறங்கி ஒரே சீசனில் அதிக ரன்கள் குவித்த வீரராக இந்திய அணியின் ரிஷப் பண்ட் இருந்து வந்தார்.
ரிஷப் பண்ட் கடந்த 2018-ல் டெல்லி அணிக்காக எடுத்த 579 ரன்களே இதுவரை சாதனையாக இருந்தது. அதனை இன்று கிளாசன் மிக எளிதாக முறியடித்துள்ளார். மேலும், இந்த சீசனில் 4-வது வரிசை அல்லது அதற்குக் கீழே களம் இறங்கி 6 முறை 50-க்கும் மேல் ரன்கள் எடுத்ததன் மூலம், கிளென் மேக்ஸ்வெல் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோரின் சாதனட்டையும் கிளாசன் சமன் செய்துள்ளார்.
அதிரடி ஆட்டத்தின் மூலம் ஹென்ரிக் கிளாசன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காகத் தனது 2000-வது ஐபிஎல் ரன்களையும் கடந்து சாதனை படைத்தார். டேவிட் வார்னர், ஷிகர் தவான், அபிஷேக் சர்மா, கேன் வில்லியம்சன் ஆகியோருக்குப் பிறகு எஸ்ஆர்எச் அணிக்காக 2000 ரன்களைக் கடந்த 5-வது வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.
ஐபிஎல் 2026 தொடரில் சுழற்பந்து, வேகப்பந்து என இரண்டையும் சரிசமமாக வெளுத்து வாங்கி, 169-க்கும் அதிகமான ஸ்டிரைக் ரேட்டுடன் மிடில் ஆர்டரின் 'மிகப் பயங்கரமான பேட்ஸ்மேனாக' உருவெடுத்துள்ள கிளாசனின் இந்த அசுர ஃபார்ம், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை மீண்டும் ஒருமுறை கோப்பையை நோக்கி கம்பீரமாக அழைத்துச் செல்வதாக பார்க்கப்படுகிறது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications