அஸ்வினை விடுங்க.. வேறு முக்கிய விஷயத்தில் சொதப்பிய இந்திய அணி.. போச்சு போச்சு.. சிரிக்கும் ஆஸிகள்!
லண்டன்: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் முக்கியமான விஷயம் ஒன்றில் இந்திய அணி சொதப்பி உள்ளது.
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் போட்டியில் முதல் நாளிலேயே இந்தியா கடுமையாக திணறி உள்ளது. இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி நேற்று தொடங்கியது.
இந்திய அணியில் இன்று ரோஹித் சர்மா (கேட்ச்), ஷுப்மான் கில், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, அஜிங்க்யா ரஹானே, ஸ்ரீகர் பாரத் (வி.கே), ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், உமேஷ் யாதவ், முகமது ஷமி, முகமது சிராஜ் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

அதேபோல் ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுசாக்னே, ஸ்டீவன் ஸ்மித், டிராவிஸ் ஹெட், கேமரூன் கிரீன், அலெக்ஸ் கேரி (வாரம்), பாட் கம்மின்ஸ் (கேட்ச்), மிட்செல் ஸ்டார்க், நாதன் லியான், ஸ்காட் போலண்ட் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.
பிட்ச் எப்படி? : லண்டன் ஓவல் மைதானத்தில் இந்த ஆட்டம் நடக்கிறது. பிட்ச் அதிக புற்களோடு பச்சை நிறத்தில் காட்சி அளிக்கிறது.
இதனால் பவுலிங்கிற்கு.. முக்கியமாக பாஸ்ட் பவுலிங்கிற்கு ஆதரவாக பிட்ச் இருக்கும் என்று கருதப்படுகிறது. இந்த ஆட்டத்தில் பிட்ச் ஸ்பின் பவுலிங்கிற்கு உதவாது என்பதால் ஒரே ஒரு ஸ்பின் பவுலருடன் இந்திய அணி களமிறங்கி உள்ளது.
அந்த வீரர் ஜடேஜா. இந்திய அணியில் இந்த முறை அஸ்வின் எடுக்கப்படவில்லை. டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் நம்பர் 1 ஸ்பின் பவுலராக இருந்தும் கூட அவர் அணியில் எடுக்கப்படவில்லை. காரணம்.. ஜடேஜாவிடம் பேட்டிங் ஆப்ஷனும் உள்ளது.
மேட்ச்: தற்போது வரை முதல்நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டிற்கு 327 ரன்களை இழந்து ஆடி வருகிறது. முதல் நாளில் 90 ஓவர்களுக்கு பதிலாக 85 ஓவர்கள் மட்டுமே வீச முடிந்தது. நேற்று ஆட்டத்தின் தொடக்கத்திலேயே உஸ்மான் குவாஜா சிராஜ் பந்தில் டக் அவுட் ஆனார். இந்திய அணியின் பவுலிங் முதல் இரண்டு செஷன் சிறப்பாக இருந்தது. ஆனால் அதன்பின் மோசமாக சொதப்ப தொடங்கியது.
முதல் செஷன் முழுக்க இந்திய அணி இரண்டு பாஸ்ட் பவுலர்கள்.. சிராஜ் - ஷமி ஆகியோரை மட்டுமே பயன்படுத்தியது. இவர்கள் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு கடுமையாக பிரஷர் கொடுத்தனர். முதல் செஷன் முடிந்த பின் இந்திய அணி சார்பாக ஷரத்துல் தாக்கூர், உமேஷ் யாதவ் பவுலிங் செய்தனர்.
இதில் சிராஜ் போக ஷரத்துல் ஷமி தலா ஒரு விக்கெட்டுகளை எடுத்தனர். இந்த போட்டியில் அஸ்வினை எடுக்காதது கடும் விமர்சனங்களை சந்தித்துள்ளது. அதிலும் டிராவிஸ் ஹெட் 146, ஸ்மித் 95 ரன்கள் எடுத்துள்ள நிலையில் அஸ்வின் இல்லாமல் இந்திய அணி திணறுவதாக கடும் விமர்சனங்கள் வைக்கப்பட்டு உள்ளன.
உலகின் நம்பர் 1 டெஸ்ட் பவுலர், டெஸ்ட் போட்டிகளில் ஜாம்பவான், லெப்ட் பேட்ஸ்மேன்கள் அதிகம் உள்ள ஆஸ்திரேலிய அணிக்கு சிம்மசொப்பனமாக இருக்கும் அஸ்வினை இந்திய அணி டீமில் எடுக்காதது கடும் விமர்சனங்களை சந்தித்துள்ளது. கூடுதல் பேட்டிங் ஆப்ஷனுக்காக இந்திய அணி இப்படி ஷரத்துல், ஜடேஜாவை எடுத்து அஸ்வினை நீக்கி உள்ளது.

வெயில்: : ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் அஸ்வினை நீக்கியதை தவிர்த்து இன்னொரு முக்கியமான விஷயம் ஒன்றில் இந்திய அணி சொதப்பி உள்ளது. அதன்படி அங்கே வரும் நாட்களில் வெயில் அடிக்கும் என்று கூறப்பட்டு உள்ளது.
இதனால் 3வது நாளில் இருந்து பிட்ச் மேலும் காய்ந்து போய் ஸ்பின் பவுலிங் செய்ய சாதகமாக மாறும். அதோடு பாஸ்ட் பவுலர்கள் அந்த கண்டிஷனில் பவுலிங் செய்வது சிரமமான காரியம் ஆகும். இதை கணிக்க இந்திய அணி தவறி உள்ளது. இந்திய அணியில் இரண்டு ஸ்பின் பவுலர்கள் இருந்திருந்தால்.. கடைசி 3 நாட்கள் அணிக்கு உதவியாக இருந்திருக்கும்.
ஆனால் இந்திய அணி அந்த டிரிக்கை மிஸ் செய்துள்ளது. கடந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் மழை காலத்தில் அஸ்வினை எடுத்து கோலி தவறு செய்தது போல.. வெயில் காலத்தில் ஒரு ஸ்பின் பவுலருடன் சென்று ரோஹித் தவறு செய்துள்ளார்.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications