மும்பை அணியை ஆதிக்கம் செய்யும் சிஎஸ்கே.. வான்கடேவிலேயே சோலி முடிஞ்ச்.. சாதனை லிஸ்ட்டை பாருங்க!
மும்பை: மும்பை அணியின் வரலாற்றில் 103 ரன்கள் வித்தியாசத்த்ல் தோல்வி அடைவது இதுவே முதல்முறையாகும். இதற்கு முன்பாக 2013ல் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 87 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி தோல்வி அடைந்ததே மோசமான சாதனையாக இருந்தது. அந்த சாதனையை சிஎஸ்கே அணிக்கு எதிராக மும்பை அணி முறியடித்துள்ளது.
ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி 103 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 207 ரன்களை குவித்தது. சிறப்பாக ஆடிய சஞ்சு சாம்சன் 54 பந்துகளில் 101 ரன்களை விளாசி அசத்தினார்.

இதன்பின் களமிறங்கிய மும்பை அணி 19 ஓவர்களில் வெறும் 104 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி இருக்கிறது. சிஎஸ்கே அணி தரப்பில் அகீல் ஹொசைன் 4 விக்கெட்டுகளையும், நூர் அஹ்மத் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதன் காரணமாக சிஎஸ்கே அணியிடம் 103 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி மோசமான தோல்வியை அடைந்துள்ளது.
கடைசியாக சிஎஸ்கே மற்றும் மும்பை அணிகள் விளையாடியுள்ள 11 போட்டிகளில், 8ல் சிஎஸ்கே அணி வென்றுள்ளது. 3 போட்டிகளில் மட்டுமே மும்பை அணி வென்றுள்ளது. இதனால் சிஎஸ்கே அணி எல் கிளாசிக்கோ ரைவல்ரியில் ஆதிக்கம் செய்து வருவதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் ஐபிஎல் தொடரில் மும்பை அணியை அதிக முறை வீழ்த்திய அணியாக சிஎஸ்கே பெயர் பெற்றுள்ளது.
மொத்தமாக 40 போட்டிகளில் விளையாடியுள்ள சிஎஸ்கே அணி 19 போட்டிகளில் மும்பை அணியை வீழ்த்தி இருக்கிறது. அதேபோல் சிஎஸ்கே அணிக்கு எதிரான மும்பை அணியின் குறைந்தபட்ச ஸ்கோராகவும் 103 ரன்கள் அமைந்துள்ளது. இதற்கு முன்பாக 2021ல் 136 ரன்கள் எடுத்ததே குறைவான ஸ்கோராக அமைந்தது. அதேபோல் வான்கடே மைதானத்தில் 2015ஆம் ஆண்டு 39 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி ஆர்சிபியிடம் தோல்வி அடைந்தது.
வான்கடே மைதானத்தில் மும்பை அணியின் தோல்வியில் இதுதான் அதிக ரன்கள் வித்தியாசத்தில் பெற்ற தோல்வியாக இருந்தது. அந்த சாதனையை சிஎஸ்கே அணி தகர்த்துள்ளது. அதேபோல் ஐபிஎல் வரலாற்றில் ஒருமுறை கூட மும்பை அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த வரலாறே இல்லை. அதனை சிஎஸ்கே அணி சாதித்து வரலாறு படைத்திருக்கிறது.
-
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு?












Click it and Unblock the Notifications