‛லவ் யூ இந்தியா’.. நியூசிலாந்து செல்லும் முன் வில்லியம்சன் கூறிய வார்த்தை! அந்த மனசு இருக்கே! செம

Subscribe to Oneindia Tamil

சென்னை: உலககோப்பை அரையிறுதி போட்டியில் இந்தியாவுடன் நியூசிலாந்து தோற்றது. இதன்மூலம் அந்த அணியின் உலககோப்பை கனவு சிதைந்த நிலையில் இந்தியாவில் இருந்து தாயகம் திரும்பும் முன் அந்நாட்டின் கேப்டன் கேன் வில்லியம்சன் ‛ஹார்ட்' விட்டு கூறிய வார்த்தைகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

50 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் போட்டியின் லீக் சுற்று முடிவில் இந்தியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா அணிகள் தகுதி பெற்றன. இதையடுத்து 2 அரையிறுதி போட்டிகள் நடந்தன. முதலாவது அரையிறுதி போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடந்தது.

Love You India, after the lost of semi final Kane Williamson says before leaving India

இதில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் ஷர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 397 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் விராட் கோலி தனது 50வது ஒருநாள் போட்டி சதத்தை அடித்து சச்சின் தெண்டுல்கர் சாதனையை முறியடித்தார்.

ஸ்ரேயாஸ் அய்யர் 105 ரன்களும், சுப்மன் கில் 80 ரன்களும், ரோகித் ஷர்மா 47 ரன்களும், கேஎல் ராகுல் 39 ரன்களும் விளாசியிருந்தனர். இதையடுத்து இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணி 48.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 327 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் இந்தியா 70 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முதல் அணியாக நுழைந்து அசத்தியது.

அதோடு கடந்த ஆண்டு நடந்த உலககோப்பை கிரிக்கெட் போட்டியின்போது அரையிறுதி போட்டியில் தோற்றதற்கு நியூசிலாந்து அணியை இந்தியா பழிவாங்கியது. இந்நிலையில் தான் நியூசிலாந்து அணி வீரர்கள் இந்தியாவில் இருந்து சொந்த நாட்டுக்கு நேற்று புறப்பட்டு சென்றனர். இதற்கு முன்பாக நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் இந்தியா குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை செய்துள்ளார்.

அந்த பதிவில் ஒரு போட்டோ உள்ளது. அதில் வில்லியம்சன், சவுத்தீ, டிரென்ட் போல்ட் உள்ளனர். மேலும் அந்த பதிவில் வில்லியம்சன், ‛‛இந்திய பயணம் என்பது சில விஷயங்களில் நம்பமுடியாத வகையில் இருந்தது. நல்ல கற்றல் அனுபவமாகவும், சிறந்த விருந்தோம்பல், நல்ல சூழல், அனைவரிடமும் இருந்து கிடைக்க அதிகமான ஆதரவு உள்ளிட்டவையுடன் இந்த பயணம் அமைந்தது. அடுத்த முறை இந்தியா வரும்வரை குட் பை. லவ் யூ இந்தியா' எனக்கூறி இந்திய தேசியக்கொடியுடன் நீலம் மற்றும் சிவப்பு நிற ஹார்ட் இமோஜியை அவர் பகிர்ந்துள்ளார்.

இது ஒருபுறம் இருக்க நாளை உலககோப்பை கிரிக்கெட்டின் பைனல் நடைபெற உள்ளது. இதில் 2வது அரையிறுதி போட்டியில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்திய ஆஸ்திரேலியா அணி இந்தியாவை எதிர்கொள்ள உள்ளது. இந்த போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்று நாளை உலககோப்பையை வெல்லும் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்து காத்து கொண்டுள்ளனர். அதேநேரத்தில் ஆஸ்திரேலியா அணியும் எளிதில் விட்டுக்கொடுக்காது. இந்த உலககோப்பை தொடரில் முதலில் மோசமாக விளையாடிய ஆஸ்திரேலியா அதன்பிறகு எழுச்சி பெற்று பைனல் வரை வந்துள்ளது. இதனால் அந்த அணியும் கோப்பை வெல்ல இந்தியாவை போல் முழுமூச்சுடன் போராடும் என்பதால் நாளைய போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+