வினி ராமனை கூட விடலையே.. மேக்ஸ்வெல் மனைவியிடமும் வேலையை காட்டிய விஷமிகள்.. விஷயம் கைமீறுதே!
சென்னை; இந்தியாவிற்கு எதிராக ஆஸ்திரேலியா அணி வென்றதை அடுத்து கிளென் மேக்ஸ்வெல் மனைவி வினி ராமனை சில விஷமிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2023 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்துள்ளது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 240 ரன்களை 50 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுகளை இழந்து எடுத்தது.
அதன்பின் இறங்கிய ஆஸ்திரேலியா அணி எளிதாக வெறும் 4 விக்கெட்டை இழந்து 241 ரன்களை எடுத்தது. வெறும் 43 ஓவரில் ஆஸ்திரேலியா அணி இலக்கை அடைந்து வென்றது. இதன் மூலம் 6வது முறையாக ஆஸ்திரேலியா அணி கோப்பையை வென்றது.
இந்தியாவிற்கு எதிராக ஆஸ்திரேலியா அணி வென்றதை அடுத்து கிளென் மேக்ஸ்வெல் மனைவி வினி ராமனை சில விஷமிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

யார் இந்த வினி ராமன்:. கிளென் மேக்ஸ்வெல் திருமணம் செய்து கொண்ட இந்திய பெண்மணி வினி ராமன் தமிழர் ஆவார். அவர் இந்து மதத்தை சேர்ந்தவர். இந்தியாவை பூர்வீகமாக கொண்ட வினி ராமனை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கிளென் மேக்ஸ்வெல் திருமணம் செய்து கொண்டார். கடந்த 2020ம் வருடம் பிப்ரவரி 21ம் தேதி இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது.
இவர்கள் இருவரும் இப்போது அல்ல கடந்த 2013லேயே சந்தித்துவிட்டனர். ஆம் அப்போதில் இருந்து இவர்கள் இருவரும் நண்பர்களாக இருந்துள்ளனர். முதலில் வினி ராமனை கிளென் மேக்ஸ்வெல்தான் சந்தித்து பேசி இருக்கிறார். அடிக்கடி சந்தித்த இவர்கள் நண்பர்களாக பழகி இருக்கின்றனர். இந்த நிலையில் வினி மீதான தனது விருப்பத்தை கிளென் மேக்ஸ்வெல் 2017ல் தெரிவித்துள்ளார். அதை வினி ஏற்றுக்கொண்ட நிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
( இந்த 2 பேர் எதுக்கு டீம்ல இருந்தாங்கன்னே தெரியலையே.. ரோஹித் தந்த இடம்.. டீமிற்கே எதிராக போய்விட்டது!)
கடுமையான விமர்சனம்; இந்த நிலையில்தான் வினி ராமனை சில விஷமிகள் விமர்சனம் செய்து வருகின்றனர். ஆஸ்திரேலியாவின் வெற்றியை கொண்டாடி அவர் போஸ்ட் செய்ததை விமர்சனம் செய்து வருகின்றனர். நீங்கள் இந்தியர்.. நீங்கள் எப்படி இப்படி செய்யலாம் என்று கூறி கடுமையாக வினியை விமர்சனம் செய்து வருகின்றனர்.
அதோடு வினி ராமனுக்கு எதிராக சிலர் பாலியல் ரீதியாகவும் மிரட்டல்களை விடுத்து வருகின்றனர். சில விஷமிகளின் இந்த செயல் கடுமையான விமர்சனங்களை சந்தித்துள்ளது. ஆஸ்திரேலியா வென்ற நிலையில் டிராவிஸ் ஹெட் மீது இந்தியாவை சேர்ந்த நெட்டிசன்கள் சிலர் கடுமையாக விமர்சனங்களை வைத்து வருகின்றனர். டிராவிஸ் ஹெட் சிக்ஸ், பவுண்டரி என்று அவர் கடைசி கட்டத்தில் ஆடியது இந்திய அணிக்கு எதிராக திரும்பியது. நேற்று 120 பந்துகள் பிடித்த அவர் 15 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களை அடித்தனர். இதன் மூலம் 137 ரன்கள் எடுத்தார்.

டிராவிஸ் ஹெட்: அந்த வகையில் டிராவிஸ் ஹெட்டிற்கு எதிராக.. அவரின் இன்ஸ்டாகிராமில் கடுமையான புகார்களை அடுக்க தொடங்கி உள்ளனர். அதிலும் அவரின் குடும்பத்தை தாக்கி எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். அவரின் குடும்பத்திற்கு பாலியல் ரீதியாகவும் மிரட்டல் விடுத்து வருகின்றனர்.
பாலியல் ரீதியாக ஹெட் மனைவி மற்றும் அவரின் குழந்தைகளுக்கும் மிரட்டல் விடுத்து வருகின்றனர் . சில விஷமமான இந்தியர்களின் இந்த வேலை கடுமையான விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது, விமர்சனங்களையும் சந்தித்து உள்ளது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications