இந்த 2 பேர் எதுக்கு டீம்ல இருந்தாங்கன்னே தெரியலையே.. ரோஹித் தந்த இடம்.. டீமிற்கே எதிராக போய்விட்டது!
சென்னை; இந்திய அணியில் 2 வீரர்கள் ஆடிய விதம் கடுமையான விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. அவர்கள் 2 பேர் ஏன் அணியில் இருந்தார்கள் என்றே சொல்லும் அளவிற்கு மோசமாக ஆடி உள்ளனர்.
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2023 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்துள்ளது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 240 ரன்களை 50 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுகளை இழந்து எடுத்தது.
அதன்பின் இறங்கிய ஆஸ்திரேலியா அணி எளிதாக வெறும் 4 விக்கெட்டை இழந்து 241 ரன்களை எடுத்தது. வெறும் 43 ஓவரில் ஆஸ்திரேலியா அணி இலக்கை அடைந்து வென்றது. இதன் மூலம் 6வது முறையாக ஆஸ்திரேலியா அணி கோப்பையை வென்றது.

சூர்ய குமார் யாதவ் ஆட்டம்: இந்த தொடரில் சூர்யா குமார் யாதவ் ஆடிய விதம் கடுமையான விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. தொடக்கத்தில் சில போட்டிகளில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அப்போதெல்லாம் அவர் சரியாக ஆடவில்லை. சரி பாயிண்ட் வரட்டும் பாயிண்ட் வரட்டும் என்று ரசிகர்களும் காத்து இருந்தனர்.
அதற்கு ஏற்றபடியே கடைசி போட்டியிலும் நேற்று சூர்ய குமார் யாதாவிற்கு பிளான் போட்டபடி அமைந்தது . 40 ஓவருக்கு முன் அவர் இறங்கவில்லை. கடைசி கட்டத்தில்தான் இறங்கினார். நினைத்து இருந்தால் அதிரடியாக ஆடி இருக்கலாம். குறைந்தது ஒரு 30-40 ரன்களை அடித்து இருந்தால் ஆட்டத்தை சூர்ய குமார் யாதவ் மாற்றி இருப்பார்.
( உஷாராகிவிட்டாரே.. கப்பை கையில் தந்ததும் மோடி தந்த ரியாக்சன்.. குழம்பிய கம்மின்ஸ்.. நடந்தது என்ன?)
ஆனால் அவருக்கு சாதகமான சூழ்நிலை இருந்தும் கூட நேற்று சூர்ய குமார் யாதவ் 28 பந்துகளில் 18 ரன்கள் எடுத்தார். மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதிலும் நேற்று சூர்ய குமாருக்கு முன்பாக ஜடேஜா இறங்கினார். இதன் அர்த்தம் ரோஹித் சூர்ய குமாரை முன்கூட்டியே இறக்க நினைக்கவில்லை என்று அர்த்தம்.
அப்படி இருக்கும் பேட்ஸ்மேன் ஒருவரை ஏன் 11ல் சேர்க்க வேண்டும்? ஒரு 20 ஓவர்கள் ஒருநாள் போட்டியில் ஆட முடியாதவரை ஏன் அணியில் எடுக்க வேண்டும்? சஞ்சு சாம்சனை எடுத்து இருக்கலாமே என்று நெட்டிசன்கள் விமர்சனம் வைத்து வருகின்றனர்.

சிராஜ் பவுலிங்: அதேபோல் சிராஜ் பவுலிங்கும் மோசமாக இருந்தது. இந்த சீசன் முழுக்கவே அவர் சரியாக ஆடவில்லை. ஆப்கானிஸ்தானுக்கு எதிராக மட்டுமே சிராஜ் சரியாக பவுலிங் செய்தார். வங்கதேசத்திற்கு எதிராகவும் சிராஜ் கொஞ்சம் சிறப்பாக பவுலிங் செய்தார். இலங்கைக்கு எதிராக 3 விக்கெட் டாப் பேட்டிங் ஆர்டரை மொத்தமாக சிரித்தார். ஆனால் அதன்பின் மற்ற போட்டிகளில் அவர் சரியாக பவுலிங் செய்யவில்லை.
கடந்த நியூசிலாந்து மேட்சில் அவரின் பவுலிங் மோசமாக இருந்தது. விக்கெட் எடுக்கவில்லை என்பதை தாண்டி அவர் அதிக அளவில் ரன்களை கொடுத்தார். ரன்களை வாரி வழங்கினார். அணி இக்கட்டான நேரத்தில் இருக்கும் போது கூட சிராஜ் பிரஷர் போடவில்லை. இதனால் சிராஜை நீக்கிவிட்டு அஸ்வினை அணியில் எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வந்தன.
ஆனால் நேற்று நடந்த இறுதிப்போட்டியில் கூட சிராஜ் எடுக்கப்பட்டார். ஆனால் அவரின் பவுலிங் நேற்று மோசமாக இருந்தது. நேற்று 7 ஓவர்களை வீசிய அவர் 45 ரன்களை கொடுத்தார். 1 விக்கெட் கூட கடைசியில் எடுத்தார். ஆனால் அவரின் லைன், லென்த் என்று எதுவும் சரியாக இல்லை.












Click it and Unblock the Notifications