உஷாராகிவிட்டாரே.. கப்பை கையில் தந்ததும் மோடி தந்த ரியாக்சன்.. குழம்பிய கம்மின்ஸ்.. நடந்தது என்ன?
சென்னை: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான உலகக் கோப்பை கிரிக்கெட் பைனல் ஆட்டத்தில் நேற்று இந்திய அணி தோல்வி அடைந்தது. இதையடுத்து ஆஸ்திரேலியா கேப்டன் பாட் கம்மின்ஸுக்கு பிரதமர் மோடி கோப்பையை கொடுத்தார். இந்த கோப்பை வழங்கும் நிகழ்வில் நடந்த சம்பவம் ஒன்று கவனம் பெற்றுள்ளது.
இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான உலகக் கோப்பை தீவிரமாக நடந்து முடிந்துள்ளது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பைனலில் இந்தியா தோல்வி அடைந்துள்ளது . 2003 உலகக் கோப்பையில் இந்தியா ஆஸ்திரேலியாவிடம் பைனலில் தோல்வி அடைந்தது. அந்த நாளை கிரிக்கெட் பார்க்கும் யாரும் மறக்க மாட்டார்கள்.

இந்தியா படுதோல்வி; அதன்பின் தற்போது மீண்டும் 2023ல் இந்தியா ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்துள்ளது. ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இந்தியா படுதோல்வியை அடைந்து இந்தியா உலகக் கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்துள்ளது. முதலில் இறங்கிய இந்திய அணி எல்லா விக்கெட்டுகளையும் இழந்து 240 ரன்களை எடுத்தது . முக்கியமாக பேட்டிங்கில் ரோஹித், கோலி, ராகுல் தவிர வேறு யாரும் சரியாக ஆடவில்லை. பவுலிங்கில் ஷமி, பும்ரா தொடக்கத்தில் மொத்தமாக 3 விக்கெட்டுகளை எடுத்தனர்.
சிராஜ் ஒரு விக்கெட் கூட எடுக்காமல் கடுமையாக ரன்களை வாரி வழங்கினார். இந்த உலகக் கோப்பை முழுக்க அவர் சரியாக ஆடவில்லை. கூடுதலாக ட்யூ வேறு சேர்ந்துகொண்டது . இதனால் பவுலர்கள் பலரும் லைன், லென்த் கூட தவறாக போட்டனர்.
பிரஷர் காரணமாக.. லைன், லென்த் இரண்டிலும் வீரர்கள் சொதப்ப தொடங்கினர். முக்கியமாக சிராஜ், பும்ரா, குல்தீப் கூட லைன் மற்றும் லென்த் இரண்டிலும் தவறு செய்ய தொடங்கினார். அவர்களின் இந்த சொதப்பல் காரணமாக ஹெட் விக்கெட்டை கடைசி வரை எடுக்க முடியவில்லை. இன்று ஹெட் மட்டும் 137 ரன்கள் எடுக்க ஆஸ்திரேலியா அணி எளிதாக 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது
மோடி செய்தது என்ன?: இதையடுத்து ஆஸ்திரேலியா கேப்டன் பாட் கம்மின்ஸுக்கு பிரதமர் மோடி கோப்பையை கொடுத்தார். இந்த கோப்பை வழங்கும் நிகழ்வில் நடந்த சம்பவம் ஒன்று கவனம் பெற்றுள்ளது. நேற்று பாட் கம்மின்ஸ் மேடையில் இருந்த போது அவரிடம் மோடி கோப்பையை வழங்கினார். அதன்பின் அவரிடம் கை கொடுத்தார். பின் பக்கம் வெடிகள் வெடித்தது. மோடி போட்டோவிற்கு போஸ் கொடுக்காமல் அங்கிருந்து உடனே வெளியேறினார்.
சட்டென மோடி கிளம்பியதை பார்த்து.. கம்மின்ஸ் குழம்பினார். மற்ற வீரர்கள் வரும் வரை மோடி நிற்கவில்லையே. எல்லா வீரர்களுடனுடன் போஸ் கொடுக்கவில்லையே என்பது போல கம்மின்ஸ் உற்று பார்த்தார். ஆனால் கீழே சென்ற பிரதமர் மோடி அதன்பின் ஆஸ்திரேலியா வீரர்களை சந்தித்தார்.
மோடி ரியாக்சன்: கீழே சென்ற பிரதமர் மோடி.. அங்கே இருந்த ஆஸ்திரேலியா வீரர்களிடம் கைகொடுத்தார். கடந்த 2003 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்தது.
அப்போது சரத் பவார் பிசிசிஐ இயக்குனராக இருந்தார். அவர் கோப்பையை கொடுக்க மேடைக்கு வந்த போது ரிக்கி பாண்டிங் அவரிடம்.. என் கையில் கோப்பையை கொடு என்பது போல கையை சைகை செய்து அவரை அவமானப்படுத்தினார். அதன்பின் மேடையில் இருந்தும் அவரை நகர்த்தி தள்ளி கொண்டு செல்வார்கள். அது பெரிய அளவில் விவாதத்திற்கு உள்ளானது.
நேற்று மோடிக்கும் அப்படி நடந்து இருக்குமோ என்ற விவாதம் ஏற்பட்டது. ஆனால் மோடி இதை தவிர்த்து மேடையில் இருந்து முன்கூட்டியே கீழே இறங்கினார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications