பழிவாங்கும் பிசிசிஐ.. அசிங்கப்படுத்திய அகர்கர்.. ஃபீனிக்ஸ் பறவையாக சம்பவம் செய்த ஸ்ரேயாஸ் ஐயர்!
மும்பை: ஐபிஎல் தொடரில் நாளுக்கு நாள் ஸ்ரேயாஸ் ஐயரின் வளர்ச்சி உச்சத்திற்கு சென்று கொண்டே இருக்கிறது. கடந்த ஆண்டு கேகேஆர் அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் கோப்பையை வென்ற போதும், அவருக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை. இதனால் கேகேஆர் அணி நிர்வாகத்தால் தக்க வைக்கப்படாமல், மொத்தமாக வெளியேற்றப்பட்டார்.
அதேபோல் அண்மையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் தேர்வு செய்யப்படவில்லை. அதற்கு தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர், ஸ்ரேயாஸ் ஐயர் ஸ்விங் பிட்சில் பேட்டிங் செய்ய சிரமப்படுவார். அவரின் ரன்கள் அனைத்து ஃபிளாட் மற்றும் ஸ்பின் பிட்சிலேயே வந்திருக்கிறது என்று அவமானப்படுத்தினார்.

பழிவாங்கும் பிசிசிஐ
இதனால் ஸ்ரேயாஸ் ஐயர் கடந்த சில ஆண்டுகளாகவே பிசிசிஐ மற்றும் ஐபிஎல் நிர்வாகிகளால் தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பட்டு வருகிறார். இதற்கு 2023ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடர் தோல்விக்கு பின், பிரதமர் நரேந்திர மோடிக்கு கை கொடுக்காமல் தவிர்த்தார். இந்த சம்பவத்திற்கு பின் தொடர்ச்சியாக ஸ்ரேயாஸ் ஐயர் பிசிசிஐ நிர்வாகத்தால் பழிவாங்கப்பட்டு வருகிறார்.
ஃபீனிக்ஸ் பறவையாக ஸ்ரேயாஸ்
முதலில் இந்திய டெஸ்ட் அணியில் இருந்து நீக்கப்பட்ட அவர், அடுத்த சில நாட்களில் பிசிசிஐ ஒப்பந்தத்தில் இருந்தும் நீக்கப்பட்டார். ஆனால் எத்தனை தடைகள் வந்தாலும், ஸ்ரேயாஸ் ஐயர் ஃபீனிக்ஸ் பறவையாக எழுந்து வருகிறார். நேற்றைய ஆட்டத்தில் மும்பை அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் அணி அபார வெற்றியை பெற்றது.
500 ரன்கள்
இதன் மூலமாக பஞ்சாப் அணி புள்ளிப் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறி அசத்தி இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் ஸ்ரேயாஸ் ஐயர் 14 போட்டிகளில் விளையாடி 514 ரன்களை விளாசி அசத்தி இருக்கிறார். கடந்த சீசனில் ஸ்ரேயாஸ் ஐயர் எந்த பங்களிப்பையும் அளிக்கவில்லை என்று விமர்சித்த நிலையில், அந்த விமர்சனங்களுக்கு பஞ்சாப் அணியின் கேப்டனாக பதிலடி கொடுத்துள்ளார்.
கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர்
அதேபோல் ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டன் செய்த 3 அணிகளையும் இறுதிப்போட்டிக்கு அழைத்து சென்றுள்ளார். டெல்லி, கொல்கத்தா மற்றும் பஞ்சாப் ஆகிய 3 அணிகளையும் இறுதிப்போட்டிக்கு அழைத்து சென்று அசத்தியுள்ளார். இதன் மூலமாக ஹர்திக் பாண்டியா மற்றும் சுப்மன் கில்லை விடவும் சிறந்த கேப்டன் என்பதை ஸ்ரேயாஸ் ஐயர் நிரூபித்து காட்டி இருக்கிறார்.
நிரூபித்து காட்டிய ஸ்ரேயாஸ் ஐயர்
இந்தியா ஏ அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் பிசிசிஐ நிர்வாகிகளால் தயார் செய்யப்பட்டு வந்தார். ஆனால் பிரதமர் நரேந்திர மோடியுடனான சர்ச்சை, பிசிசிஐ நிர்வாகிகளுடனான சர்ச்சை என்று அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கியதால், ஸ்ரேயாஸ் ஐயர் இந்திய அணியில் இருந்து வெளியேற்றப்பட்டார். ஆனாலும் கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் ஸ்ரேயாஸ் ஐயர் நிரூபித்து வருவதால், ரசிகர்கள் கொண்டாட தொடங்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications