தோனி கையில் இருந்த வாட்ச் மதிப்பு ரூ.2.35 கோடியாம்.. அப்படி என்னப்பா இருக்கு அந்த Rolex வாட்சில்?
மும்பை: மும்பை வான்கடே மைதானத்திற்கு இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் தோனி வந்த போது கட்டியிருந்த வாட்ச்சின் மதிப்பு ரூ.2.35 கோடி என்று தெரிய வந்துள்ளது. அந்த வாட்ச் ரோலக்ஸ் டேடோனா ஜிராஃபி ரக மாடல் என்பதும், அந்த வாட்சில் வைரங்கள் பதிக்கப்பட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது.
அண்மையில் சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜுன் டெண்டுல்கரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக மும்பை வந்த தோனி, அன்று மாலை வான்கடே மைதானத்தில் நடந்த இந்தியா - இங்கிலாந்து இடையிலான அரையிறுதி ஆட்டத்தை நேரில் கண்டு ரசித்தார். வான்கடே மைதானம் வந்த தோனியை அம்பானி தொடங்கி ஜெய் ஷா, ரோகித் சர்மா உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் சந்தித்தனர்.

சாதாரணமாக தோனி ஒரு போட்டியை நேரில் பார்க்க வர மாட்டார். இதனால் ரசிகர்கள் மத்தியில் தோனியின் வீடியோக்கள் சோசியல் மீடியாவில் டிரெண்டாகியது. எந்தவித ஆடம்பரமும் இல்லாமல் தோனி அந்த போட்டியை நேரில் கண்டு ரசித்ததாக ரசிகர்கள் பேசி வந்தனர். இப்படியான சூழலில் தோனி கைகளில் கட்டியிருந்த வாட்ச் சோசியல் மீடியாவில் பேசுபொருளாகி இருக்கிறது.
தோனி கைகளில் கட்டியிருந்த வாட்ச் ரோலக்ஸ் டேடோனா ஜிராஃபி ரக வாட்ச்சாகும். இது 1963ஆம் ஆண்டு கார் ரேஸ் ஓட்டுநர்களுக்காக தயாரிக்கப்பட்டது என்பது தெரிய வந்துள்ளது. மொத்தமாக இந்த வாட்ச் 40MM ரோஸ் கோல்ட் நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எந்தப் பக்கம் இருந்து பார்த்தாலும் இதன் மதிப்பு மின்னும் என்று சொல்லலாம். ஏனென்றால் வாட்ச் நடுப் பகுதி வைரங்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த வாட்ச்சின் தற்போதைய மதிப்பாக ரூ.2.35 கோடி என்று சர்வதேச ஆன்லைன் மார்க்கெட்டான க்ரோனா 24ல் லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது. இதனை ஆர்டர் செய்தால், இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான ஷிப்பிங் கட்டணம் மட்டும் ரூ.10 ஆயிரத்தை கடந்து செல்லும். இதையடுத்து தோனி எளிய வாழ்க்கையை வாழவில்லை என்று ரசிகர்கள் பேசத் தொடங்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications