'OG is Back' ஏப்ரல் 23ல் சிஎஸ்கே அணிக்கு திரும்பும் தோனி.. சர்பராஸ் கான் இடத்தில் விளையாடுவாரா?
சென்னை: சிஎஸ்கே அணியின் ஜாம்பவான் வீரர் தோனி காயம் காரணமாக ஓய்வில் இருக்கும் சூழலில், ஏப்ரல் 23ஆம் தேதி மும்பை அணிக்கு எதிரான போட்டியின் போது அணிக்கு திரும்புவார் என்று தெரிய வந்துள்ளது. இதனால் சிஎஸ்கே பேட்டிங் வரிசையில் தோனி எந்த இடத்தில் விளையாடுவார் என்ற விவாதம் தொடங்கி இருக்கிறது.
ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி 5 போட்டிகளில் விளையாடி 2 வெற்றி, 3 தோல்வியுடன் புள்ளிப் பட்டியலில் 8வது இடத்தில் இருக்கிறது. முதல் 3 போட்டிகளிலும் சிஎஸ்கே அணி தோல்வி அடைந்த சூழலில், கடைசியாக ஆடிய 2 போட்டிகளிலும் அபார வெற்றியை பெற்றுள்ளது. அதேபோல் சிஎஸ்கே அணி ஒரு வழியாக காம்பினேஷனையும் சிறப்பாக செட் செய்துவிட்டது.

அகீல் ஹொசைனின் வரவால் நூர் அஹ்மத் ஃபார்முக்கு திரும்பிவிட்டார். அதேபோல் டிவால்ட் பிரெவிஸ் வரவால் மிடில் ஆர்டர் கூடுதல் பலம் பெற்றுள்ளது. இன்னும் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மட்டும் ஃபார்முக்கு திரும்பிவிட்டால், சிஎஸ்கே அணியின் வெற்றி பயணத்தை தடுக்க முடியாது என்று ரசிகர்கள் நம்பிக்கையுடன் இருக்கின்றனர்.
இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் ஒரிஜினல் கேங்ஸ்டரான தோனி காயத்தில் இருந்து குணமடைந்து கம்பேக் கொடுக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. சிஎஸ்கே அணி அடுத்ததாக ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ஏப்ரல் 18ஆம் தேதி விளையாட உள்ளது. இந்தப் போட்டிக்கு தோனி வருவது கடினம் என்று சொல்லப்படுகிறது.
ஆனால் ஏப்ரல் 23ஆம் தேதி வான்கடே மைதானத்தில் நடக்கும் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் தோனி களமிறங்க உள்ளதாக தெரிய வந்துள்ளது. தோனி சிஎஸ்கே அணிக்கு திரும்பும் பட்சத்தில் எந்த பேட்டிங் வரிசையில் விளையாடுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேபோல் விக்கெட் கீப்பிங் பொறுப்பு இல்லாமல் தோனி களமிறங்கப் போவதில்லை.
இதனால் சஞ்சு சாம்சன் இனி பேட்ஸ்மேனாக ஆடுவார் என்று தெரிகிறது. மறுபக்கம் சர்ஃபராஸ் கான் இடத்தில் தோனி களமிறங்க உள்ளதாக பேசப்படுகிறது. ஆனால் சிஎஸ்கே அணியின் ரசிகர்களோ, இதன்பின் காம்பினேஷனை மாற்ற வேண்டாம் என்ற வாதத்தை முன் வைத்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications