"துரோகம்.." திடீரென கேப்டனை மாற்றிய மும்பை அணி.. ஒரு மணி நேரத்தில் 4 லட்சம் ரசிகர்கள் காலி!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மும்பை அணியின் புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியா அறிவிக்கப்பட்ட ஒரு மணி நேரத்தில் அந்த அணி 4 லட்சம் பாலோயர்ஸ்களை இழந்துள்ளது.

கடந்த 2013ஆம் ஆண்டில் மும்பை கேப்டனாக செயல்பட்டு வந்த ரோஹித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். சில வாரங்கள் முன்பு தான் ஹர்திக் பாண்டியாவை குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருந்து மும்பை இந்தியன்ஸ் அணி மாற்றம் செய்து இருந்தது.

 Mumbai Indians loses 400k followers within 1 hour of announcing new Capitan

இந்நிலையில், ஹர்திக் பாண்டியா கேப்டனாக அறிவிக்கப்பட்டு இருக்கிறார். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஐந்து முறை ஐபிஎல் கோப்பை வென்று கொடுத்த கேப்டன் ரோஹித் சர்மா நீக்கப்பட்டுள்ளார்.

புது கேப்டன்: ஹர்திக் பாண்டியா 2022 ஐபிஎல் தொடருக்கு முன் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டு, குஜராத் டைட்டன்ஸ் அணியில் இணைந்தார். அங்கே அவருக்கு கேப்டன் பதவி அளிக்கப்பட்ட நிலையில், அவர் கோப்பையையும் வென்று கொடுத்தார். இந்தாண்டும் கூட ஐபிஎல் இறுதிப் போட்டி வரை குஜராத் அணியை அழைத்துச் சென்றார்.

இந்தச் சூழலில் தான் அவர் குஜராத் அணியில் இருந்து நேரடி விற்பனை மூலம் மும்பை அணிக்கு வந்தார். அவர் மும்பை டீமுக்கு வந்த போதே, புதிய கேப்டனாக அவர் அறிவிக்கப்படுவார் எனப் பேச்சு எழுந்தது. இந்தச் சூழலில் தான் மும்பை அணியின் புதய கேப்டனாக ஹர்திக் நியமிக்கப்பட்டுள்ளார்.

4 லட்சம்: ஐபிஎல் 2024 சீசனுக்கு முன்னதாக ஹர்திக் பாண்டியாவை புதிய கேப்டனாக மும்பை அணி அறிவித்துள்ள நிலையில், அந்த அணி ஒரு மணி நேரத்தில் 4 லட்சம் பாலோயர்ஸ்களை இழந்துள்ளது. கடந்த டிசம்பர் 15ஆம் தேதி அணியின் புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியா அறிவிக்கப்பட்டார். கடந்த 2013ஆம் ஆண்டு முதல் மும்பை அணியை ரோஹித் வழிநடத்தும் நிலையில், அவரது தலைமையில் மும்பை அணி 5 முறை பட்டத்தை வென்றுள்ளது.

ஐபிஎல் வரலாற்றில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மட்டுமே இதுவரை 5 முறை சாம்பியன் பட்டங்களை வென்றுள்ளது. 2013இல் இருந்து மும்பை அணியை ரோஹித் வழிநடத்துகிறார். இருப்பினும், சர்வதேச டி20 போட்டிகளைப் பொறுத்தவரை , 2022 டி20 உலகக் கோப்பை அரையிறுதி தோல்விக்குப் பிறகு ரோஹித் இந்தியாவுக்காக விளையாடவில்லை. இந்தச் சூழலில் தான் அணி நிர்வாகம் அடுத்தாண்டு ஐபிஎல் தொடரில் மும்பை அணியை ரோஹித் வழிநடத்த மாட்டார் என அறிவித்துள்ளது.

இது குறித்து மும்பை இந்தியன்ஸ் அணியின் குளோபல் பர்பாமன்ஸ் தலைவர் ஜெயவர்தனே கூறுகையில், "எதிர்காலத்தில் வரும் சவால்களை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சச்சின், ஹர்பஜன், ரிக்கி பாண்டிங், ரோஹித் சர்மா என மும்பை அணிக்கு எப்போதும் மிகச் சிறந்த தலைமை கிடைத்துள்ளது. எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு அடுத்தாண்டு முதல் ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக பொறுப்பேற்பார்" என்று கூறப்பட்டுள்ளது.

என்ன சொல்கிறார்: மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஐபிஎல் தொடரில் அறிமுகமான ஹர்திக் பாண்டியா 2 ஆண்டுகள் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கேப்டனாக இருந்து மீண்டும் அணிக்குத் திரும்பினார். ஐபிஎல் 2022 சீசன் இறுதிப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸை தோற்கடித்து குஜராத் டைட்டன்ஸ் பட்டத்தை வென்றது. இறுதிப் போட்டியில் ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி 34 ரன்கள் எடுத்து ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பாண்டியா 2023 சீசனிலும் சிறப்பாகச் செயல்பட்டார். இந்த தொடரிலும் ஹர்திக் பாண்டியாவின் தலைமையில் இறுதிப்போட்டி வரை குஜராத் டைட்டன்ஸ் சென்றது. இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸிடம் குஜராத் தோல்வியடைந்து, இரண்டாம் இடத்தோடு நிறைவு செய்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+