அர்ஜுன் டெண்டுல்கரை லக்னோ அணிக்கு டிரேட் செய்த மும்பை.. இனி சச்சின் ஆதரவு பல்தான்ஸ்க்கு இருக்குமா?
மும்பை: ஐபிஎல் தொடரில் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் மும்பை அணிக்காக விளையாடி வரும் நிலையில், அவரை லக்னோ அணிக்கு டிரேட் செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் விளையாடும் போட்டிகளின் போது, சச்சின் டெண்டுல்கரின் ஆதரவு எந்த அணிக்கு இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் 10 அணிகளும் ரீடெய்ன் செய்த வீரர்களின் பட்டியலை நவம்பர் 15ஆம் தேதி வெளியிட வேண்டும் என்று ஐபிஎல் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அதற்கு முன்பாக டிரேட் செய்ய விரும்பினால், ஒவ்வொரு அணிகளும் ஐபிஎல் நிர்வாகம் மூலமாக மாற்று அணிகளை அணுகி வீரர்களை டிரேட் செய்து கொள்ளலாம்.

ஐபிஎல் மினி ஏலத்திற்கு பின் டிரேட் செய்ய முடியும் என்றாலும், எந்த அணியின் கைகளிலும் பர்ஸ் தொகை இருக்காது. இதனால் ரீடெய்ன் செய்த வீரர்களின் பட்டியலை வெளியிடுவதற்கு முன்பாகவே டிரேட் செய்ய விரும்பி வருகின்றன. அந்த வகையில் ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் சிஎஸ்கே அணிக்கு டிரேட் செய்யப்பட உள்ளார்.
சிஎஸ்கே அணியின் ஜாம்பவான் வீரரான ரவீந்திர ஜடேஜா ராஜஸ்தான் அணிக்கு டிரேட் செய்யப்பட உள்ளார். நாளை இந்த ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஒரு டிரேட்டை முடித்துள்ளது. அதாவது லக்னோ அணியின் ஷர்துல் தாக்கூரை மும்பை அணி டிரேட் மூலமாக வாங்கி இருக்கிறது.
மறுபக்கம் மும்பை அணிக்காக விளையாடிய சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் லக்னோ அணிக்கு டிரேட் செய்யப்பட்டுள்ளார். இது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் மும்பை அணிக்காக விளையாடிய சச்சின் டெண்டுல்கர், தற்போது அந்த அணியின் சிறப்பு ஆலோசகராக பணியாற்றி வருகிறார்.
இப்படியான சூழலில் அர்ஜுன் டெண்டுல்கர் லக்னோ அணிக்கு டிரேட் செய்யப்பட்டுள்ளார். மும்பை அணியில் இனி அர்ஜுன் டெண்டுல்கர் விளையாடுவதற்கு வாய்ப்புகள் குறைவு என்பதால், அர்ஜுன் டெண்டுல்கர் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்று பார்க்கப்படுகிறது. இது மும்பை ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications