வசமாக மாட்டிகிட்டாரே.. ரோஹித் சர்மாவை வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்! PRக்கு ஜிஎஸ்டி போட சொல்லி கிண்டல்
சென்னை: இந்திய அணியின் மூத்த வீரர் ரோஹித் சர்மாவை நெட்டிசன்கள் கடுமையாக கிண்டல் செய்து வருகின்றனர். அவர் பிஆர் வேலைகளுக்காக செய்யும் செலவிற்கு ஜிஎஸ்டி போட வேண்டும் என்று கூறி நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.
இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன்சியில் இருந்து ரோஹித் சர்மா தற்காலிகமாக விலகி உள்ளார். அவரின் விலகலை தொடர்ந்து நெட்டிசன்கள் பலரும் அவருக்கு ஆதரவாக போஸ்ட் செய்து வருகின்றனர் . இதில் கவனிக்க வேண்டிய விஷயம் பெரும்பாலும் இவை எல்லாம் பி. ஆர் பதிவுகள்.

உதாரணமாக பிரபல ஐடிக்களிடம் ரோஹித் சர்மாவின் மனைவி மற்றும் மேனேஜர் சஜ்தே சர்மா பணம் கொடுத்து ரோஹித் சர்மாவிற்கு ஆதரவாக போஸ்ட் செய்ய சொன்னதாக புகார்கள் வைக்கப்படுகின்றன. முக்கியமாக வித்யா பாலனின் டிவிட்டர் ஐடி பொதுவாக பிஆர் வேலைகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும்.
அதில் கூட ரோஹித் சர்மாவிற்கு ஆதரவாக போஸ்ட் வந்துள்ளது. பொதுவாக ஒரு வீரரை யார் வேண்டுமானாலும் ஆதரிக்கலாம். ஆனால் ரோஹித் சர்மா தியாகி.. அவர் இல்லை என்றால் இந்திய அணி இல்லை என்ற தொனியில் வரக்கூடிய போஸ்டுகள் இது உண்மையில் வரக்கூடிய போஸ்ட்டா இல்லை பிஆர் வேலையா என்ற கேள்விகளை எழுப்பி உள்ளது.

இதை எல்லாம் விட.. ரோஹித் சர்மாவிற்கு ஆதரவாக போஸ்ட் செய்த வித்யா பாலனின் டிவிட்டர் ஐடி ரோஹித் சர்மாவை பின்தொடர கூட இல்லை. அதேபோல் இன்னும் சில வடஇந்திய நடிகர் நடிகைகள் ரோஹித் சர்மாவிற்கு ஆதரவாக போஸ்ட் செய்துள்ளனர். ஆனால் அவர்களும் கூட ரோஹித் சர்மாவை பின்தொடரவில்லை.
இதுவரை கிரிக்கெட் பற்றி போஸ்ட் செய்யாதவர்கள் கூட அவரை ஆதரித்து செய்யும் போஸ்டுகள் காரணமாக அவர்.. பிஆர் பயன்படுத்தி இப்படி எல்லாம் செய்வதாக நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

கிண்டல்:
இப்படிப்பட்ட நிலையில்தான் இந்திய அணியின் மூத்த வீரர் ரோஹித் சர்மாவை நெட்டிசன்கள் கடுமையாக கிண்டல் செய்து வருகின்றனர். அவர் பிஆர் வேலைகளுக்காக செய்யும் செலவிற்கு ஜிஎஸ்டி போட வேண்டும் என்று கூறி நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.
உதாரணமாக நிர்மலா சீதாராமன் பெயரில் தொடங்கப்பட்டு உள்ள பொய்யான கணக்குகள்.. அவரின் பிஆர் வேலைகளுக்கு ஜிஎஸ்டி போட வேண்டும். அதேபோல் அவரை விக்கெட் எடுத்த ஆஸ்திரேலிய வீரர்களுக்கு ஜிஎஸ்டி போட வேண்டும் என்று நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
மேலும் ஜிஎஸ்டி செலவு மூலம் வங்கி பரிமாற்ற செலவை ரோஹித் சர்மா மீறிவிட்டதாக எச்டிஎப்சி கணக்கில் தொடங்கப்பட்டு உள்ள பரோடி கணக்கு கிண்டல் செய்துள்ளது. இப்படி நெட்டிசன்கள் பலரும் ரோஹித் சர்மாவை கிண்டல் செய்து வருகின்றனர்.

ரோஹித் சர்மா கிண்டல் மேல் கிண்டல்:
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரை இந்திய அணி கிட்டத்தட்ட இழந்துள்ளது. இதற்கு முந்தைய பார்டர் கவாஸ்கர் தொடர்களில் வரிசையாக வென்ற இந்திய அணி ரோஹித் தலைமையில் மிக மோசமாக தோல்வி அடைந்துள்ளது. ரோஹித் சர்மாவின் கேப்டன்சி இந்த தொடரில் மிக மோசமாக அமைந்துள்ளது. அவருக்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன.
இந்த தொடரில் இந்த முறை.. இந்தியா வென்றது ஒரே ஒரு மேட்ச். அது பும்ரா கேப்டனாக இருந்த மேட்ச். இதை தவிர மற்ற ஆட்டங்களில் வரிசையாக இந்திய அணி தோல்வி அடைந்துவிட்டது. ஒரு கேப்டனாக.. பேட்ஸ்மேனாக அடுத்தடுத்து மிக மோசமாக ரோஹித் சர்மா சொதப்பி விட்டார். இதன் காரணமாகவே நெட்டிசன்கள் ரோஹித் சர்மாவை கிண்டல் செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications